Job 3 - WBT (Tamil)

1 After this Job opened his mouth, and cursed his day.அதற்குப்பின்பு யோபு தன் வாயைத் திறந்து, தான் பிறந்த நாளைச் சபித்து,

2 And Job spoke, and said,வசனித்துச் சொன்னது என்னவென்றால்:

3 Let the day perish in which I was born, and the night in which it was said, There is a mail child conceived.நான் பிறந்தநாளும் ஒரு ஆண்பிள்ளை உற்பத்தியாயிற்றென்று சொல்லப்பட்ட ராத்திரியும் அழிவதாக.

4 Let that day be darkness; let not God regard it from above, neither let the light shine upon it.அந்த நாள் அந்தகாரப்படுவதாக; தேவன் உயரத்திலிருந்து அதை விசாரியாமலும், ஒளி அதின்மேல் பிரகாசியாமலும்,

5 Let darkness and the shades of death stain it; let a cloud dwell upon it; let the blackness of the day terrify it.அந்தகாரமும் மகா இருளும் அதைக் கறைப்படுத்தி, மப்பு அதைமூடி, மந்தாரநாளின் பயங்கரங்கள் அதை அருக்களிப்பாக்குவதாக.

6 As for that night, let darkness seize upon it; let it not be joined to the days of the year, let it not come into the number of the months.அந்த ராத்திரியை அந்தகாரம் பிடிப்பதாக; வருஷத்தின் நாட்களில் அது சந்தோஷப்படுகிற நாளாயிராமலும் மாதங்களின் கணக்கிலே அது வராமலும் போவதாக.

7 Lo, let that night be solitary, let no joyful voice come therein.அந்த ராத்திரி தனிமையாயிருப்பதாக; அதிலே கெம்பீரசத்தம் இல்லாமற்போவதாக.

8 Let them curse it that curse the day, who are ready to raise up their mourning.நாளைச் சபிக்கிறவர்களும், லிவியாதானை எழும்பப்பண்ணத்தக்கவர்களும், அதைச் சபிப்பார்களாக.

9 Let the stars of its twilight be dark; let it look for light, but have none; neither let it see the dawning of the day:அதின் அஸ்தமனகாலத்தில் தோன்றிய நட்சத்திரங்கள் இருண்டு, அது எதிர்பார்த்திருந்த வெளிச்சம் உண்டாகமலும், விடியற்காலத்து வெளுப்பை அது காணாமலும் இருப்பதாக.

10 Because it prevented not my birth, nor hid sorrow from my eyes.நான் இருந்த கர்ப்பத்தின் வாசலை அது அடைக்காமலும், என் கண்கள் காண்கிற வருத்தத்தை மறைத்துவிடாமலும் இருந்ததே.

11 Why died I not from the womb? why did I not expire at the time of my birth?நான் கர்ப்பத்தில்தானே அழியாமலும், கர்ப்பத்திலிருந்து புறப்படுகிறபோதே சாகாமலும் போனதென்ன?

12 Why did the knees receive me? or why the breasts that I should be nursed?என்னை ஏந்திக்கொள்ள மடியும், நான் பாலுண்ண ஸ்தனங்களும் உண்டாயிருந்ததென்ன?

13 For now should I have lain still and been quiet, I should have slept: then had I been at rest,அப்படியில்லாதிருந்தால், அசையாமல் கிடந்து அமர்ந்திருந்து,

14 With kings and counselors of the earth, who built desolate places for themselves;பாழ்நிலங்களில் தங்களுக்கு மாளிகையைக்கட்டின பூமியின் ராஜாக்களோடும் மந்திரிமார்களோடும்,

15 Or with princes that had gold, who filled their houses with silver:அல்லது, பொன்னை உடையவர்களோடும், தங்கள் வீடுகளை வெள்ளியினால் நிரப்பினவர்களுமான பிரபுக்களோடுங்கூட நான் இப்பொழுது தூங்கி இளைப்பாறுவேனே.

16 Or as a hidden untimely birth I had not been; as infants which never saw light.அல்லது, வெளிப்படாத முதிராப்பிண்டம்போலவும் வெளிச்சத்தைக்காணாத சிசுக்கள் போலவும் இருப்பேனே.

17 There the wicked cease from troubling; and there the weary are at rest.துன்மார்க்கருடைய தொந்தரவு அங்கே ஓய்ந்திருக்கிறது; பெலனற்று விடாய்த்துப்போனவர்கள் அங்கே இளைப்பாறுகிறார்கள்.

18 There the prisoners rest together; they hear not the voice of the oppressor.கட்டுண்டிருந்தவர்கள் அங்கே ஏகமாக அமைந்திருக்கிறார்கள்; ஒடுக்குகிறவனுடைய சத்தம் அங்கே கேட்கப்படுகிறதில்லை.

19 The small and great are there; and the servant is free from his master.சிறியவனும் பெரியவனும் அங்கே சரியாயிருக்கிறார்கள்; அடிமை தன் எஜமானுக்கு நீங்கலாயிருக்கிறான்.

20 Why is light given to him that is in misery, and life to the bitter in soul;மரணத்துக்கு ஆசையாய்க் காத்திருந்து, புதையலைத் தேடுகிறதுபோல அதைத் தேடியும் அடையாமற்போகிறவர்களும்,

21 Who long for death, but it cometh not; and dig for it more than for hid treasures;பிரேதக்குழியைக் கண்டுபிடித்ததினால் மிகவும் களிகூர்ந்து,

22 Who rejoice exceedingly, and are glad, when they can find the grave?அதற்காகச் சந்தோஷப்படுகிற நிர்ப்பாக்கியருமாகிய இவர்களுக்கு வெளிச்சமும், மனச்சஞ்சலமுள்ள இவர்களுக்கு ஜீவனும் கொடுக்கப்படுகிறதினால் பலன் என்ன?

23 Why is light given to a man whose way is hid, and whom God hath hedged in?தன் வழியைக் காணக் கூடாதபடிக்கு, தேவனால் வளைந்துகொள்ளப்பட்டவனுக்கு வெளிச்சத்தினால் பலன் என்ன?

24 For my sighing cometh before I eat, and my roarings are poured out like the waters.என் போஜனத்துக்கு முன்னே எனக்குப் பெருமூச்சு உண்டாகிறது; என் கதறுதல் வெள்ளம்போல புரண்டுபோகிறது.

25 For the thing which I greatly feared hath come upon me, and that which I dreaded hath come to me.நான் பயந்த காரியம் எனக்குநேரிட்டது; நான் அஞ்சினது எனக்கு வந்தது.

26 I was not in safety, neither had I rest, neither was I quiet; yet trouble came.எனக்குச் சுகமுமில்லை, இளைப்பாறுதலுமில்லை, அமைதலுமில்லை; எனக்குத் தத்தளிப்பே நேரிட்டது.

Tamil Bible