யோபு 41 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 ⁽தூண்டிலால் லிவியத்தனைத்␢ தூக்கிடுவாயோ? கயிற்றினால்␢ அதன் நாக்கினைக் கட்டிடுவாயோ?⁾2 ⁽அதன் மூக்கிற்குச் கயிறு இட␢ உன்னால் முடியுமோ? அதன் தாடையில்␢ கொக்கியினால் குத்த முடியுமோ?⁾3 ⁽வேண்டுகோள் பல␢ அது உன்னிடம் விடுக்குமோ?␢ கனிவாக உன்னிடம் கெஞ்சுமோ?⁾4 ⁽என்றும் உனக்கு ஏவல்புரிய␢ உன்னுடன் அது␢ உடன்படிக்கை செய்யுமோ?⁾5 ⁽பறவைபோல் துள்ளி அதனுடன்␢ ஆடுவாயா? உம் மகளிர்க்கென␢ அதனைக் கட்டிவைப்பாயா?⁾6 ⁽மீனவர் குழுவினர்␢ அதன்மேல் பேரம் பேசுவார்களோ?␢ அவர்கள் வணிகரிடையே␢ அதைக் கூறுபோடுவார்களோ?⁾7 ⁽கூரிய முட்களால் அதன் தோலையும்␢ மீன் எறி வேல்களால் அதன் தலையையும்␢ குத்தி நிரப்புவாயோ?⁾8 ⁽உன் கையை அதன்மேல் வைத்துப்பார்;␢ எழும் போராட்டத்தை மறக்கமாட்டாய்.␢ மீண்டும் அதைச் செய்ய மாட்டோம்.⁾9 ⁽இதோ! தொடுவோர் நம்பிக்கை␢ தொலைந்துபோம்; அதனைக் கண்டாலே␢ ஒருவர் கதிகலங்குவார்.⁾10 ⁽அதை எழுப்பும் வீரம் எவருக்கும் இல்லை;␢ பின்பு அதன்முன் நிற்கத் துணிபவர் யார்?⁾11 ⁽அதனை எதிர்த்து உயிரோடிருந்தவர்␢ எவராவது உண்டோ?␢ விண்ணகத்தின்கீழ்␢ அப்படிப்பட்டவர் யாருமில்லை!⁾12 ⁽அதன் உறுப்புகள், அதன் ஆற்றல்␢ அதன் அமைப்பின் அழகு␢ அனைத்தையும் பற்றி␢ அறிவிக்காது விடேன்.⁾13 ⁽அதன் மேல்தோலை உரிப்பவர் யார்?␢ அதன் தாடை இரண்டுக்குமிடையே␢ நுழைபவர் யார்?⁾14 ⁽அதன் முகத்தில் வாயிலைத் திறப்பவன் யார்?␢ அதன் பற்களைச் சூழ்ந்து பேரச்சமே உள்ளது.⁾15 ⁽அதன் முதுகு கேடய வரிசையாம்;␢ நெருங்க மூடி முத்திரை இடப்பட்டதாம்.⁾16 ⁽ஒன்றோடு ஒன்று ஒட்டி உள்ளது.␢ காற்றும் அதனிடையே கடந்திடாது;⁾17 ⁽ஒன்றோடு ஒன்றாய் இணைந்துள்ளன;␢ பிரிக்கமுடியாதவாறு␢ ஒன்றாய்ப் பிடித்துள்ளன.⁾18 ⁽துலங்கும் மின்னல் அதன் தும்மல்;␢ வைகறை இமைகள் அதன் கண்கள்.⁾19 ⁽அதன் வாயினின்று புறப்படுவது தீப்பிழம்பு;␢ அங்கிருந்து பறப்பது நெருப்புப் பொறிகளே.⁾20 ⁽நாணல் நெருப்புக்␢ கொதிகலனின்று வருவதுபோல்␢ அதன் நாசியினின்று புகை கிளம்பும்.⁾21 ⁽அதன் மூச்சு கரிகளைப் பற்றவைக்கும்;␢ அதன் வாயினின்று தீப்பிழம்பு கிளம்பிவரும்.⁾22 ⁽அதன் கழுத்தில் வலிமை வதிகின்றது;␢ நடுக்கம் அதன்முன் துள்ளியாடுகின்றது.⁾23 ⁽அதன் தசைமடிப்புகள் ஒட்டியிருக்கும்;␢ கெட்டியாயிருக்கும் அவற்றை␢ அசைக்க ஒண்ணாது.⁾24 ⁽அதன் நெஞ்சம் கல்லைப்போல்␢ கடினமானது;␢ திரிகையின் அடிக்கல்போல்␢ திண்மையானது.⁾25 ⁽அது எழும்பொழுதே␢ தெய்வங்கள் அஞ்சுகின்றன;␢ அது அறையவரும்போதே␢ நிலைகுலைகின்றன.⁾26 ⁽வாள் அதைத் தாக்கிடினும், ஊடுருவாது;␢ ஈட்டியோ அம்போ, எறிவேலோ␢ உட்செல்லாது.⁾27 ⁽இரும்பை அது துரும்பெனக் கருதும்;␢ வெண்கலத்தை உளுத்த கட்டையெனக்␢ கொள்ளும்.⁾28 ⁽வில்வீரன் அதை விரட்ட முடியாது;␢ கவண் கல்லும் கூளம்போல் ஆகுமே.⁾29 ⁽பெருந்தடியைத் தாளடி எனக்கருதும்;␢ எறிவேல் ஒலிகேட்டு எள்ளி நகைக்கும்.⁾30 ⁽அதன் வயிற்றுப்புறம்␢ ஒட்டுத் துண்டுகளின் அடுக்கு;␢ அது சேற்றில் படுத்துக்கிடக்கையில்␢ பரம்புக் கட்டை.⁾31 ⁽கொதிகலமென அது␢ கடலைப் பொங்கச் செய்யும்;␢ தைலச் சட்டியென அது␢ ஆழியைக் கொப்பளிக்கச் செய்யும்.⁾32 ⁽அது போனபிறகு பாதை பளபளக்கும்;␢ கடலே நரைத்ததெனக் கருதத்தோன்றும்.⁾33 ⁽அகிலத்தில் அதற்கு இணையானது இல்லை;␢ அச்சம் கொண்டிலாப் படைப்பு அதுவே.⁾34 ⁽செருக்குற்ற படைப்பு␢ அனைத்தையும் ஏளனமாய் நோக்கும்;␢ வீறுகொண்ட விலங்குகட்கு␢ வேந்தனும் அதுவே.⁾யோபு 41 ERV IRV TRV