1 “தேவன் இல்லை” என்று மூடன் தன் உள்ளத்தில் சொல்லிக்கொள்வான். கொடிய, சீர்கெட்ட காரியங்களை மூடர்கள் செய்வார்கள். அவர்களுள் ஒருவனும் நல்லதைச் செய்வதில்லை.
2 கர்த்தர் பரலோகத்திலிருந்து கீழே ஜனங்களைப் பார்ப்பார். ஞானவானைப் பார்க்க கர்த்தர் முயன்றார். (ஞானமுள்ளவன் தேவனிடம் உதவி கேட்பான்.)
3 ஆனால் எல்லோரும் தேவனைவிட்டு விலகிப் போனார்கள். எல்லா ஜனங்களும் தீயோராய் மாறினார்கள். ஒருவன் கூட நல்லதைச் செய்யவில்லை.
4 தீயோர் என் ஜனங்களை அழித்தனர். அத்தீயோர் தேவனை அறியார்கள். தீயோருக்கு மிகுதியாய் உணவு உண்டு. கர்த்தரை அவர்கள் ஆராதிப்பதில்லை.
5 ஏழையின் அறிவுரையை அத்தீயோர் கேளார்கள். ஏனெனில் ஏழை தேவனை நம்பி வாழ்வான். தேவன் நல்லவர்களோடு இருப்பார். எனவே தீயோர் மிகவும் அச்சம் கொள்வார்கள்.
7 சீயோன் (மலை) மேல் உள்ளவரே இஸ்ரவேலைக் காப்பாற்ற முடியும். கர்த்தர் தாமே இஸ்ரவேலைக் காப்பவர்! கர்த்தருடைய ஜனங்கள் அழைத்துச் செல்லப்பட்டுச் சிறைக் கைதிகளாக்கப்பட்டனர். ஆனால் கர்த்தரோ தம் ஜனங்களைத் திரும்ப அழைத்து வருவார். அப்போது யாக்கோபுக்கு (இஸ்ரவேல்) மிகவும் மகிழ்ச்சியுண்டாகும்.
சங்கீதம் 14 ERV IRV TRV