Psalm 72 - DBY (Tamil)

1 {For Solomon.} O God, give the king thy judgments, and thy righteousness unto the king's son.தேவனே, ராஜாவுக்கு உம்முடைய நியாயத்தீர்ப்புகளையும் ராஜாவின் குமாரனுக்கு உம்முடைய நீதியையும் கொடுத்தருளும்.

2 He will judge thy people with righteousness, and thine afflicted with judgment.அவர் உம்முடைய ஜனங்களை நீதியோடும், உம்முடைய ஏழைகளை நியாயத்தோடும் விசாரிப்பார்.

3 The mountains shall bring peace to the people, and the hills, by righteousness.பர்வதங்Εள் ஜனத்திற்க`Κ் சமாதானத்தψத் தரும், மேடுகள் நீதியின் விளைவோடிருக்கும்.

4 He will do justice to the afflicted of the people; he will save the children of the needy, and will break in pieces the oppressor.ஜனத்தில் சிறுமைப்படுகிறவர்களை அவர் நியாயம் விசாரித்து, ஏழையின் பிள்ளைகளை இரட்சித்து, இடுக்கண் செய்கிறவனை நொறுக்குவார்.

5 They shall fear thee as long as sun and moon endure, from generation to generation.சூரியனும் சந்திரனும் உள்ளமட்டும், அவர்கள் உமக்குத் தலைமுறை தலைமுறையாகப் பயந்திருப்பார்கள்.

6 He shall come down like rain on the mown grass, as showers that water the earth.புல்லறுப்புண்ட வெளியின் மேல் பெய்யும் மழையைப்போலவும், பூமியை நனைக்கும் தூறலைப்போலவும் இறங்குவார்.

7 In his days shall the righteous flourish, and abundance of peace till the moon be no more.அவருடைய நாட்களில் நீதிமான் செழிப்பான்; சந்திரனுள்ளவரைக்கும் மிகுந்த சமாதானம் இருக்கும்.

8 And he shall have dominion from sea to sea, and from the river unto the ends of the earth.சமுத்திரந்தொடங்கி மறுசமுத்திரம்வரைக்கும், நதிதொடங்கி பூமியின் எல்லைகள்வரைக்கும் அவர் அரசாளுவார்.

9 The dwellers in the desert shall bow before him, and his enemies shall lick the dust.வனாந்தரத்தார் அவருக்கு முன்பாகக் குனிந்து வணங்குவார்கள்; அவருடைய சத்துருக்கள் மண்ணை நக்குவார்கள்.

10 The kings of Tarshish and of the isles shall render presents; the kings of Sheba and Seba shall offer tribute:தர்ஷீசின் ராஜாக்களும் தீவுகளின் ராஜாக்களும் காணிக்கைகளைக் கொண்டுவருவார்கள்; ஷேபாவிலும் சேபாவிலுமுள்ள ராஜாக்கள் வெகுமானங்களைக் கொண்டுவருவார்கள்.

11 Yea, all kings shall bow down before him; all nations shall serve him.சகல ராஜாக்களும் அவரைப்பணிந்து கொள்வார்கள்; சகல ஜாதிகளும் அவரைச் சேவிப்பார்கள்.

12 For he will deliver the needy who crieth, and the afflicted, who hath no helper;கூப்பிடுகிற எளியவனையும், உதவியற்ற சிறுமையானவனையும் அவர் விடுவிப்பார்.

13 He will have compassion on the poor and needy, and will save the souls of the needy:பலவீனனுக்கும் எளியவனுக்கும் அவர் இரங்கி, எளியவர்களின் ஆத்துமாக்களை இரட்சிப்பார்.

14 He will redeem their souls from oppression and violence, and precious shall their blood be in his sight.அவர்கள் ஆத்துமாக்களை வஞ்சகத்திற்கும் கொடுமைக்கும் தப்புவிப்பார்; அவர்களுடைய இரத்தம் அவருடைய பார்வைக்கு அருமையாயிருக்கும்.

15 And he shall live; and to him shall be given of the gold of Sheba; and prayer shall be made for him continually: all the day shall he be blessed.அவர் பிழைத்திருப்பார், ஷேபாவின் பொன் அவருக்குக் கொடுக்கப்படும்; அவர்நிமித்தம் இடைவிடாமல் ஜெபம்பண்ணப்படும், எந்நாளும் ஸ்தோத்திரிக்கப்படுவார்.

16 There shall be abundance of corn in the earth, upon the top of the mountains; the fruit thereof shall shake like Lebanon; and they of the city shall bloom like the herb of the earth.பூமியிலே மலைகளின் உச்சிகளில் ஒரு பிடி தானியம் விதைக்கப்பட்டிருக்கும்; அதின் விளைவு லீபனோனைப்போல அசையும்; பூமியின் புல்லைப்போல நகரத்தார் செழித்தோங்குவார்கள்.

17 His name shall endure for ever; his name shall be continued as long as the sun: and [men] shall bless themselves in him; all nations shall call him blessed.அவருடைய நாமம் என்றென்றைக்கும் இருக்கும்; சூரியனுள்ளமட்டும் அவருடைய நாமம் சந்தான பரம்பரையாய் நிலைக்கும்; மனுஷர் அவருக்குள் ஆசீர்வதிக்கப்படுவார்கள், எல்லா ஜாதிகளும் அவரைப் பாக்கியமுடையவர் என்று வாழ்த்துவார்கள்.

18 Blessed be Jehovah Elohim, the God of Israel, who alone doeth wondrous things!இஸ்ரவேலின் தேவனாயிருக்கிற கர்த்தராகிய தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக; அவரே அதிசயங்களைச் செய்கிறவர்.

19 And blessed be his glorious name for ever! and let the whole earth be filled with his glory! Amen, and Amen.அவருடைய மகிமை பொருந்திய நாமத்துக்கு என்றென்றைக்கும் ஸ்தோத்திரமுண்டாவதாக; பூமிமுழுவதும் அவருடைய மகிமையால் நிறைந்திருப்பதாக. ஆமென், ஆமென்.

20 The prayers of David the son of Jesse are ended.ஈசாயின் புத்திரனாகிய தாவீதின் விண்ணப்பங்கள் முடிந்தது.

Tamil Bible