சங்கீதம் 34

fullscreen1 கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன்; அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும்.

fullscreen2 கர்த்தருக்குள் என் ஆத்துமா மேன்மைபாராட்டும்; சிறுமைப்பட்டவர்கள் அதைக்கேட்டு மகிழுவார்கள்.

fullscreen3 என்னோடேகூடக் கர்த்தரை மகிமைப்படுத்துங்கள்; நாம் ஒருமித்து அவர் நாமத்தை உயர்த்துவோமாக.

fullscreen4 நான் கர்த்தரைத் தேடினேன், அவர் எனக்குச் செவிகொடுத்து, என்னுடைய எல்லாப் பயத்துக்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார்.

fullscreen5 அவர்கள் அவரை நோக்கிப்பார்த்துப் பிரகாசமடைந்தார்கள்; அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை.

fullscreen6 இந்த ஏழை கூப்பிட்டான், கர்த்தர் கேட்டு, அவனை அவன் இடுக்கண்களுக்கெல்லாம் நீங்கலாக்கி இரட்சித்தார்.

fullscreen7 கர்த்தருடைய தூதன் அவருக்குப் பயந்தவர்களைச் சூழப் பாளயமிறங்கி அவர்களை விடுவிக்கிறார்.

fullscreen8 கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்; அவர்மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.

fullscreen9 கர்த்தருடைய பரிசுத்தவான்களே அவருக்குப் பயந்திருங்கள்; அவருக்குப் பயந்தவர்களுக்குக் குறைவில்லை.

fullscreen10 சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும்; கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது.

fullscreen11 பிள்ளைகளே, வந்து எனக்குச் செவிகொடுங்கள்; கர்த்தருக்குப் பயப்படுதலை உங்களுக்குப் போதிப்பேன்.

fullscreen12 நன்மையைக் காணும்படி, ஜீவனை விரும்பி, நீடித்த நாட்களை அபேட்சிக்கிற மனுஷன் யார்?

fullscreen13 உன் நாவைப் பொல்லாப்புக்கும், உன் உதடுகளைக் கபட்டுவசனிப்புக்கும் விலக்கிக் காத்துக்கொள்.

fullscreen14 தீமையை விட்டு விலகி, நன்மைசெய்; சமாதானத்தைத் தேடி, அதைத் தொடர்ந்துகொள்.

fullscreen15 கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது; அவருடைய செவிகள் அவர்கள் கூப்பிடுதலுக்குத் திறந்திருக்கிறது.

fullscreen16 தீமைசெய்கிறவர்களுடைய பேரைப் பூமியில் இராமல் அற்றுப்போகப்பண்ண கர்த்தருடைய முகம் அவர்களுக்கு விரோதமாயிருக்கிறது.

fullscreen17 நீதிமான்கள் கூப்பிடும்போது கர்த்தர் கேட்டு, அவர்களை அவர்களுடைய எல்லா உபத்திரவங்களுக்கும் நீங்கலாக்கிவிடுகிறார்.

fullscreen18 நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார்.

fullscreen19 நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும், கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார்.

fullscreen20 அவனுடைய எலும்புகளையெல்லாம் காப்பாற்றுகிறார்; அவைகளில் ஒன்றும் முறிக்கப்படுவதில்லை.

fullscreen21 தீமை துன்மார்க்கனைக் கொல்லும்; நீதிமானைப் பகைக்கிறவர்கள் குற்றவாளிகளாவார்கள்.

fullscreen22 கர்த்தர் தமது ஊழியக்காரரின் ஆத்துமாவை மீட்டுக்கொள்ளுகிறார்; அவரை நம்புகிற ஒருவன்மேலும் குற்றஞ்சுமராது.

Tamil Indian Revised Version
அவர் மனிதனைப் பூமியில் வைத்த ஆதிகாலமுதல் இப்படியிருக்கிறது என்பதையும் நீர் அறியீரோ?

Thiru Viviliam
⁽கொடியவரின் மகிழ்ச்சி நொடிப் பொழுதே!␢ கடவுளுக்கு அஞ்சாதவரின் களிப்பு␢ கணப்பொழுதே!⁾

யோபு 20:4யோபு 20யோபு 20:6

King James Version (KJV)
That the triumphing of the wicked is short, and the joy of the hypocrite but for a moment?

American Standard Version (ASV)
That the triumphing of the wicked is short, And the joy of the godless but for a moment?

Bible in Basic English (BBE)
That the pride of the sinner is short, and the joy of the evil-doer but for a minute?

Darby English Bible (DBY)
The exultation of the wicked is short, and the joy of the ungodly man but for a moment?

Webster’s Bible (WBT)
That the triumphing of the wicked is short, and the joy of the hypocrite but for a moment?

World English Bible (WEB)
That the triumphing of the wicked is short, The joy of the godless but for a moment?

Young’s Literal Translation (YLT)
That the singing of the wicked `is’ short, And the joy of the profane for a moment,

யோபு Job 20:5
அவர் மனுஷனைப் பூமியில் வைத்த ஆதிகாலமுதல் இப்படியிருக்கிறது என்பதையும் நீர் அறியீரோ?
That the triumphing of the wicked is short, and the joy of the hypocrite but for a moment?

That
כִּ֤יkee
the
triumphing
רִנְנַ֣תrinnatreen-NAHT
of
the
wicked
רְ֭שָׁעִיםrĕšāʿîmREH-sha-eem
is
short,
מִקָּר֑וֹבmiqqārôbmee-ka-ROVE
joy
the
and
וְשִׂמְחַ֖תwĕśimḥatveh-seem-HAHT
of
the
hypocrite
חָנֵ֣ףḥānēpha-NAFE
but
for
עֲדֵיʿădêuh-DAY
a
moment?
רָֽגַע׃rāgaʿRA-ɡa