1 ⁽மக்களினங்களே,␢ களிப்புடன் கைகொட்டுங்கள்;␢ ஆர்ப்பரித்துக் கடவுளைப்␢ புகழ்ந்து பாடுங்கள்.⁾

2 ⁽ஏனெனில், உன்னதராகிய ஆண்டவர்␢ அஞ்சுதற்கு உரியவர்;␢ உலகனைத்தையும் ஆளும்␢ மாவேந்தர் அவரே;⁾

3 ⁽வேற்று மக்களை␢ நமக்கு அடிபணியச் செய்தவர்;␢ அன்னிய நாடுகளை␢ நம் தாள் பணிய வைத்தார்.⁾

4 ⁽நம் உரிமைச் சொத்தை␢ அவர் நமக்குத் தேர்ந்து அளித்தார்;␢ அது அவர் அன்புகூரும்␢ யாக்கோபின் பெருமை ஆகும். (சேலா)⁾

5 ⁽ஆரவார ஒலியிடையே␢ பவனி செல்கின்றார் கடவுள்;␢ எக்காளம் முழங்கிடவே␢ உயரே ஏறுகின்றார் ஆண்டவர்.⁾

6 ⁽பாடுங்கள்;␢ கடவுளுக்குப் புகழ் பாடுங்கள்;␢ பாடுங்கள், நம் அரசருக்குப் புகழ் பாடுங்கள்.⁾

7 ⁽ஏனெனில், கடவுளே␢ அனைத்து உலகின் வேந்தர்;␢ அருட்பா தொடுத்துப் புகழ் பாடுங்கள்.⁾

8 ⁽கடவுள் பிறஇனத்தார் மீது␢ ஆட்சி செய்கின்றார்;␢ அவர்தம் திரு அரியணையில்␢ வீற்றிருக்கின்றார்.⁾

9 ⁽மக்களினங்களின் தலைவர்கள்␢ ஆபிரகாமின் கடவுளுடைய மக்களோடு␢ ஒன்றுகூடுவர்; ஏனெனில்,␢ மண்ணுலகின் மன்னர் அனைவரும்␢ கடவுளின் கொற்றத்திற்கு உட்பட்டவர்;␢ கடவுளே அனைத்திற்கும் மேலானவர்.⁾