யோபு 6 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 யோபு கூறிய பதிலுரையாவது:2 ⁽ஓ! என் வேதனைகள்␢ உண்மையாகவே நிறுக்கப்பட்டு,␢ என் இன்னல்கள் அனைத்தும்␢ சீர்தூக்கப்படுமானால் நலமாயிருக்குமே!⁾3 ⁽கடற்கரை மணலிலும் இப்போது அவை␢ கனமானவை; பதற்றமான என்␢ சொற்களுக்குக் காரணமும் அதுவே;⁾4 ⁽எல்லாம் வல்லவரின் அம்புகள்␢ என்னில் தைத்துள்ளன; அவற்றின் நஞ்சு␢ என் உயிரைக் குடிக்கின்றது;␢ கடவுளின் அச்சுறுத்தல்கள்␢ எனக்கெதிராய் அணிவகுத்துள்ளன.⁾5 ⁽காட்டுக் கழுதைக்குப் புல் இருக்க,␢ அது கனைக்குமா?␢ காளைக்குத் தீனி இருக்க, அது கத்துமா?⁾6 ⁽சுவையற்றது உப்பின்றி உண்ணப்படுமா?␢ துப்பும் எச்சிலில் சுவை இருக்குமா?⁾7 ⁽அவற்றைத் தொட என் நெஞ்சம் மறுக்கிறது;␢ அவை எனக்கு அருவருப்புத்தரும் உணவாமே!⁾8 ⁽ஓ! என் வேண்டுதலுக்கு அருள்பவர் யார்?␢ நான் ஏங்குவதை␢ இறைவன் ஈந்திடமாட்டாரா?⁾9 ⁽அவர் என்னை நசுக்கிவிடக்கூடாதா?␢ தம் கையை நீட்டி எனைத் துண்டித்திடலாகாதா?⁾10 ⁽அதுவே எனக்கு ஆறுதலாகும்;␢ அழிக்கும் அல்லலிலும் அகமகிழ்வேன்;␢ தொடரும் துயரிலும் துள்ளி மகிழ்வேன்;␢ ஏனெனில் தூயவரின் சொற்களை␢ மறுத்தேனில்லை.⁾11 ⁽நான் இன்னும் பொறுத்திருக்க வலிமை ஏது?␢ என நெஞ்சம் காத்திருக்க நோக்கமேது?⁾12 ⁽என் வலிமை கல்லின் வலிமையோ?␢ என் சதை வெண்கலத்தாலானதோ?⁾13 ⁽இதோ! என்னில் உதவி ஏதுமில்லை;␢ என்னிலிருந்து உரம் நீக்கப்பட்டது.⁾14 ⁽அடுத்திருப்போர்க்கு கனிவு காட்டாதோர்␢ எல்லாம் வல்லவரையே புறக்கணிப்போர்.⁾15 ⁽காய்ந்துவிடும் காட்டாற்றுக்␢ கண்ணிகள் போலும் சிற்றாறுகள்போலும்␢ வஞ்சினத்தனர் என் உறவின் முறையார்.⁾16 ⁽அவற்றில் பனிக்கட்டி உருகிச் செல்லும்;␢ அவற்றின் மேற்பகுதியை␢ உறைபனி மூடி நிற்கும்.⁾17 ⁽வெப்பக் காலத்திலோ அவை␢ உருகி மறைந்துபோம்; வெயில் காலத்திலோ␢ அவை இடந்தெரியாது ஒழியும்.⁾18 ⁽வணிகர் கூட்டம் தம் வழியை மாற்றுகின்றது;␢ பாலையில் அலைந்து தொலைந்து மடிகின்றது.⁾19 ⁽தேடி நிற்கின்றனர் தேமாவின் வணிகர்;␢ நாடி நிற்கின்றனர் சேபாவின் வழிப்போக்கர்.⁾20 ⁽அவர்கள் நம்பியிருந்தனர்;␢ ஆனால், ஏமாற்றமடைகின்றனர்;␢ அங்கு வந்தடைந்தனர்;␢ ஆனால் திகைத்துப் போகின்றனர்.⁾21 ⁽இப்போது நீங்களும் எனக்கு␢ அவ்வாறே ஆனீர்கள்;␢ என் அவலம் கண்டீர்கள்;␢ அஞ்சி நடுங்குகின்றீர்கள்.⁾22 ⁽எனக்கு அன்பளிப்புத் தாரும் என்றோ,␢ உம் செல்வத்திலிருந்து␢ என் பொருட்டுக் கையூட்டுக் கொடும்␢ என்றோ சொன்னதுண்டா?⁾23 ⁽எதிரியின் கையினின்று␢ என்னைக் காப்பாற்றும் என்றோ,␢ கொடியவர் பிடியினின்று␢ என்னை மீட்டருளும் என்றோ␢ நான் எப்போதுதாவது வேண்டியதுண்டா?⁾24 ⁽அறிவு புகட்டுக! அமைதியடைவேன்;␢ என்ன தவறிழைத்தேன்? எடுத்துக்காட்டுக!⁾25 ⁽நேர்மையான சொற்கள்␢ எத்துணை ஆற்றலுள்ளவை? ஆனால்,␢ நீர் மெய்ப்பிப்பது எதை மெய்ப்பிக்கிறது?⁾26 ⁽என் வார்த்தைகளைக் கண்டிக்க␢ எண்ணலாமா? புலம்புவோரின்␢ சொற்கள் காற்றுக்கு நிகராமா?⁾27 ⁽திக்கற்றோர் மீது சீட்டுப் போடுவீர்கள்;␢ நண்பர்மீதும் பேரம் பேசுவீர்கள்.⁾28 ⁽பரிவாக இப்பொழுது என்னைப் பாருங்கள்;␢ உங்கள் முகத்திற்கெதிரே␢ உண்மையில் பொய் சொல்லேன்,⁾29 ⁽போதும் நிறுத்துங்கள்;␢ அநீதி செய்ய வேண்டாம்!␢ பொறுங்கள்! நீதி இன்னும் என் பக்கமே;⁾30 ⁽என் நாவில் அநீதி உள்ளதா? என்␢ அண்ணம் சுவையானதைப் பிரித்துணராதா?⁾