1 ⁽நமது வலிமையாகிய கடவுளை␢ மகிழ்ந்து பாடுங்கள்;␢ யாக்கோபின் கடவுளைப்␢ புகழ்ந்து ஏத்துங்கள்.⁾

2 ⁽இன்னிசை எழுப்புங்கள்;␢ மத்தளம் கொட்டுங்கள்;␢ யாழும் சுரமண்டலமும் இசைந்து␢ இனிமையாய்ப் பாடுங்கள்.⁾

3 ⁽அமாவாசையில், பௌர்ணமியில்,␢ நமது திருவிழாநாளில் § எக்காளம் ஊதுங்கள்.⁾

4 ⁽இது இஸ்ரயேல் மக்களுக்குரிய விதிமுறை;␢ யாக்கோபின் கடவுள் தந்த நீதிநெறி.⁾

5 ⁽அவர் எகிப்துக்கு எதிராகச்␢ சென்றபொழுது␢ யோசேப்புக்கு அளித்த சான்று இதுவே.␢ அப்பொழுது நான்␢ அறியாத மொழியைக் கேட்டேன்.⁾

6 ⁽தோளினின்று உன் சுமையை␢ அகற்றினேன்;␢ உன் கைகள் கூடையினின்று␢ விடுதலை பெற்றன.⁾

7 ⁽துன்ப வேளையில்␢ என்னை நோக்கி மன்றாடினீர்கள்;␢ நான் உங்களை விடுவித்தேன்;␢ இடிமுழங்கும் மறைவிடத்தினின்று␢ நான் உங்களுக்கு மறுமொழி கூறினேன்;␢ மெரிபாவின் நீருற்று அருகில்␢ உங்களைச் சோதித்தேன். (சேலா)⁾

8 ⁽என் மக்களே,␢ எனக்குச் செவிகொடுங்கள்;␢ நான் உங்களுக்கு␢ எச்சரிக்கை விடுக்கின்றேன்;␢ இஸ்ரயேலரே, நீங்கள் எனக்குச்␢ செவிசாய்த்தால்,␢ எவ்வளவு நலமாயிருக்கும்!⁾

9 ⁽உங்களிடையே வேற்றுத் தெய்வம்␢ இருத்தலாகாது;␢ நீங்கள் அன்னிய தெய்வத்தைத்␢ தொழலாகாது.⁾

10 ⁽உங்களை எகிப்து நாட்டினின்று␢ அழைத்துவந்த␢ கடவுளாகிய ஆண்டவர் நானே;␢ உங்கள் வாயை விரிவாகத் திறங்கள்;␢ நான் அதை நிரப்புவேன்.⁾

11 ⁽ஆனால் என் மக்கள்␢ என் குரலுக்குச்␢ செவிசாய்க்கவில்லை;␢ இஸ்ரயேலர் எனக்குப்␢ பணியவில்லை.⁾

12 ⁽எனவே, அவர்கள் தங்கள்␢ எண்ணங்களின்படியே நடக்குமாறு,␢ அவர்களின் கடின இதயங்களிடம்␢ அவர்களை விட்டுவிட்டேன்.⁾

13 ⁽என் மக்கள் எனக்குச்␢ செவிசாய்த்திருந்தால்,␢ இஸ்ரயேலர் நான் காட்டிய வழியில்␢ நடந்திருந்தால்,␢ எவ்வளவோ நலமாயிருந்திருக்கும்.⁾

14 ⁽நான் விரைவில்␢ அவர்கள் எதிரிகளை அடக்குவேன்,␢ என் கை அவர்களின்␢ பகைவருக்கு எதிராகத் திரும்பும்.⁾

15 ⁽ஆண்டவரை வெறுப்போர்␢ அவர்முன் கூனிக்குறுகுவர்;␢ அவர்களது தண்டனைக் காலம்␢ என்றென்றுமாய் இருக்கும்.⁾

16 ⁽ஆனால், உங்களுக்கு␢ நயமான கோதுமையை␢ உணவாகக் கொடுப்பேன்;␢ உங்களுக்கு மலைத் தேனால்␢ நிறைவளிப்பேன்.⁾

சங்கீதம் 81 ERV IRV TRV