1 ⁽என் உள்ளம் என் வாழ்வை␢ அருவருக்கின்றது; என் ஆற்றாமையைத்␢ தாராளமாய்க் கொட்டித் தீர்ப்பேன்;␢ உள்ளத்தில் கசப்பினை␢ நான் உரைத்திடுவேன்.⁾

2 ⁽நான் கடவுளிடம் சொல்வேன்;␢ என்னைக் கண்டனம் செய்யாதீர்;␢ என் மீது நீர் சாட்டும் குற்றத்தின் காரணம்␢ என்னவெனச் சாற்றுவீர்.⁾

3 ⁽என்னை ஒடுக்குவதும்␢ உமது கையின் படைப்பை இகழ்வதும்␢ உலுத்தர் சூழ்ச்சியில் உளம் மகிழ்வதும்␢ உமக்கு அழகாமோ?⁾

4 ⁽ஊனக் கண்களா உமக்கு உள்ளன?␢ உண்மையில்,␢ மானிடப்பார்வையா உமது பார்வை?⁾

5 ⁽மானிட நாள்கள் போன்றவோ உம் நாள்கள்?␢ மனிதரின் வாழ்நாள் அனையவோ␢ உம் ஆண்டுகள்?⁾

6 ⁽பின், ஏன் என் குற்றங்களைத்␢ துருவிப் பார்க்கிறீர்? ஏன்␢ என் பாவங்களைக் கிளறுகின்றீர்?⁾

7 ⁽நான் குற்றமற்றவன் என நீர் அறிந்தாலும்,␢ உம் கையினின்று என்னைத்␢ தப்புவிப்பவர் ஒருவருமில்லை.⁾

8 ⁽என்னை வனைந்து வடிவமைத்து␢ உண்டாக்கின உம் கைகள்; இருப்பினும்,␢ நீரே என்னை அழிக்கின்றீர்.⁾

9 ⁽தயைகூர்ந்து நினைத்துப் பாரும்!␢ களிமண்போல் என்னை வனைந்தீர்;␢ அந்த மண்ணுக்கே என்னைத்␢ திரும்பச் செய்வீரோ?⁾

10 ⁽பால்போல் என்னை நீர் வார்க்கவில்லையா?␢ தயிர்போல் என்னை நீர்␢ உறைவிக்கவில்லையா?⁾

11 ⁽எலும்பும் தசைநாரும் கொண்டு␢ என்னைப் பின்னினீர்;␢ தோலும் சதையும் கொண்டு␢ என்னை உடுத்தினீர்.⁾

12 ⁽வாழ்வையும் இரக்கத்தையும்␢ எனக்கு வழங்கினீர்; என் உயிர் மூச்சை␢ உம் கரிசனை காத்தது.⁾

13 ⁽எனினும், இவற்றை உம் உள்ளத்தில்␢ ஒளித்திருந்தீர்; இதுவே உம் மனத்துள்␢ இருந்ததென நான் அறிவேன்.⁾

14 ⁽நான் பாவம் செய்தால்,␢ என்னைக் கவனிக்கிறீர்;␢ என் குற்றத்தை எனக்குச்␢ சுட்டிக்காட்டாது விடமாட்டீர்;␢ நான் குற்றம் புரிந்தால்␢ அதை என்மீது சுமத்தாது விடீர்.⁾

15 ⁽நான் தீங்கு செய்தால், ஐயோ ஒழிந்தேன்!␢ நான் நேர்மையாக இருந்தாலும்␢ தலைதூக்க முடியவில்லை; ஏனெனில்,␢ வெட்கம் நிறைந்தாலும்␢ வேதனையில் உள்ளேன்.⁾

16 ⁽தலைநிமிர்ந்தால் அரிமாபோல்␢ என்னை வேட்டையாடுவீர்;␢ உம் வியத்தகு செயல்களை␢ எனக்கெதிராய்க் காட்டுவீர்;⁾

17 ⁽எனக்கெதிராய்ச் சான்றுகளைப்␢ புதுப்பிக்கிறீர்; என்மீது␢ உமது சீற்றத்தைப் பெருக்குகிறீர்;␢ எனக்கெதிராய்ப் போராட்டத்தைப்␢ புதிதாக எழுப்புகிறீர்.⁾

18 ⁽கருப்பையிலிருந்து என்னை␢ ஏன் வெளிக் கொணர்ந்தீர்?␢ கண் ஏதும் என்னைக் காணுமுன்பே␢ நான் இறந்திருக்கலாகாதா?⁾

19 ⁽உருவாகாதவன் போலவே␢ இருந்திருக்கக்கூடாதா?␢ கருவறையிலிருந்தே␢ கல்லறைக்குப் போயிருப்பேனே;⁾

20 ⁽என்னுடைய நாள்கள் சிலமட்டுமே;␢ என்னிடமிருந்து எட்டி நிற்பீரானால்,␢ மணித்துளி நேரமாவது மகிழ்ந்திருப்பேன்;⁾

21 ⁽பின்னர், இருளும் இறப்பின் நிழலும் சூழ்ந்த␢ திரும்ப இயலாத நாட்டிற்குப் போவேன்.⁾

22 ⁽அது காரிருளும் சாவின் நிழலும் சூழ்ந்த␢ இருண்ட நாடு; அங்கு ஒழுங்கில்லை;␢ ஒளியும் இருள்போல் இருக்கும்.⁾

யோபு 10 ERV IRV TRV