உபாகமம் 28:20
என்னைவிட்டு விலகி நீ செய்துவருகிற உன் துர்க்கிரியைகளினிமித்தம் சீக்கிரத்தில் கெட்டுப்போய் அழியுமட்டும், நீ கையிட்டுச் செய்கிறதெல்லாவற்றிலும் கர்த்தர் உனக்குச் சாபத்தையும் சஞ்சலத்தையும் கேட்டையும் வரப்பண்ணுவார்.
Tamil Indian Revised Version
என்னைவிட்டு விலகி நீ செய்துவருகிற உன் தீயசெயல்களின் காரணமாக சீக்கிரத்தில் கெட்டுப்போய் அழியும்வரை, நீ கையிட்டுச் செய்கிற எல்லாவற்றிலும் கர்த்தர் உனக்கு சாபத்தையும், குழப்பத்தையும், அழிவையும் வரச்செய்வார்.
Tamil Easy Reading Version
“நீ தீமைசெய்து கர்த்தரை விட்டுவிலகிப் போனால், பிறகு அவர் உனக்கு தீமைகள் ஏற்படும்படிச் செய்வார். நீ செய்கிற எல்லாவற்றிலும் உனக்கு விரக்தியும், கஷ்டமும் ஏற்படும்படிச் செய்வார். நீ விரைவாகவும் முழுவதுமாகவும் அழிக்கப்படும்வரை கர்த்தர் இதனைத் தொடர்ந்து செய்வார். அவர் இதனைச் செய்வார். ஏனென்றால், நீ அவரை விட்டு விலகிப்போனாய்.
திருவிவிலியம்
நீ மேற்கொள்ளும் அனைத்துச் செயல்களிலும், நீ கெட்டு விரைவில் அழியுமட்டும், ஆண்டவர் உன்மீது சாபமும், குழப்பமும் பேரழிவுமே வரச்செய்வார். ஏனெனில், உன் பொல்லாத செயல்களினால் என்னைவிட்டு விலகிவிட்டாய்.
King James Version (KJV)
The LORD shall send upon thee cursing, vexation, and rebuke, in all that thou settest thine hand unto for to do, until thou be destroyed, and until thou perish quickly; because of the wickedness of thy doings, whereby thou hast forsaken me.
American Standard Version (ASV)
Jehovah will send upon thee cursing, discomfiture, and rebuke, in all that thou puttest thy hand unto to do, until thou be destroyed, and until thou perish quickly; because of the evil of thy doings, whereby thou hast forsaken me.
Bible in Basic English (BBE)
The Lord will send on you cursing and trouble and punishment in everything to which you put your hand, till sudden destruction overtakes you; because of your evil ways in which you have been false to me.
Darby English Bible (DBY)
Jehovah will send upon thee cursing, confusion, and rebuke, in all the business of thy hand which thou doest, until thou be destroyed and until thou perish quickly, because of the wickedness of thy doings, whereby thou hast forsaken me.
Webster’s Bible (WBT)
The LORD shall send upon thee cursing, vexation, and rebuke, in all that thou undertakest to perform, until thou shalt be destroyed, and until thou shalt perish quickly; because of the wickedness of thy doings by which thou hast forsaken me.
World English Bible (WEB)
Yahweh will send on you cursing, confusion, and rebuke, in all that you put your hand to do, until you are destroyed, and until you perish quickly; because of the evil of your doings, by which you have forsaken me.
Young’s Literal Translation (YLT)
`Jehovah doth send on thee the curse, the trouble, and the rebuke, in every putting forth of thy hand which thou dost, till thou art destroyed, and till thou perish hastily, because of the evil of thy doings `by’ which thou hast forsaken Me.
உபாகமம் Deuteronomy 28:20
என்னைவிட்டு விலகி நீ செய்துவருகிற உன் துர்க்கிரியைகளினிமித்தம் சீக்கிரத்தில் கெட்டுப்போய் அழியுமட்டும், நீ கையிட்டுச் செய்கிறதெல்லாவற்றிலும் கர்த்தர் உனக்குச் சாபத்தையும் சஞ்சலத்தையும் கேட்டையும் வரப்பண்ணுவார்.
The LORD shall send upon thee cursing, vexation, and rebuke, in all that thou settest thine hand unto for to do, until thou be destroyed, and until thou perish quickly; because of the wickedness of thy doings, whereby thou hast forsaken me.
| יְשַׁלַּ֣ח | yĕšallaḥ | yeh-sha-LAHK | |
| יְהוָ֣ה׀ | yĕhwâ | yeh-VA | |
| בְּ֠ךָ | bĕkā | BEH-ha | |
| אֶת | ʾet | et | |
| הַמְּאֵרָ֤ה | hammĕʾērâ | ha-meh-ay-RA | |
| אֶת | ʾet | et | |
| הַמְּהוּמָה֙ | hammĕhûmāh | ha-meh-hoo-MA | |
| וְאֶת | wĕʾet | veh-ET | |
| הַמִּגְעֶ֔רֶת | hammigʿeret | ha-meeɡ-EH-ret | |
| בְּכָל | bĕkāl | beh-HAHL | |
| מִשְׁלַ֥ח | mišlaḥ | meesh-LAHK | |
| יָֽדְךָ֖ | yādĕkā | ya-deh-HA | |
| אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER | |
| תַּֽעֲשֶׂ֑ה | taʿăśe | ta-uh-SEH | |
| עַ֣ד | ʿad | ad | |
| הִשָּֽׁמֶדְךָ֤ | hiššāmedkā | hee-sha-med-HA | |
| וְעַד | wĕʿad | veh-AD | |
| אֲבָדְךָ֙ | ʾăbodkā | uh-vode-HA | |
| מַהֵ֔ר | mahēr | ma-HARE | |
| מִפְּנֵ֛י | mippĕnê | mee-peh-NAY | |
| רֹ֥עַ | rōaʿ | ROH-ah | |
| מַֽעֲלָלֶ֖יךָ | maʿălālêkā | ma-uh-la-LAY-ha | |
| אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER | |
| עֲזַבְתָּֽנִי׃ | ʿăzabtānî | uh-zahv-TA-nee |
இணை வசனம்
Malachi 2:2
நீங்கள் கேளாமலும் என் நாமத்துக்கு மகிமையைச் செலுத்தும்படி இதைச் சிந்தியாமலுமிருந்தால், நான் உங்களுக்குள்ளே சாபத்தை அனுப்பி, உங்கள் ஆசீர்வாதங்களையும் சாபமாக்குவேன்; ஆம், நீங்கள் அதைச் சிந்தியாமற்போனதினால் அவைகளைச் சபித்தேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
Isaiah 66:15
இதோ, தம்முடைய கோபத்தை உக்கிரமாகவும், தம்முடைய கடிந்துகொள்ளுதலை அக்கினிஜுவாலையாகவும் செலுத்தக் கர்த்தர் அக்கினியோடும் வருவார், பெருங்காற்றைப்போன்ற தம்முடைய இரதங்களோடும் வருவார்.
Isaiah 51:20
உன் குமாரர் மூர்ச்சித்து விழுந்தார்கள்; அவர்கள், வலையிலே சிக்குண்ட கலைமானைப்போல, எல்லா வீதிகளின் முனையிலும், கர்த்தருடைய உக்கிரத்தினாலும், உன்தேவனுடைய கண்டிதத்தினாலும் நிறைந்தவர்களாய்க் கிடக்கிறார்கள்.
Deuteronomy 4:26
நீங்கள் யோர்தானைக் கடந்து சுதந்தரிக்கப்போகிற தேசத்தில் இராமல், சீக்கிரமாய் முற்றிலும் அழிந்துபோவீர்கள் என்று, இந்நாளில் உங்களுக்கு விரோதமாய் வானத்தையும் பூமியையும் சாட்சி வைக்கிறேன்; நீங்கள் அதிலே நெடுநாள் இராமல் நிர்மூலமாக்கப்படுவீர்கள்.
Isaiah 30:17
நீங்கள் மலையுச்சியின்மேல் ஒரு கம்பத்தைப்போலவும், மேட்டின்மேல் ஒரு காடியைப்போலவும் மீந்திருக்குமட்டாக, ஒருவன் பயமுறுத்த ஆயிரம்பேரும், ஐந்துபேர் பயமுறுத்த நீங்கள் அனைவரும் ஓடிப்போவீர்கள்.
Joshua 23:16
உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த இந்த நல்ல தேசத்திலிருந்து உங்களை நிர்மூலமாக்குமட்டும், கர்த்தர் உங்கள்மேல் சகல தீமையான காரியங்களையும் வரப்பண்ணுவார்; கர்த்தருடைய கோபம் உங்கள்மேல் பற்றியெரியும்; அவர் உங்களுக்குக் கொடுத்த நல்ல தேசத்திலிருந்து நீங்கள் சீக்கிரமாய் அழிந்துபோவீர்கள் என்றான்.
1 Thessalonians 2:16
புறஜாதியார் இரட்சிக்கப்படுவதற்கு நாங்கள் அவர்களோடே பேசாதபடிக்குத் தடைபண்ணுகிறார்கள்; இவ்விதமாய் எக்காலத்திலும் தங்கள் பாவங்களை நிறைவாக்குகிறார்கள்; அவர்கள்மேல் கோபாக்கினை பூரணமாய் வந்திருக்கிறது.
John 3:36
குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்; குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றான்.
Zechariah 14:12
எருசலேமுக்கு விரோதமாக யுத்தம்பண்ணின எல்லா ஜனங்களையும் கர்த்தர் வாதிக்கும் வாதையாவது: அவர்கள் காலூன்றி நிற்கையிலும் அவர்களுடைய சதை அழிந்துபோகும்; அவர்கள் கண்கள் தங்கள் குழிகளிலே கெட்டுப்போகும்; அவர்கள் நாவு அவர்கள் வாயிலே அழுகிப்போகும்.
Isaiah 28:19
அது புரண்டுவந்தமாத்திரத்தில் உங்களை அடித்துக்கொண்டுபோம்; அது நாள்தோறும் இரவும்பகலும் புரண்டுவரும்; அதைப்பற்றிப் பிறக்குஞ்செய்தியைக் கேட்பதும் சஞ்சலத்தை உண்டாக்கும்.
Psalm 80:4
சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, உமது ஜனத்தின் விண்ணப்பத்துக்கு விரோதமாய் நீர் எதுவரைக்கும் கோபங்கொள்வீர்.
Psalm 7:11
தேவன் நீதியுள்ள நியாயாதிபதி; அவர் நாள்தோறும் பாவியின்மேல் சினங்கொள்ளுகிற தேவன்.
1 Samuel 14:20
சவுலும் அவனோடிருந்த ஜனங்களும் கூட்டங்கூடிப் போர்க்களத்திற்குப் போனார்கள்; ஒருவர் பட்டயம் ஒருவருக்கு விரோதமாயிருந்தபடியால் மகா அமளியுண்டாயிற்று.
Leviticus 26:38
புறஜாதிகளுக்குள்ளே அழிந்துபோவீர்கள்; உங்கள் சத்துருக்களின் தேசம் உங்களைப் பட்சிக்கும்.
Leviticus 26:31
நான் உங்கள் பட்டணங்களை வெறுமையும், உங்கள் பரிசுத்த ஸ்தலங்களைப் பாழுமாக்கி, உங்கள் சுகந்த வாசனையை முகராதிருப்பேன்.
Tags என்னைவிட்டு விலகி நீ செய்துவருகிற உன் துர்க்கிரியைகளினிமித்தம் சீக்கிரத்தில் கெட்டுப்போய் அழியுமட்டும் நீ கையிட்டுச் செய்கிறதெல்லாவற்றிலும் கர்த்தர் உனக்குச் சாபத்தையும் சஞ்சலத்தையும் கேட்டையும் வரப்பண்ணுவார்
உபாகமம் 28:20 Concordance உபாகமம் 28:20 Interlinear உபாகமம் 28:20 Image