Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 29:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 நாளாகமம் 2 நாளாகமம் 29 2 நாளாகமம் 29:8

2 நாளாகமம் 29:8
ஆகையால் கர்த்தருடைய கடுங்கோபம் யூதாவின்மேலும் எருசலேமின்மேலும் வந்து, அவர் இவர்களை, நீங்கள் உங்கள் கண்களினால் காண்கிறபடி, துயரத்துக்கும் திகைப்புக்கும் பழிப்புக்கும் ஒப்புக்கொடுத்தார்.

Tamil Indian Revised Version
ஆகையால் கர்த்தருடைய கடுங்கோபம் யூதாவின்மேலும் எருசலேமின்மேலும் வந்து, அவர் இவர்களை, நீங்கள் உங்கள் கண்களினால் பார்க்கிறபடி, துயரத்திற்கும், திகைப்பிற்கும், கேலிக்கும் ஒப்புக்கொடுத்தார்.

Tamil Easy Reading Version
எனவே, யூதா மற்றும் எருசலேம் ஜனங்கள் மீது கர்த்தர் பெரும் கோபங்கொண்டார். கர்த்தர் அவர்களைத் தண்டித்தார். மற்றவர்கள் இதனைப் பார்த்து பயந்தனர். யூதா மற்றும் எருசலேம் ஜனங்களுக்குக் கர்த்தர் செய்தவற்றைப் பார்த்து திகைத்துவிட்டனர். அவர்கள் எருசலேம் ஜனங்களுக்காக வெறுப்புடனும் வெட்கத்துடனும் தலையை அசைத்தார்கள். இவையனைத்தும் உண்மை என்பது உங்களுக்குத் தெரியும். இவற்றை உங்களது கண்களாலேயே நீங்கள் பார்க்கலாம்.

திருவிவிலியம்
அதனால், யூதாவின் மீதும், எருசலேமின்மீதும் ஆண்டவர் சினம் கொண்டார்; அவர் அவர்களை நடுக்கத்திற்கும் அச்சத்துக்கும், பழிப்பிற்கும் கையளித்தார். இதை நீங்கள் கண்ணாரக் கண்டீர்கள்!

2 Chronicles 29:72 Chronicles 292 Chronicles 29:9

King James Version (KJV)
Wherefore the wrath of the LORD was upon Judah and Jerusalem, and he hath delivered them to trouble, to astonishment, and to hissing, as ye see with your eyes.

American Standard Version (ASV)
Wherefore the wrath of Jehovah was upon Judah and Jerusalem, and he hath delivered them to be tossed to and fro, to be an astonishment, and a hissing, as ye see with your eyes.

Bible in Basic English (BBE)
And so the wrath of the Lord has come on Judah and Jerusalem, and he has given them up to be a cause of fear and wonder and shame, as your eyes have seen.

Darby English Bible (DBY)
Therefore the wrath of Jehovah has been upon Judah and Jerusalem, and he has delivered them to vexation, to desolation, and to hissing, as ye see with your eyes.

Webster’s Bible (WBT)
Wherefore the wrath of the LORD hath been upon Judah and Jerusalem, and he hath delivered them to trouble, to astonishment, and to hissing, as ye see with your eyes.

World English Bible (WEB)
Therefore the wrath of Yahweh was on Judah and Jerusalem, and he has delivered them to be tossed back and forth, to be an astonishment, and a hissing, as you see with your eyes.

Young’s Literal Translation (YLT)
and the wrath of Jehovah is on Judah and Jerusalem, and He giveth them for a trembling, for an astonishment, and for a hissing, as ye are seeing with your eyes.

2 நாளாகமம் 2 Chronicles 29:8
ஆகையால் கர்த்தருடைய கடுங்கோபம் யூதாவின்மேலும் எருசலேமின்மேலும் வந்து, அவர் இவர்களை, நீங்கள் உங்கள் கண்களினால் காண்கிறபடி, துயரத்துக்கும் திகைப்புக்கும் பழிப்புக்கும் ஒப்புக்கொடுத்தார்.
Wherefore the wrath of the LORD was upon Judah and Jerusalem, and he hath delivered them to trouble, to astonishment, and to hissing, as ye see with your eyes.

וַֽיְהִי֙wayhiyva-HEE
קֶ֣צֶףqeṣepKEH-tsef
יְהוָ֔הyĕhwâyeh-VA
עַלʿalal
יְהוּדָ֖הyĕhûdâyeh-hoo-DA
וִירֽוּשָׁלִָ֑םwîrûšālāimvee-roo-sha-la-EEM
וַיִּתְּנֵ֤םwayyittĕnēmva-yee-teh-NAME
לְזַֽוֲעָה֙lĕzawăʿāhleh-za-vuh-AH
לְשַׁמָּ֣הlĕšammâleh-sha-MA
וְלִשְׁרֵקָ֔הwĕlišrēqâveh-leesh-ray-KA
כַּֽאֲשֶׁ֛רkaʾăšerka-uh-SHER
אַתֶּ֥םʾattemah-TEM
רֹאִ֖יםrōʾîmroh-EEM
בְּעֵֽינֵיכֶֽם׃bĕʿênêkembeh-A-nay-HEM

இணை வசனம்

Jeremiah 25:18
எருசலேமுக்கும் யூதாவின் பட்டணங்களுக்கும் அதின் ராஜாக்களுக்கும், அதின் பிரபுக்களுக்கும் அவர்களை இந்நாளிலிருக்கிறபடி வனாந்தரமும் பாழும் இகழ்ச்சிக்குறியாகிய ஈசல்போடுதலும் சாபமுமாக்கிப்போடும்படி குடிக்கக்கொடுத்தேன்.

Jeremiah 25:9
இதோ, நான் வடக்கேயிருக்கிற சகல வம்சங்களையும், என் ஊழியக்காரனாகிய நேபுகாத்நேச்சார் என்கிற பாபிலோன் ராஜாவையும் அழைத்தனுப்பி, அவர்களை இந்தத் தேசத்துக்கு விரோதமாகவும், இதின் குடிகளுக்கு விரோதமாகவும், சுற்றிலுமிருக்கிற இந்த எல்லா ஜாதிகளுக்கும் விரோதமாகவும் வரப்பண்ணி, அவைகளைச் சங்காரத்துக்கு ஒப்புக்கொடுத்து, அவைகளைப் பாழாகவும் இகழ்ச்சிக்குறியாகிய ஈசல்போடுதலாகவும், நித்திய வனாந்தரங்களாகவும் செய்வேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்

Jeremiah 29:18
அவர்கள் என் வார்த்தைகளைக் கேளாமற்போனபடியால், நான் அவர்களைப் பட்டயத்தாலும், பஞ்சத்தாலும் கொள்ளைநோயாலும் பின்தொடர்ந்து, அவர்களைப் பூமியிலுள்ள எல்லா ராஜ்யங்களிலும் அலைந்து திரிகிறவர்களாகவும், நான் அவர்களைத் துரத்துகிற எல்லா ஜாதிகளிடத்திலும் சாபமாகவும், பாழாகவும் ஈசலிடுதலுக்கிடமாகவும், நிந்தையாகவும் வைப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Jeremiah 19:8
இந்த நகரத்தைப் பாழாக்கவும், கூச்சலிட்டு நிந்திக்கிற நிந்தையாகவும் வைப்பேன்; அதைக் கடந்துபோகிறவன் எவனும் பிரமித்து, அதின் எல்லா வாதைகளினிமித்தமும் ஈசலிடுவான்.

2 Chronicles 24:18
அப்படியே அவர்கள் தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்தை விட்டுவிட்டு, தோப்பு விக்கிரகங்களையும் சிலைகளையும் சேவித்தார்கள்; அப்பொழுது அவர்கள் செய்த இந்தக் குற்றத்தினிமித்தம் யூதாவின்மேலும் எருசலேமின்மேலும் கடுங்கோபம் மூண்டது.

Deuteronomy 28:25
உன் சத்துருக்களுக்கு முன்பாக நீ முறிய அடிக்கப்படும்படி கர்த்தர் செய்வார்; ஒரு வழியாய் அவர்களுக்கு எதிராகப் புறப்படுவாய், ஏழு வழியாய் அவர்களுக்கு முன்பாக ஓடிப்போவாய்; நீ பூமியிலுள்ள எல்லா ராஜ்யங்களிலும் சிதறுண்டுபோவாய்.

Jeremiah 18:15
என் ஜனங்களோ என்னை மறந்து, மாயையான விக்கிரகங்களுக்குத் தூபங்காட்டுகிறார்கள்; செப்பனிடப்படாத பாதைகளிலும் வழியிலும் அவர்கள் நடக்கும்படி, அவைகள் அவர்களைப் பூர்வ பாதைகளாகிய அவர்களுடைய வழிகளிலிருந்து இடறும்படி செய்கிறது.

2 Chronicles 36:14
ஆசாரியரில் பிரதானமானவர்கள் யாவரும் ஜனங்களும் கூடிப் புறஜாதிகளுடைய சகல அருவருப்புகளின்படியும் மிகவும் துரோகம்பண்ணி, கர்த்தர் எருசலேமிலே பரிசுத்தம்பண்ணின அவருடைய ஆலயத்தை தீட்டுப்படுத்தினார்கள்.

2 Chronicles 34:24
இதோ, யூதாவின் ராஜாவுக்கு முன்பாக வாசிக்கப்பட்ட புஸ்தகத்தில் எழுதியிருக்கிற சகல சாபங்களுமாகிய பொல்லாப்பை நான் இந்த ஸ்தலத்தின்மேலும் இதின் குடிகளின்மேலும் வரப்பண்ணுவேன்.

1 Kings 9:8
அப்பொழுது உன்னதமாயிருக்கிற இந்த ஆலயத்தைக் கடந்துபோகிறவன் எவனும் பிரமித்து, பகிடியாய் ஈசலிட்டு; கர்த்தர் இந்த தேசத்துக்கும் இந்த ஆலயத்துக்கும் இப்படிச் செய்தது என்ன? என்று கேட்பார்கள்.

Deuteronomy 28:59
கர்த்தர் நீங்காத பெரிய வாதைகளாலும் நீங்காத கொடிய ரோகங்களாலும் உன்னையும் உன் சந்ததியையும் அதிசயமாய் வாதித்து,

Deuteronomy 28:15
இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய எல்லாக் கற்பனைகளின்படியும் கட்டளைகளின்படியும் நடக்கக் கவனமாயிருக்கிறதற்கு, அவர் சத்தத்திற்குச் செவிகொடாதேபோவாயாகில், இப்பொழுது சொல்லப்படும் சாபங்களெல்லாம் உன்மேல் வந்து உனக்குப் பலிக்கும்.

Leviticus 26:32
நான் தேசத்தைப் பாழாக்குவேன்; அதிலே குடியிருக்கிற உங்கள் சத்துருக்கள் பிரமிப்பார்கள்.


Tags ஆகையால் கர்த்தருடைய கடுங்கோபம் யூதாவின்மேலும் எருசலேமின்மேலும் வந்து அவர் இவர்களை நீங்கள் உங்கள் கண்களினால் காண்கிறபடி துயரத்துக்கும் திகைப்புக்கும் பழிப்புக்கும் ஒப்புக்கொடுத்தார்
2 நாளாகமம் 29:8 Concordance 2 நாளாகமம் 29:8 Interlinear 2 நாளாகமம் 29:8 Image