சங்கீதம் 32 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 ⁽எவரது குற்றம் மன்னிக்கப்பட்டதோ,␢ எவரது பாவம் மறைக்கப்பட்டதோ,␢ அவர் பேறு பெற்றவர்.⁾2 ⁽ஆண்டவர் எந்த மனிதரின்␢ தீச்செயலை எண்ணவில்லையோ,␢ எவரது மனத்தில் வஞ்சம் இல்லையோ,␢ அவர் பேறுபெற்றவர்.⁾3 ⁽என் பாவத்தை அறிக்கையிடாதவரை,␢ நாள்முழுவதும் நான் கதறி அழுததால்,␢ என் எலும்புகள் கழன்று போயின.⁾4 ⁽ஏனெனில், இரவும் பகலும் உம் கை␢ எனக்கு எதிராக ஓங்கி நின்றது;␢ கோடையின் வறட்சிபோல␢ என் வலிமை வறண்டுபோயிற்று. (சேலா)⁾5 ⁽‛என் பாவத்தை உம்மிடம் அறிக்கையிட்டேன்;␢ என் தீச்செயலை நான் மறைத்ததில்லை;␢ ஆண்டவரிடம் என் குற்றங்களை␢ ஒப்புக்கொள்வேன்’ என்று சொன்னேன்.␢ நீரும் என் நெறிகேட்டையும்␢ பாவத்தையும் போக்கினீர். (சேலா)⁾6 ⁽ஆகவே, துன்ப வேளையில்␢ உம் அன்பர் அனைவரும்␢ உம்மை நோக்கி மன்றாடுவர்;␢ பெருவெள்ளம் பாய்ந்து வந்தாலும்␢ அவர்களை அது அணுகாது.⁾7 ⁽நீரே எனக்குப் புகலிடம்;␢ இன்னலினின்று என்னை நீர்␢ பாதுகாக்கின்றீர்;␢ உம் மீட்பினால் எழும் ஆரவாரம்␢ என்னைச் சூழ்ந்தொலிக்கச் செய்கின்றீர். (சேலா)⁾8 ⁽நான் உனக்கு அறிவு புகட்டுவேன்;␢ நீ நடக்க வேண்டிய வழியை␢ உனக்குக் காட்டுவேன்;␢ உன்னைக் கண்ணோக்கி,␢ உனக்கு அறிவுரை கூறுவேன்.⁾9 ⁽கடிவாளம் பூட்டி வாரினால் இழுத்தாலன்றி␢ உன்னைப் பின்தொடர்ந்து வராத␢ குதிரை போன்றோ கோவேறு␢ கழுதை போன்றோ அறிவிலியாய் இராதே!⁾10 ⁽பொல்லாருக்கு வரும் துன்பங்கள் பல;␢ ஆண்டவரில் நம்பிக்கை கொள்வோரை␢ அவரது பேரன்பு சூழ்ந்து நிற்கும்.⁾11 ⁽நீதிமான்களே, ஆண்டவரை முன்னிட்டு␢ அகமகிழுங்கள்; நேரிய உள்ளத்தோரே,␢ நீங்கள் அனைவரும் மகிழ்ந்து பாடுங்கள்.⁾சங்கீதம் 32 ERV IRV TRV