Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

பிரசங்கி 7:7

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் பிரசங்கி பிரசங்கி 7 பிரசங்கி 7:7

பிரசங்கி 7:7
இடுக்கணானது ஞானியையும் பைத்தியக்காரனாக்கும்; பரிதானம் இருதயத்தைக் கெடுக்கும்.

Tamil Indian Revised Version
இடுக்கண் ஞானியையும் பைத்தியக்காரனாக்கும்; லஞ்சம் இருதயத்தைக் கெடுக்கும்.

Tamil Easy Reading Version
எவராவது போதுமான பணம் கொடுப்பதானால் ஞானமுள்ளவர்கள் தம் ஞானத்தை மறக்கத் தயார். அப்பணம் அவனது புரிந்துகொள்ளுதலை அழித்துவிடும்.

திருவிவிலியம்
⁽இடுக்கண் ஞானியையும்␢ பைத்தியக்காரனாக்கும்.␢ கைக்கூலி உள்ளத்தைக் கறைப்படுத்தும்.⁾

Ecclesiastes 7:6Ecclesiastes 7Ecclesiastes 7:8

King James Version (KJV)
Surely oppression maketh a wise man mad; and a gift destroyeth the heart.

American Standard Version (ASV)
Surely extortion maketh the wise man foolish; and a bribe destroyeth the understanding.

Bible in Basic English (BBE)
The wise are troubled by the ways of the cruel, and the giving of money is the destruction of the heart.

Darby English Bible (DBY)
Surely oppression maketh a wise man mad, and a gift destroyeth the heart.

World English Bible (WEB)
Surely extortion makes the wise man foolish; and a bribe destroys the understanding.

Young’s Literal Translation (YLT)
Surely oppression maketh the wise mad, And a gift destroyeth the heart.

பிரசங்கி Ecclesiastes 7:7
இடுக்கணானது ஞானியையும் பைத்தியக்காரனாக்கும்; பரிதானம் இருதயத்தைக் கெடுக்கும்.
Surely oppression maketh a wise man mad; and a gift destroyeth the heart.

כִּ֥יkee
הָעֹ֖שֶׁקhāʿōšeqha-OH-shek
יְהוֹלֵ֣לyĕhôlēlyeh-hoh-LALE
חָכָ֑םḥākāmha-HAHM
וִֽיאַבֵּ֥דwîʾabbēdvee-ah-BADE
אֶתʾetet
לֵ֖בlēblave
מַתָּנָֽה׃mattānâma-ta-NA

இணை வசனம்

Deuteronomy 16:19
நியாயத்தைப் புரட்டாதிருப்பாயாக; முகதாட்சிணியம் பண்ணாமலும், பரிதானம் வாங்காமலும் இருப்பாயாக; பரிதானம் ஞானிகளின் கண்களைக் குருடாக்கி, நீதிமான்களின் நியாயங்களைத் தாறுமாறாக்கும்.

Exodus 23:8
பரிதானம் வாங்காதிருப்பாயாக; பரிதானம் பார்வையுள்ளவர்களைக் குருடாக்கி, நீதிமான்களின் வார்த்தைகளைப் புரட்டும்.

Proverbs 17:23
துன்மார்க்கன், நீதியின் வழியைப் புரட்ட, மடியிலுள்ள பரிதானத்தை வாங்குகிறான்.

Deuteronomy 28:65
அந்த ஜாதிகளுக்குள்ளே உனக்கு இளைப்பாறுதல் இராது; உன் உள்ளங்கால்கள் தங்கித் தரிக்க இடமும் இராது; அங்கே கர்த்தர் உனக்குத் தத்தளிக்கிற இருதயத்தையும், சோர்ந்துபோகிற கண்களையும், மனச்சஞ்சலத்தையும் கொடுப்பார்.

Deuteronomy 28:33
உன் நிலத்தின் கனியையும், உன் பிரயாசத்தின் எல்லாப் பலனையும் நீ அறியாத ஜனங்கள் புசிப்பார்கள்; நீ சகலநாளும் ஒடுக்கப்பட்டும் நொறுக்கப்பட்டும் இருப்பாய்.

Isaiah 33:15
நீதியாய் நடந்து, செம்மையானவைகளைப் பேசி, இடுக்கண் செய்வதால் வரும் ஆதாயத்தை வெறுத்து, பரிதானங்களை வாங்காதபடிக்குத் தன் கைகளை உதறி, இரத்தஞ்சிந்துவதற்கான யோசனைகளைக் கேளாதபடிக்குத் தன் செவியை அடைத்து, பொல்லாப்பைக் காணாதபடிக்குத் தன் கண்களை மூடுகிறவனெவனோ,

Isaiah 1:23
உன் பிரபுக்கள் முரடரும் திருடரின் தோழருமாயிருக்கிறார்கள்; அவர்களில் ஒவ்வொருவனும் பரிதானத்தை விரும்பி, கைக்கூலியை நாடித்திரிகிறான்; திக்கற்ற பிள்ளையின் நியாயத்தை விசாரியார்கள்; விதவையின் வழக்கு அவர்களிடத்தில் ஏறுகிறதில்லை.

Ecclesiastes 4:1
இதற்குப் பின்பு நான் சூரியனுக்குக்கீழே செய்யப்படும் கொடுமைகளையெல்லாம் சிந்தித்துப்பார்த்தேன்; இதோ ஒடுக்கப்பட்டவர்களின் கண்ணீரைக் கண்டேன், அவர்களைத் தேற்றுவாரில்லை; ஒடுக்குகிறவர்கள் பட்சத்தில் பெலமிருந்தது, அப்படியிருந்தும் தேற்றுவாரில்லை.

Proverbs 17:8
பரிதானம் வாங்குகிறவர்களின் பார்வைக்கு அது இரத்தினம்போலிருக்கும்; அது நோக்கும் திசையெல்லாம் காரியம் வாய்க்கும்.

1 Samuel 12:3
இதோ, இருக்கிறேன்; கர்த்தரின் சந்நிதியிலும் அவர் அபிஷேகம்பண்ணி வைத்தவருக்கு முன்பாகவும் என்னைக்குறித்துச் சாட்சி சொல்லுங்கள்; நான் யாருடைய எருதை எடுத்துக்கொண்டேன்? யாருடைய கழுதையை எடுத்துக்கொண்டேன்? யாருக்கு அநியாயஞ்செய்தேன்? யாருக்கு இடுக்கண்செய்தேன்? யார் கையில் பரிதானம் வாங்கிக்கொண்டு கண்சாடையாயிருந்தேன்? சொல்லுங்கள்; அப்படியுண்டானால் அதை உங்களுக்குத் திரும்பக் கொடுப்பேன் என்றான்.

1 Samuel 8:3
ஆனாலும் அவனுடைய குமாரர் அவன் வழிகளில் நடவாமல், பொருளாசைக்குச் சாய்ந்து, பரிதானம் வாங்கி, நியாயத்தைப் புரட்டினார்கள்.


Tags இடுக்கணானது ஞானியையும் பைத்தியக்காரனாக்கும் பரிதானம் இருதயத்தைக் கெடுக்கும்
பிரசங்கி 7:7 Concordance பிரசங்கி 7:7 Interlinear பிரசங்கி 7:7 Image