மீகா 5 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 ⁽அரண்சூழ் நகரில் வாழும் மக்களே!␢ உங்கள் மதில்களுக்குப் பின்னால்␢ ஒளிந்து கொள்ளுங்கள்;␢ உங்களுக்கு எதிராக␢ முற்றுகையிடப்பட்டுள்ளது;␢ இஸ்ரயேலின் ஆளுநன்␢ கோலால் கன்னத்தில் அடி பெறுவான்.⁾2 ⁽நீயோ, எப்ராத்தா எனப்படும்␢ பெத்லகேமே!␢ யூதாவின் குடும்பங்களுள்␢ மிகச் சிறியதாய் இருக்கின்றாய்!␢ ஆயினும், இஸ்ரயேலை␢ என் சார்பாக ஆளப் போகின்றவர்␢ உன்னிடமிருந்தே தோன்றுவார்;␢ அவர் தோன்றும் வழி மரபோ␢ ஊழி ஊழிக் காலமாய் உள்ளதாகும்.⁾3 ⁽ஆதலால்,␢ பேறுகால வேதனையில் இருப்பவள்␢ பிள்ளை பெறும்வரை␢ அவர் அவர்களைக் கைவிட்டு விடுவார்;␢ அதன் பின்னர்␢ அவருடைய இனத்தாருள்␢ எஞ்சியிருப்போர்␢ இஸ்ரயேல் மக்களிடம்␢ திரும்பி வருவார்கள்.⁾4 ⁽அவர் வரும்போது,␢ ஆண்டவரின் வலிமையோடும்␢ தம் கடவுளாகிய ஆண்டவரது␢ பெயரின் மாட்சியோடும் விளங்கித்␢ தம் மந்தையை மேய்ப்பார்;␢ அவர்களும் அச்சமின்றி வாழ்வார்கள்;␢ ஏனெனில், உலகின்␢ இறுதி எல்லைகள்வரை␢ அப்போது அவர்␢ மேன்மை பொருந்தியவராய்␢ விளங்குவார்;⁾5 ⁽அவரே அமைதியை அருள்வார்.⁾⒯⁽அசீரியர் நம் நாட்டிற்குள்␢ படையெடுத்து வரும்போதும்,␢ நம் அரண்களை␢ அழித்தொழிக்கும்போதும்␢ அவர்களுக்கு எதிராக␢ மேய்ப்பர் எழுவரையும்␢ மக்கள் தலைவர் எண்மரையும்␢ நாம் கிளர்ந்தெழச் செய்வோம்.⁾6 ⁽அவர்கள் அசீரியா நாடு முழுவதையும்␢ நிம்ரோது நாட்டை␢ அதன் நுழைவாயில்கள் வரையிலும்␢ தங்கள் வாளுக்கு␢ இரையாக்குவார்கள்;␢ அசீரியர் நம் நாட்டிற்குள்␢ படையெடுத்து வரும் போதும்,␢ நம் எல்லைகளைக் கடந்து வரும்போதும்,␢ நம்மை அவர்களிடமிருந்து␢ விடுவிப்பார்கள்.⁾7 ⁽அப்போது யாக்கோபில் எஞ்சியிருப்போர்␢ ஆண்டவரிடமிருந்து வரும்␢ பனியைப் போலவும்␢ மனிதருக்காகக் காத்திராமலும்␢ மானிடர்க்காகத் தாமதிக்காமலும்,␢ புல்மேல் பெய்கின்ற␢ மழைத்துளிகள் போலவும்,␢ பல மக்களினங்களிடையே இருப்பார்கள்.⁾8 ⁽மேலும், யாக்கோபிலே எஞ்சியிருப்போர்␢ காட்டு விலங்குகளிடையே இருக்கும்␢ சிங்கம் போலவும்,␢ ஆட்டு மந்தைக்குள் நுழைந்து␢ யாரும் விடுவிக்க இயலாத நிலையில்␢ அவற்றை மிதித்துத்␢ துண்டு துண்டாய்க் கிழித்துப் போடும்␢ சிங்கக் குட்டி போலவும்,␢ பல மக்களினங்களிடையே இருப்பார்கள்.⁾9 ⁽உனது கை␢ உன்னுடைய பகைவர்களுக்கு மேலாக␢ உயர்த்தப்படும்;␢ உன்னுடைய எதிரிகள் அனைவரும்␢ அழிந்தொழிவார்கள்.⁾10 ⁽அந்நாளில், “நான் உன்னிடமுள்ள␢ உன் குதிரைகளை வெட்டி வீழ்த்துவேன்;␢ உன் தேர்ப்படையை அழித்தொழிப்பேன்”␢ என்கிறார் ஆண்டவர்.⁾11 ⁽“உன் நாட்டிலுள்ள நகர்களைத்␢ தகர்த்தெறிவேன்;␢ உன் அரண்கள் அனைத்தையும்␢ தரைமட்டமாக்குவேன்.⁾12 ⁽உன்னுடைய மாயவித்தைக்காரர்களை␢ ஒழித்துக்கட்டுவேன்;␢ குறிசொல்லுவோர்␢ உன்னிடம் இல்லாதொழிவர்.⁾13 ⁽நீ செய்து வைத்திருக்கும்␢ சிலைகளையும் படிமங்களையும்␢ உடைத்தெறிவேன்;␢ உன் கைவினைப் பொருள்கள்முன்␢ இனி நீ தலைவணங்கி நிற்கமாட்டாய்.⁾14 ⁽நீ நிறுத்தியிருக்கும் கம்பங்களைப்␢ பிடுங்கி எறிவேன்;␢ உன் நகரங்களை அழித்தொழிப்பேன்.⁾15 ⁽எனக்குச் செவி கொடாத␢ வேற்றினத்தார்மேல்␢ சினத்துடனும் கடும் சீற்றத்துடனும்␢ பழிதீர்த்துக் கொள்வேன்.”⁾மீகா 5 ERV IRV TRV