Psalm 130 - YLT (Tamil)

1 A Song of the Ascents. From depths I have called Thee, Jehovah.கர்த்தாவே, ஆழங்களிலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்.

2 Lord, hearken to my voice, Thine ears are attentive to the voice of my supplications.ஆண்டவரே என் சத்தத்தைக் கேளும்; என் விண்ணப்பங்களின் சத்தத்திற்கு உமது செவிகள் கவனித்திருப்பதாக.

3 If iniquities Thou dost observe, O Lord, who doth stand?கர்த்தாவே, நீர் அக்கிரமங்களைக் கவனித்திருப்பீரானால், யார் நிலைநிற்பான், ஆண்டவரே.

4 But with Thee `is' forgiveness, that Thou mayest be feared.உமக்குப் பயப்படும்படிக்கு உம்மிடத்தில் மன்னிப்பு உண்டு.

5 I hoped `for' Jehovah -- hoped hath my soul, And for His word I have waited.கர்த்தருக்குக் காத்திருக்கிறேன்; என் ஆத்துமா காத்திருக்கிறது; அவருடைய வார்த்தையை நம்பியிருக்கிறேன்.

6 My soul `is' for the Lord, More than those watching for morning, Watching for morning!எப்பொழுது விடியும் என்று விடியற்காலத்துக்குக் காத்திருக்கிற ஜாமக்காரரைப்பார்க்கிலும் அதிகமாய் என் ஆத்துமா ஆண்டவருக்குக் காத்திருக்கிறது.

7 Israel doth wait on Jehovah, For with Jehovah `is' kindness, And abundant with Him `is' redemption.இஸ்ரவேல் கர்த்தரை நம்பியிருப்பதாக; கர்த்தரிடத்தில் கிருபையும், அவரிடத்தில் திரளான மீட்பும் உண்டு.

8 And He doth redeem Israel from all his iniquities!அவர் இஸ்ரவேலை அதின் சகல அக்கிரமங்களினின்றும் மீட்டுக்கொள்வார்.

Tamil Bible