Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 22:42

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 சாமுவேல் 2 சாமுவேல் 22 2 சாமுவேல் 22:42

2 சாமுவேல் 22:42
அவர்கள் நோக்கிப் பார்க்கிறார்கள், அவர்களை இரட்சிப்பார் ஒருவருமில்லை; கர்த்தரை நோக்கிப்பார்க்கிறார்கள், அவர்களுக்கு அவர் உத்தரவு கொடுக்கிறதில்லை.

Tamil Indian Revised Version
அவர்கள் நோக்கிப் பார்க்கிறார்கள், அவர்களை இரட்சிப்பவர்கள் ஒருவருமில்லை; கர்த்தரை நோக்கிப் பார்க்கிறார்கள், அவர்களுக்கு அவர் பதில் கொடுக்கிறதில்லை.

Tamil Easy Reading Version
என் பகைவர்கள் உதவிக்கு ஆள் தேடினார்கள். ஆனால் யாரும் அவர்கள் உதவிக்கு வரவில்லை. அவர்கள் கர்த்தரிடம் கூட கேட்டார்கள். ஆனால் அவர் அவர்களுக்குப் பதில் அளிக்கவில்லை.

திருவிவிலியம்
⁽உதவி வேண்டி அவர்கள்␢ கதறினார்கள்;␢ ஆனால், அவர்களுக்கு உதவுவார்␢ யாருமில்லை;␢ அவர்கள் ஆண்டவரை நோக்கி␢ மன்றாடினார்கள்;␢ ஆனால், அவர்களுக்கு அவர்␢ பதிலளிக்கவில்லை.⁾

2 Samuel 22:412 Samuel 222 Samuel 22:43

King James Version (KJV)
They looked, but there was none to save; even unto the LORD, but he answered them not.

American Standard Version (ASV)
They looked, but there was none to save; Even unto Jehovah, but he answered them not.

Bible in Basic English (BBE)
They were crying out, but there was no one to come to their help: even to the Lord, but he gave them no answer.

Darby English Bible (DBY)
They looked, and there was none to save — Unto Jehovah, and he answered them not.

Webster’s Bible (WBT)
They looked, but there was none to save; even to the LORD, but he answered them not.

World English Bible (WEB)
They looked, but there was none to save; Even to Yahweh, but he didn’t answer them.

Young’s Literal Translation (YLT)
They look, and there is no saviour; Unto Jehovah, and He hath not answered them.

2 சாமுவேல் 2 Samuel 22:42
அவர்கள் நோக்கிப் பார்க்கிறார்கள், அவர்களை இரட்சிப்பார் ஒருவருமில்லை; கர்த்தரை நோக்கிப்பார்க்கிறார்கள், அவர்களுக்கு அவர் உத்தரவு கொடுக்கிறதில்லை.
They looked, but there was none to save; even unto the LORD, but he answered them not.

יִשְׁע֖וּyišʿûyeesh-OO
וְאֵ֣יןwĕʾênveh-ANE
מֹשִׁ֑יעַmōšîaʿmoh-SHEE-ah
אֶלʾelel
יְהוָ֖הyĕhwâyeh-VA
וְלֹ֥אwĕlōʾveh-LOH
עָנָֽם׃ʿānāmah-NAHM

இணை வசனம்

Isaiah 1:15
நீங்கள் உங்கள் கைகளைவிரித்தாலும், என் கண்களை உங்களைவிட்டு மறைக்கிறேன்; நீங்கள் மிகுதியாய் ஜெபம்பண்ணினாலும் கேளேன்; உங்கள் கைகள் இரத்தத்தினால் நிறைந்திருக்கிறது.

1 Samuel 28:6
சவுல் கர்த்தரிடத்தில் விசாரிக்கும் போது, கர்த்தர் அவனுக்குச் சொப்பனங்களினாலாவது, ஊரீமினாலாவது, தீர்க்கதரிசிகளினாலாவது மறு உத்தரவு அருளவில்லை.

Proverbs 1:28
அப்பொழுது அவர்கள் என்னை நோக்கிக் கூப்பிடுவார்கள்; நான் மறுஉத்தரவு கொடுக்கமாட்டேன்; அவர்கள் அதிகாலையிலே என்னைத் தேடுவார்கள், என்னைக் காணமாட்டார்கள்.

Micah 3:4
அப்பொழுது அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவார்கள்; ஆனாலும் அவர்கள் தங்கள் கிரியைகளில் பொல்லாதவர்களானபடியினால், அவர் அவர்களுக்கு மறுஉத்தரவு கொடாமல் தமது முகத்தை அக்காலத்திலே அவர்களுக்கு மறைத்துக்கொள்ளுவார்.

Job 27:9
ஆபத்து அவன்மேல் வரும்போது, தேவன் அவன் கூப்பிடுதலைக் கேட்பாரோ?

Ezekiel 20:3
மனுபுத்திரனே, நீ இஸ்ரவேல் மூப்பரோடே பேசி, அவர்களை நோக்கி கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், நீங்கள் என்னிடத்தில் விசாரிக்க வந்தீர்களோ? நீங்கள் என்னிடத்தில் விசாரிக்க இடங்கொடேன் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல்.

Matthew 7:22
அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? என்பார்கள்.

Luke 13:25
வீட்டெஜமான் எழுந்து, கதவைப்பூட்டின பின்பு, நீங்கள் வெளியே நின்று ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்குத்திறக்க வேண்டுமென்று சொல்லிக் கதவைத் தட்டும்போது, அவர் பிரதியுத்தரமாக: நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன் என்று உங்களுக்குச் சொல்லுவார்.


Tags அவர்கள் நோக்கிப் பார்க்கிறார்கள் அவர்களை இரட்சிப்பார் ஒருவருமில்லை கர்த்தரை நோக்கிப்பார்க்கிறார்கள் அவர்களுக்கு அவர் உத்தரவு கொடுக்கிறதில்லை
2 சாமுவேல் 22:42 Concordance 2 சாமுவேல் 22:42 Interlinear 2 சாமுவேல் 22:42 Image