Psalm 51 - YLT (Tamil)

1 To the Overseer. -- A Psalm of David, in the coming inn unto him of Nathan the prophet, when he hath gone in unto Bath-Sheba. Favour me, O God, according to Thy kindness, According to the abundance of Thy mercies, Blot out my transgressions.தேவனே, உமது கிருபையின்படி எனக்கு இரங்கும், உமது மிகுந்த இரக்கங்களின்படி என் மீறுதல்கள் நீங்க என்னைச் சுத்திகரியும்.

2 Thoroughly wash me from mine iniquity, And from my sin cleanse me,என் அக்கிரமம் நீங்க என்னை முற்றிலும் கழுவி, என் பாவமற என்னைச் சுத்திகரியும்.

3 For my transgressions I do know, And my sin `is' before me continually.என் மீறுதல்களை நான் அறிந்திருக்கிறேன்; என் பாவம் எப்பொழுதும் எனக்கு முன்பாக நிற்கிறது.

4 Against Thee, Thee only, I have sinned, And done the evil thing in Thine eyes, So that Thou art righteous in Thy words, Thou art pure in Thy judging.தேவரீர் ஒருவருக்கே விரோதமாக நான் பாவஞ்செய்து, உமது கண்களுக்கு முன்பாகப் பொல்லாங்கானதை நடப்பித்தேன்; நீர் பேசும்போது உம்முடைய நீதி விளங்கவும், நீர் நியாயந்தீர்க்கும்போது உம்முடைய பரிசுத்தம் விளங்கவும் இதை அறிக்கையிடுகிறேன்.

5 Lo, in iniquity I have been brought forth, And in sin doth my mother conceive me.இதோ, நான் துர்க்குணத்தில் உருவானேன்; என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள்.

6 Lo, truth Thou hast desired in the inward parts, And in the hidden part Wisdom Thou causest me to know.இதோ, உள்ளத்தில் உண்மையாயிருக்க விரும்புகிறீர்; அந்தக்கரணத்தில் ஞானத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்.

7 Thou cleansest me with hyssop and I am clean, Washest me, and than snow I am whiter.நீர் என்னை ஈசோப்பினால் சுத்திகரியும், அப்பொழுது நான் சுத்தமாவேன்; என்னைக் கழுவியருளும், அப்பொழுது நான் உறைந்த மழையிலும் வெண்மையாவேன்.

8 Thou causest me to hear joy and gladness, Thou makest joyful bones Thou hast bruised.நான் சந்தோஷமும் மகிழ்ச்சியும் கேட்கும்படி செய்யும், அப்பொழுது நீர் நொறுக்கின எலும்புகள் களிகூரும்.

9 Hide Thy face from my sin. And all mine iniquities blot out.என் பாவங்களைப் பாராதபடிக்கு நீர் உமது முகத்தை மறைத்து, என் அக்கிரமங்களையெல்லாம் நீக்கியருளும்.

10 A clean heart prepare for me, O God, And a right spirit renew within me.தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும்.

11 Cast me not forth from Thy presence, And Thy Holy Spirit take not from me.உமது சமுகத்தை விட்டு என்னைத் தள்ளாமலும், உமது பரிசுத்த ஆவியை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளாமலும் இரும்.

12 Restore to me the joy of Thy salvation, And a willing spirit doth sustain me.உமது இரட்சணியத்தின் சந்தோஷத்தைத் திரும்பவும் எனக்குத் தந்து, உற்சாகமான ஆவி என்னைத் தாங்கும்படி செய்யும்,

13 I teach transgressors Thy ways, And sinners unto Thee do return.அப்பொழுது பாதகருக்கு உமது வழிகளை உபதேசிப்பேன்; பாவிகள் உம்மிடத்தில் மனந்திரும்புவார்கள்.

14 Deliver me from blood, O God, God of my salvation, My tongue singeth of Thy righteousness.தேவனே, என்னை இரட்சிக்குந் தேவனே, இரத்தப்பழிகளுக்கு என்னை நீங்கலாக்கிவிடும்; அப்பொழுது என் நாவு உம்முடைய நீதியைக் கெம்பீரமாய்ப் பாடும்.

15 O Lord, my lips thou dost open, And my mouth declareth Thy praise.ஆண்டவரே, என் உதடுகளைத் திறந்தருளும்; அப்பொழுது என் வாய் உம்முடைய புகழை அறிவிக்கும்.

16 For Thou desirest not sacrifice, or I give `it', Burnt-offering Thou acceptest not.பலியை நீர் விரும்புகிறதில்லை, விரும்பினால் செலுத்துவேன்; தகனபலியும் உமக்குப் பிரியமானதல்ல.

17 The sacrifices of God `are' a broken spirit, A heart broken and bruised, O God, Thou dost not despise.தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்.

18 Do good in Thy good pleasure with Zion, Thou dost build the walls of Jerusalem.சீயோனுக்கு உமது பிரியத்தின்படி நன்மைசெய்யும்: எருசலேமின் மதில்களைக் கட்டுவீராக.

19 Then Thou desirest sacrifices of righteousness, Burnt-offering, and whole burnt-offering, Then they offer bullocks on thine altar!அப்பொழுது தகனபலியும் சர்வாங்க தகனபலியுமாகிய நீதியின்பலிகளில் பிரியப்படுவீர்; அப்பொழுது உமது பீடத்தின்மேல் காளைகளைப் பலியிடுவார்கள்.

Tamil Bible