1 ⁽கண்களோடு நான் உடன்படிக்கை␢ செய்துகொண்டேன்; பின்பு,␢ கன்னி ஒருத்தியை எப்படி நோக்குவேன்?⁾

2 ⁽வானின்று கடவுள் வழங்கும் பங்கென்ன?␢ விசும்பினின்று எல்லாம் வல்லவர்␢ விதிக்கும் உரிமையென்ன?⁾

3 ⁽தீயோர்க்கு வருவது கேடு அல்லவா?␢ கொடியோர்க்கு வருவது அழிவு அல்லவா?⁾

4 ⁽என் வழிகளை அவர் பார்ப்பதில்லையா?␢ என் காலடிகளை அவர்␢ கணக்கிடுவதில்லையா?⁾

5 ⁽பொய்ம்மையை நோக்கி நான் போயிருந்தால்,␢ வஞ்சகத்தை நோக்கி␢ என் காலடி விரைந்திருந்தால்,⁾

6 ⁽சீர்தூக்கும் கோலில் எனை அவர்␢ நிறுக்கட்டும்; இவ்வாறு கடவுள்␢ என் நேர்மையை அறியட்டும்.⁾

7 ⁽நெறிதவறி என் காலடி போயிருந்தால்,␢ கண்ணில் பட்டதையெல்லாம்␢ என் உள்ளம் நாடியிருந்தால்,␢ என் கைகளில் கறையேதும் படிந்திருந்தால்,⁾

8 ⁽நான் விதைக்க,␢ இன்னொருவர் அதனை உண்ணட்டும்;␢ எனக்கென வளர்பவை␢ வேரொடு பிடுங்கப்படட்டும்.⁾

9 ⁽பெண்ணில் என் மனம்␢ மயங்கியிருந்திருந்தால்;␢ பிறரின் கதவருகில் காத்துக்கிடந்திருந்தால்,⁾

10 ⁽என் மனைவி␢ மற்றொருவனுக்கு மாவரைக்கட்டும்;␢ மற்றவர்கள் அவளோடு படுக்கட்டும்.⁾

11 ⁽ஏனெனில், அது தீச்செயல்;␢ நடுவரின் தண்டனைக்குரிய பாதகம்.⁾

12 ⁽ஏனெனில் படுகுழிவரை சுட்டெரிக்கும்␢ நெருப்பு அது; வருவாய் அனைத்தையும்␢ அடியோடு அழிக்கும் தீ அது.⁾

13 ⁽என் வேலைக்காரனோ, வேலைக்காரியோ␢ எனக்கெதிராய் வழக்குக் கொணரும்போது␢ நான் அதைத் தட்டிக் கழித்திருந்தால்,⁾

14 ⁽இறைவன் எனக்கெதிராய் எழும்போது␢ நான் என்ன செய்வேன்?␢ அவர் என்னிடம் கணக்குக் கேட்டால்␢ நான் என்ன பதிலளிப்பேன்?⁾

15 ⁽கருப்பையில் என்னை உருவாக்கியவர்தாமே␢ அவனையும் உருவாக்கினார்.␢ கருப்பையில் எங்களுக்கு வடிவளித்தவர்␢ அவர் ஒருவரே அல்லவோ?⁾

16 ⁽ஏழையர் விரும்பியதை ஈய␢ இணங்காது இருந்தேனா?␢ கைப்பெண்டிரின் கண்கள்␢ பூத்துப்போகச் செய்தேனா?⁾

17 ⁽என் உணவை நானே தனித்து உண்டேனா?␢ தாய் தந்தையற்றோர்␢ அதில் உண்ணாமல் போயினரா?⁾

18 ⁽ஏனெனில், குழந்தைப் பருவமுதல்␢ அவர் என்னைத் தந்தைபோல் வளர்த்தார்␢ ; என் தாய்வயிற்றிலிருந்து என்னை வழி நடத்தினார்.⁾

19 ⁽ஆடையில்லாமல் எவராவது அழிவதையோ␢ போர்வையின்றி ஏழை எவராவது இருந்ததையோ␢ பார்த்துக்கொண்டு இருந்தேனா?⁾

20 ⁽என் ஆட்டுமுடிக் கம்பளியினால்␢ குளிர்போக்கப்பட்டு, அவர்களின் உடல்␢ என்னைப் பாராட்டவில்லையா?⁾

21 ⁽எனக்கு மன்றத்தில் செல்வாக்கு உண்டு␢ எனக்கண்டு, தாய் தந்தையற்றோர்க்கு␢ எதிராகக் கைஓங்கினேனா?⁾

22 ⁽அப்படியிருந்திருந்தால், என் தோள்மூட்டு␢ தோளிலிருந்து நெகிழ்வதாக!␢ முழங்கை மூட்டு முறிந்து கழல்வதாக!⁾

23 ⁽ஏனெனில், இறைவன் அனுப்பும் இடர்␢ எனக்குப் பேரச்சம்; அவர் மாட்சிக்குமுன்␢ என்னால் எதுவும் இயலாது.⁾

24 ⁽தங்கத்தில் நான் நம்பிக்கை வைத்திருந்தேனாகில்,␢ ‘பசும்பொன் என்உறுதுணை ‘ என்று பகர்ந்திருப்பேனாகில்,⁾

25 ⁽செல்வப் பெருக்கினால், அல்லது␢ கை நிறையப் பெற்றதால்␢ . நான் மகிழ்திருப்பேனாகில்,⁾

26 ⁽சுடர்விடும் கதிரவனையும்␢ ஒளியில் தவழும் திங்களையும் நான் கண்டு,⁾

27 ⁽என் உள்ளம் மறைவாக மயங்கியிருந்தால்,␢ அல்லது, என் வாயில் கை வைத்து␢ முத்தமிட்டிருந்தால்,⁾

28 ⁽அதுவும் நடுவர் தீர்ப்புக்குரிய.␢ பழியாய் இருக்கும்; ஏனெனில்,␢ அது உன்னத இறைவனை நான் மறுப்பதாகும்.⁾

29 ⁽என்னை வெறுப்போரின் அழிவில்␢ நான் மகிழ்ந்ததுண்டா? அல்லது␢ அவர்கள் இடர்படும் போது இன்புற்றதுண்டா?⁾

30 ⁽சாகும்படி அவர்களைச் சபித்து,␢ என் வாய் பாவம் செய்ய நான் விடவில்லை.⁾

31 ⁽‘இறைச்சி உண்டு நிறைவு அடையாதவர்␢ யாரேனும் உண்டோ?’ என்று␢ என் வீட்டார் வினவாமல் இருந்ததுண்டா?⁾

32 ⁽வீதியில் வேற்றார் உறங்கியதில்லை;␢ ஏனெனில், வழிப்போக்கருக்கு␢ என் வாயிலைத் திறந்து விட்டேன்.⁾

33 ⁽என் தீச்செயலை உள்ளத்தில் புதைத்து,␢ என் குற்றங்களை மானிடர்போல்␢ மறைத்ததுண்டா?⁾

34 ⁽பெருங்கும்பலைக் கண்டு நடுங்கி,␢ உறவினர் இகழ்ச்சிக்கு அஞ்சி,␢ நான் வாளாவிருந்ததுண்டா?␢ கதவுக்கு வெளியே வராதிருந்தது உண்டா?⁾

35 ⁽என் வழக்கைக் கேட்க ஒருவர் இருந்தால்␢ எத்துணை நன்று! இதோ!␢ என் கையொப்பம்; எல்லாம் வல்லவர்␢ எனக்குப் பதில் அளிக்கட்டும்!␢ என் எதிராளி வழக்கை எழுதட்டும்.⁾

36 ⁽உண்மையாகவே அதை␢ என் தோள்மேல் தூக்கிச்செல்வேன்!␢ எனக்கு மணி முடியாகச் சூட்டிக்கொள்வேன்.⁾

37 ⁽என் நடத்தை முழுவதையுமே␢ அவருக்கு எடுத்துரைப்பேன்;␢ இளவரசனைப்போல்␢ அவரை அணுகிச் செல்வேன்.⁾

38 ⁽எனது நிலம் எனக்கெதிராயக் கதறினால்,␢ அதன் படைச்சால்கள் ஒன்றாக அழுதால்,⁾

39 ⁽விலைகொடாமல்␢ அதன் விளைச்சலை உண்டிருந்தால்,␢ அதன் உரிமையாளரின்␢ உயிரைப் போக்கியிருந்தால்,⁾

40 ⁽கோதுமைக்குப் பதில் முட்களும்,␢ வாற்கோதுமைக்கு பதில்␢ களையும் வளரட்டும்.␢ யோபின் மொழிகள் முடிவுற்றன.⁾

யோபு 31 ERV IRV TRV