Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 5:26

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் உபாகமம் உபாகமம் 5 உபாகமம் 5:26

உபாகமம் 5:26
நாங்கள் கேட்டதுபோல, அக்கினியின் நடுவிலிருந்து பேசுகிற ஜீவனுள்ள தேவனுடைய சத்தத்தை மாம்சமானவர்களில் யாராவது கேட்டு உயிரோடிருந்தது உண்டோ?

Tamil Indian Revised Version
நாங்கள் கேட்டதுபோல, அக்கினியின் நடுவிலிருந்து பேசுகிற ஜீவனுள்ள தேவனுடைய சத்தத்தை மாம்சமானவர்களில் யாராவது கேட்டு உயிரோடிருந்தது உண்டா?

Tamil Easy Reading Version
நாம் கேட்டதுபோல் அக்கினியின் நடுவே இருந்து பேசுகிற ஜீவனுள்ள தேவனுடைய சத்தத்தை வேறு யாராவது கேட்டு உயிரோடிருந்ததுண்டோ!

திருவிவிலியம்
நெருப்பிலிருந்து பேசுகின்ற வாழும் கடவுளின் குரலை நாங்கள் கேட்டும் உயிரோடு இருப்பதுபோல், கடவுளது குரலைக் கேட்டும் உயிரோடு இருக்கின்ற மானிடன் எவனாவது உண்டா?

Deuteronomy 5:25Deuteronomy 5Deuteronomy 5:27

King James Version (KJV)
For who is there of all flesh, that hath heard the voice of the living God speaking out of the midst of the fire, as we have, and lived?

American Standard Version (ASV)
For who is there of all flesh, that hath heard the voice of the living God speaking out of the midst of the fire, as we have, and lived?

Bible in Basic English (BBE)
For what man is there in all the earth, who, hearing the voice of the living God as we have, out of the heart of the fire, has been kept from death?

Darby English Bible (DBY)
For who is there of all flesh, that has heard the voice of the living God speaking from the midst of the fire, as we, and has lived?

Webster’s Bible (WBT)
For who is there of all flesh that hath heard the voice of the living God speaking out of the midst of the fire, as we have, and lived?

World English Bible (WEB)
For who is there of all flesh, that has heard the voice of the living God speaking out of the midst of the fire, as we have, and lived?

Young’s Literal Translation (YLT)
For who of all flesh `is’ he who hath heard the voice of the living God speaking out of the midst of the fire like us — and doth live?

உபாகமம் Deuteronomy 5:26
நாங்கள் கேட்டதுபோல, அக்கினியின் நடுவிலிருந்து பேசுகிற ஜீவனுள்ள தேவனுடைய சத்தத்தை மாம்சமானவர்களில் யாராவது கேட்டு உயிரோடிருந்தது உண்டோ?
For who is there of all flesh, that hath heard the voice of the living God speaking out of the midst of the fire, as we have, and lived?

כִּ֣יkee
מִ֣יmee
כָלkālhahl
בָּשָׂ֡רbāśārba-SAHR
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
שָׁמַ֣עšāmaʿsha-MA
קוֹל֩qôlkole
אֱלֹהִ֨יםʾĕlōhîmay-loh-HEEM
חַיִּ֜יםḥayyîmha-YEEM
מְדַבֵּ֧רmĕdabbērmeh-da-BARE
מִתּוֹךְmittôkmee-TOKE
הָאֵ֛שׁhāʾēšha-AYSH
כָּמֹ֖נוּkāmōnûka-MOH-noo
וַיֶּֽחִי׃wayyeḥîva-YEH-hee

இணை வசனம்

Deuteronomy 4:33
அக்கினியின் நடுவிலிருந்து பேசுகிற தேவனுடைய சத்தத்தை நீ கேட்டதுபோல யாதொரு ஜனமாவது கேட்டதும் உயிரோடிருந்ததும் உண்டோ.

Romans 3:20
இப்படியிருக்க, பாவத்தை அறிகிற அறிவு நியாயப்பிரமாணத்தினால் வருகிறபடியால், எந்த மனுஷனும் நியாயப்பிரமாணத்தின் கிரியையினாலே தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கப்படுவதில்லை.

1 Thessalonians 1:9
ஏனெனில், அவர்கள்தாமே எங்களைக்குறித்து, உங்களிடத்தில் நாங்கள் அடைந்த பிரவேசம் இன்னதென்பதையும், ஜீவனுள்ள மெய்யான தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு, நீங்கள் விக்கிரகங்களை விட்டு தேவனிடத்திற்கு மனந்திரும்பினதையும்,

2 Corinthians 6:16
தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது? நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள் என்று, தேவன் சொன்னபடி, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே.

Acts 14:15
மனுஷரே, ஏன் இப்படிச் செய்கிறீர்கள். நாங்களும் உங்களைப் போலப்பாடுள்ள மனுஷர்தானே; நீங்கள் இந்த வீணான தேவர்களைவிட்டு, வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின ஜீவனுள்ள தேவனிடத்திற்குத் திரும்பவேண்டுமென்று உங்களுக்குப் பிரசங்கிக்கிறோம்.

Matthew 26:63
இயேசுவோ பேசாமலிருந்தார். அப்பொழுது, பிரதான ஆசாரியன் அவரை நோக்கி: நீ தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? அதை எங்களுக்குச் சொல்லும்படி ஜீவனுள்ள தேவன்பேரில் உன்னை ஆணையிட்டுக் கேட்கிறேன் என்றான்.

Daniel 6:26
என் ராஜ்யத்தின் ஆளுகைக்குள் எங்குமுள்ளவர்கள் யாவரும் தானியேலின் தேவனுக்கு முன்பாக நடுங்கிப் பயப்படவேண்டுமென்று என்னாலே தீர்மானம்பண்ணப்படுகிறது; அவர் ஜீவனுள்ள தேவன். அவர் என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறவர்; அவருடைய ராஜ்யம் அழியாதது; அவருடைய கர்த்தத்துவம் முடிவுபரியந்தமும் நிற்கும்.

Jeremiah 10:10
கர்த்தரோ மெய்யான தெய்வம்; அவர் ஜீவனுள்ள தேவன், நித்திய ராஜா; அவருடைய கோபத்தினால் பூமி அதிரும்; அவருடைய உக்கிரத்தை ஜாதிகள் சகிக்கமாட்டார்கள்.

Isaiah 40:6
பின்னும் கூப்பிட்டுச் சொல்லென்று ஒரு சத்தம் உண்டாயிற்று; என்னத்தைக் கூப்பிட்டுச் சொல்வேனென்றேன். அதற்கு: மாம்சமெல்லாம் புல்லைப்போலவும், அதின் மேன்மையெல்லாம் வெளியின் பூவைப்போலவும் இருக்கிறது.

Psalm 84:2
என் ஆத்துமா கர்த்தருடைய ஆலயப்பிராகாரங்களின்மேல் வாஞ்சையும் தவனமுமாயிருக்கிறது; என் இருதயமும் என் மாம்சமும் ஜீவனுள்ள தேவனை நோக்கிக் கெம்பீர சத்தமிடுகிறது.

Psalm 42:2
என் ஆத்துமா தேவன்மேல், ஜீவனுள்ள தேவன்மேலேயே தாகமாயிருக்கிறது; நான் எப்பொழுது தேவனுடைய சந்நிதியில் வந்து நிற்பேன்?

Joshua 3:10
பின்பு யோசுவா: ஜீவனுள்ள தேவன் உங்கள் நடுவிலே இருக்கிறார் என்பதையும், அவர் கானானியரையும் ஏத்தியரையும் ஏவியரையும் பெரிசியரையும் கிர்காசியரையும் எமோரியரையும் எபூசியரையும் உங்களுக்கு முன்பாகத் துரத்திவிடுவார் என்பதையும், நீங்கள் அறிந்துகொள்வதற்கு அடையாளமாக:

Genesis 6:12
தேவன் பூமியைப் பார்த்தார்; இதோ அது சீர்கெட்டதாயிருந்தது; மாம்சமான யாவரும் பூமியின்மேல் தங்கள் வழியைக் கெடுத்துக்கொண்டிருந்தார்கள்.


Tags நாங்கள் கேட்டதுபோல அக்கினியின் நடுவிலிருந்து பேசுகிற ஜீவனுள்ள தேவனுடைய சத்தத்தை மாம்சமானவர்களில் யாராவது கேட்டு உயிரோடிருந்தது உண்டோ
உபாகமம் 5:26 Concordance உபாகமம் 5:26 Interlinear உபாகமம் 5:26 Image