நியாயாதிபதிகள் 7 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 எருபாகால் என்ற கிதியோனும் அவருடன் இருந்த மக்கள் அனைவரும் அதிகாலையில் எழுந்து அரோது நீரூற்றருகே பாளையம் இறங்கினர். மிதியானியர் பாளையம் இவரது பாளையத்திற்கு வடக்கே மோரே மலை அருகே பள்ளத்தாக்கில் இறங்கி இருந்தது.2 ஆண்டவர் கிதியோனை நோக்கி, “உன்னுடன் இருக்கும் மக்கள் ஏராளமாக இருப்பதால், மிதியானியரை அவர்கள் கையில் ஒப்படைக்கமாட்டேன். இல்லையெனில், ‘எம் கையே எம்மைக் காத்தது’ என்று கூறி, இஸ்ரயேல் மக்கள் எனக்கெதிராகத் தற்பெருமை கொள்வர்.3 இப்பொழுது மக்கள் கேட்குமாறு நீ கூறவேண்டியது: போருக்கு அஞ்சி நடுங்குகின்றவன் போய்விடட்டும். கிலயாது மலையை விட்டகலட்டும்” என்றார். மக்களுடன் இருபத்திரண்டாயிரம் பேர் திரும்பிச் சென்றனர். பத்தாயிரம் பேர் எஞ்சி இருந்தனர்4 ஆண்டவர் கிதியோனிடம், “மக்கள் இன்னும் ஏராளமாக உள்ளனர். அவர்களை நீர்நிலைக்கு அழைத்துவா. அங்கே உனக்காக அவர்களைத் தேர்ந்தெடுப்பேன். ‘இவன் உன்னுடன் செல்வான்’ என்று யாரைக் குறித்து உன்னிடம் குறிப்பிடுகிறேனோ அவன் உன்னுடன் செல்வான்; ‘இவன் உன்னுடன் செல்லமாட்டான்’ என்று யாரைக் குறித்துக் குறிப்பிடுகிறேனோ, அவன் உன்னுடன் செல்லமாட்டான்” என்றார்.5 அவர் மக்களை நீர்நிலைக்கு அழைத்துச் சென்றார். ஆண்டவர் கிதியோனிடம், “நாய் போன்று நாக்கினால் நீரை நக்கிக் குடிப்பவர்களை எல்லாம் தனியாக நிறுத்து; முழங்காலில் மண்டியிட்டு நீரைக் குடிப்பவர்களை எல்லாம் தனியாக நிறுத்து” என்றார்.6 நாக்கினால் நக்கிக் குடித்தவர்களின்* எண்ணிக்கை முந்நூறு. மற்ற மக்கள் அனைவரும் நீர் அருந்த முழங்காலில் மண்டியிட்டனர்.7 ஆண்டவர் கிதியோனிடம், “நக்கிக் குடித்த முந்நூறு பேர் மூலம் நான் உங்களை விடுவிப்பேன். நான் மிதியானியரை உன் கையில் ஒப்படைப்பேன். மற்ற எல்லா மக்களும் தமக்குரிய வீடுகளுக்குச் செல்லட்டும்” என்றார்.8 அந்த முந்நூறு பேர் தங்கள் கைகளில் உணவுப் பொருள்களையும் தங்கள் எக்காளங்களையும் எடுத்துக் கொண்டனர். அவர் மற்ற எல்லா இஸ்ரயேலரையும் அவர்கள் கூடாரத்திற்கு அனுப்பிவிட்டு அந்த முந்நூறு பேரைத் தம்முடன் நிறுத்திக்கொண்டார். மிதியானியரின் பாளையம் அவர் இருந்த இடத்திற்குக் கீழே பள்ளத்தாக்கில் இருந்தது.⒫9 அவ்விரவில் ஆண்டவர் அவரிடம், “எழுந்து பாளையத்திற்குள் இறங்கிச் செல். நான் அதை உன்கையில் ஒப்படைத்துவிட்டேன்.10 ஆயினும், நீ போக அஞ்சினால், முதலில் பூரா என்ற உன் வேலையாளுடன் பாளையத்திற்குச் செல்.11 அவர்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பதை நீ உற்றுக்கேள். அதன்பின், உன் கைகள் வலுப்பெற, நீ பாளையத்திற்கு எதிராகச் செல்வாய்” என்றார். அவர் பூரா என்ற தம் வேலையாளுடன் பாளையத்தில் இருந்த போர்வீரர்களின் எல்லைக் காவலுக்குச் சென்றார்.12 மிதியானியரும் அமலேக்கியரும் கிழக்கில் வாழ்ந்த மக்கள் அனைவரும் வெட்டுக்கிளி போன்று ஏராளமாகப் பள்ளத்தாக்கில் தங்கியிருந்தனர். கடற்கரையில் உள்ள ஏராளமான மணலைப் போன்று அவர்கள் ஒட்டகங்களுக்கு எண்ணிக்கை இல்லை.13 கிதியோன் வந்து சேர்ந்தபொழுது, ஒருவன் தன் தோழனிடம் தன் கனவுபற்றிக் கூறிக் கொண்டிருந்தான். அவன் கூறியது: “நான் கனவு ஒன்று கண்டேன். வட்டமான ஒரு வாற்கோதுமை அப்பம் மிதியானியரின் பாளையத்திற்குச் சுழன்று வந்தது. அது கூடாரத்திற்கு வந்து அதன்மேல் மோதிக் கீழே விழுந்தது. அது கூடாரத்தைத் தலை கீழாகப் புரட்டியது. கூடாரம் கீழே விழுந்தது” என்றான்.14 அவன் தோழன் மறுமொழியாக, “இஸ்ரயேலனும் யோவாசின் மகனுமாகிய கிதியோனின் வாளைத் தவிர இது வேறொன்றுமில்லை. கடவுள் மிதியானியரையும் பாளையம் முழுவதையும் அவர் கையில் ஒப்படைத்துவிட்டார்” என்று கூறினான்.⒫15 கனவையும் அதன் பொருளையும் அவன் கூறக் கேட்டதும் கிதியோன் தலை வணங்கினார். பின்னர், இஸ்ரயேலின் பாளையத்திற்குத் திரும்பினார். “எழுங்கள், ஏனெனில், மிதியானியரின் பாளையத்தை ஆண்டவர் உங்கள் கையில் ஒப்படைத்துள்ளார்” என்றார்.16 அவர் முந்நூறு பேரையும் மூன்று பிரிவாகப் பிரித்தார். அவர்கள் அனைவரின் கையிலும் எக்காளங்களையும், காலிப் பானைகளையும், அந்தப் பானைகளுக்குள் வைக்க நெருப்புப் பந்தங்களையும் கொடுத்தார்.17 அவர்களிடம் அவர், என்னைப் பார்த்து நான் செய்வது போலச் செய்யுங்கள். நான் பாளையத்தின் எல்லைக்காவல் வரை செல்வேன். நான் செய்வதுபோல நீங்களும் செய்யுங்கள்.18 நான் எக்காளம் ஊதுவேன். நானும் என்னோடு உள்ளவர்களும் ஊதும்பொழுது நீங்கள் அனைவரும் பாளையத்தைச் சுற்றிலும் ஊதிக்கொண்டு, ‘ஆண்டவருக்காக! கிதியோனுக்காக!’ என்று கூறுங்கள்” என்றார்.19 நள்ளிரவுக் காவல் தொடங்கும் நேரத்தில் காவலர் மாற்றி நிறுத்தப்பட்டனர். அப்போது கிதியோனும் அவருடன் இருந்த நூறுபேரும் எல்லைக் காவலை அடைந்தனர். கிதியோனும் அவருடன் இருந்தவர்களும் எக்காளம் ஊதினர். தங்கள் கையிலிருந்த பானைகளை உடைத்தனர்.20 மூன்று பிரிவினரும் எக்காளம் ஊதினர். பானைகளை உடைத்தனர்; தங்கள் இடக்கையில் நெருப்புப் பந்தங்களையும், வலக்கையில் ஊதுவதற்கு எக்காளங்களையும் ஏந்தியிருந்தனர். அவர்கள், “ஆண்டவருக்காக! கிதியோனுக்காக! ஒரு வாள்!” என்று முழங்கினர்.21 பாளையத்தைச் சுற்றி ஒவ்வொருவனும் தன் இடத்தில் நின்றான். பாளையத்தில் இருந்த அனைவரும் ஓட்டமெடுத்தனர்; ஓலமிட்டுக் கொண்டு தப்பி ஓடினர்.22 அப்பொழுது முந்நூறு பேரும் எக்காளம் ஊதினர். ஆண்டவர் பாளையம் முழுவதிலும் ஒவ்வொருவனும் மற்றவன்மீது வாள்வீசச் செய்தார். பாளையத்தினர் செரேராவை நோக்கி பெத்சிற்றாவரையிலும் தபாத்தாவில் உள்ள ஆபல்மெகோலா எல்லைவரையிலும் தப்பி ஓடினர்.23 நப்தலியிலிருந்தும் ஆசேரிலிருந்தும் மனாசே முழுவதிலிருந்தும் இஸ்ரயேல் வீரர் ஒன்று திரட்டப்பட்டனர். அவர்கள் மிதியானியரைத் துரத்திச் சென்றனர்.24 கிதியோன் எப்ராயிம் மலையில் உள்ள அனைவருக்கும் தூதரை அனுப்பி, “மிதியானியரை எதிர்க்கக் கீழே இறங்கி வாருங்கள். பெத்பராவரை உள்ள நீரூற்றுகளையும் யோர்தானையும் கைப்பற்றுங்கள்” என்றார்.25 எப்ராயிம் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டனர். அவர்கள் பெத்பராவரை உள்ள நீரூற்றுகளையும் யோர்தானையும் கைப்பற்றினர். அவர்கள் ஓரேபு, செயேபு என்ற இரு மிதியானியத் தலைவர்களைச் சிறைப்பிடித்தனர். ஓரேபை ஓரெபாவில் உள்ள பாறை மேல் கொன்றனர். செயேபைச் செயேபில் உள்ள திராட்சை ஆலையில் கொன்றனர். அவர்கள் மிதியானியரை மிதியான்வரை துரத்திச்சென்றனர். ஓரேபின் தலையையும் செயேபின் தலையையும் யோர்தானுக்கு அப்பாலிருந்த கிதியோனிடம் கொண்டு வந்தனர்.