Job 3 - ASV (Tamil)
1 After this opened Job his mouth, and cursed his day.அதற்குப்பின்பு யோபு தன் வாயைத் திறந்து, தான் பிறந்த நாளைச் சபித்து,
2 And Job answered and said:வசனித்துச் சொன்னது என்னவென்றால்:
3 Let the day perish wherein I was born, And the night which said, There is a man-child conceived.நான் பிறந்தநாளும் ஒரு ஆண்பிள்ளை உற்பத்தியாயிற்றென்று சொல்லப்பட்ட ராத்திரியும் அழிவதாக.
4 Let that day be darkness; Let not God from above seek for it, Neither let the light shine upon it.அந்த நாள் அந்தகாரப்படுவதாக; தேவன் உயரத்திலிருந்து அதை விசாரியாமலும், ஒளி அதின்மேல் பிரகாசியாமலும்,
5 Let darkness and the shadow of death claim it for their own; Let a cloud dwell upon it; Let all that maketh black the day terrify it.அந்தகாரமும் மகா இருளும் அதைக் கறைப்படுத்தி, மப்பு அதைமூடி, மந்தாரநாளின் பயங்கரங்கள் அதை அருக்களிப்பாக்குவதாக.
6 As for that night, let thick darkness seize upon it: Let it not rejoice among the days of the year; Let it not come into the number of the months.அந்த ராத்திரியை அந்தகாரம் பிடிப்பதாக; வருஷத்தின் நாட்களில் அது சந்தோஷப்படுகிற நாளாயிராமலும் மாதங்களின் கணக்கிலே அது வராமலும் போவதாக.
7 Lo, let that night be barren; Let no joyful voice come therein.அந்த ராத்திரி தனிமையாயிருப்பதாக; அதிலே கெம்பீரசத்தம் இல்லாமற்போவதாக.
8 Let them curse it that curse the day, Who are ready to rouse up leviathan.நாளைச் சபிக்கிறவர்களும், லிவியாதானை எழும்பப்பண்ணத்தக்கவர்களும், அதைச் சபிப்பார்களாக.
9 Let the stars of the twilight thereof be dark: Let it look for light, but have none; Neither let it behold the eyelids of the morning:அதின் அஸ்தமனகாலத்தில் தோன்றிய நட்சத்திரங்கள் இருண்டு, அது எதிர்பார்த்திருந்த வெளிச்சம் உண்டாகமலும், விடியற்காலத்து வெளுப்பை அது காணாமலும் இருப்பதாக.
10 Because it shut not up the doors of my `mother's' womb, Nor hid trouble from mine eyes.நான் இருந்த கர்ப்பத்தின் வாசலை அது அடைக்காமலும், என் கண்கள் காண்கிற வருத்தத்தை மறைத்துவிடாமலும் இருந்ததே.
11 Why died I not from the womb? Why did I not give up the ghost when my mother bare me?நான் கர்ப்பத்தில்தானே அழியாமலும், கர்ப்பத்திலிருந்து புறப்படுகிறபோதே சாகாமலும் போனதென்ன?
12 Why did the knees receive me? Or why the breast, that I should suck?என்னை ஏந்திக்கொள்ள மடியும், நான் பாலுண்ண ஸ்தனங்களும் உண்டாயிருந்ததென்ன?
13 For now should I have lain down and been quiet; I should have slept; then had I been at rest,அப்படியில்லாதிருந்தால், அசையாமல் கிடந்து அமர்ந்திருந்து,
14 With kings and counsellors of the earth, Who built up waste places for themselves;பாழ்நிலங்களில் தங்களுக்கு மாளிகையைக்கட்டின பூமியின் ராஜாக்களோடும் மந்திரிமார்களோடும்,
15 Or with princes that had gold, Who filled their houses with silver:அல்லது, பொன்னை உடையவர்களோடும், தங்கள் வீடுகளை வெள்ளியினால் நிரப்பினவர்களுமான பிரபுக்களோடுங்கூட நான் இப்பொழுது தூங்கி இளைப்பாறுவேனே.
16 Or as a hidden untimely birth I had not been, As infants that never saw light.அல்லது, வெளிப்படாத முதிராப்பிண்டம்போலவும் வெளிச்சத்தைக்காணாத சிசுக்கள் போலவும் இருப்பேனே.
17 There the wicked cease from troubling; And there the weary are at rest.துன்மார்க்கருடைய தொந்தரவு அங்கே ஓய்ந்திருக்கிறது; பெலனற்று விடாய்த்துப்போனவர்கள் அங்கே இளைப்பாறுகிறார்கள்.
18 There the prisoners are at ease together; They hear not the voice of the taskmaster.கட்டுண்டிருந்தவர்கள் அங்கே ஏகமாக அமைந்திருக்கிறார்கள்; ஒடுக்குகிறவனுடைய சத்தம் அங்கே கேட்கப்படுகிறதில்லை.
19 The small and the great are there: And the servant is free from his master.சிறியவனும் பெரியவனும் அங்கே சரியாயிருக்கிறார்கள்; அடிமை தன் எஜமானுக்கு நீங்கலாயிருக்கிறான்.
20 Wherefore is light given to him that is in misery, And life unto the bitter in soul;மரணத்துக்கு ஆசையாய்க் காத்திருந்து, புதையலைத் தேடுகிறதுபோல அதைத் தேடியும் அடையாமற்போகிறவர்களும்,
21 Who long for death, but it cometh not, And dig for it more than for hid treasures;பிரேதக்குழியைக் கண்டுபிடித்ததினால் மிகவும் களிகூர்ந்து,
22 Who rejoice exceedingly, And are glad, when they can find the grave?அதற்காகச் சந்தோஷப்படுகிற நிர்ப்பாக்கியருமாகிய இவர்களுக்கு வெளிச்சமும், மனச்சஞ்சலமுள்ள இவர்களுக்கு ஜீவனும் கொடுக்கப்படுகிறதினால் பலன் என்ன?
23 `Why is light given' to a man whose way is hid, And whom God hath hedged in?தன் வழியைக் காணக் கூடாதபடிக்கு, தேவனால் வளைந்துகொள்ளப்பட்டவனுக்கு வெளிச்சத்தினால் பலன் என்ன?
24 For my sighing cometh before I eat, And my groanings are poured out like water.என் போஜனத்துக்கு முன்னே எனக்குப் பெருமூச்சு உண்டாகிறது; என் கதறுதல் வெள்ளம்போல புரண்டுபோகிறது.
25 For the thing which I fear cometh upon me, And that which I am afraid of cometh unto me.நான் பயந்த காரியம் எனக்குநேரிட்டது; நான் அஞ்சினது எனக்கு வந்தது.
26 I am not at ease, neither am I quiet, neither have I rest; But trouble cometh.எனக்குச் சுகமுமில்லை, இளைப்பாறுதலுமில்லை, அமைதலுமில்லை; எனக்குத் தத்தளிப்பே நேரிட்டது.
Tamil Bible