ஏசாயா 46 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 ⁽பேல் கூனிக் குறுகுகின்றது;␢ நெபோ குப்புற வீழ்கின்றது;␢ அவற்றின் சிலைகள்␢ காட்டு விலங்குகள் மீதும்␢ கால்நடைகள் மீதும்␢ சுமத்தப்படுகின்றன;␢ நீங்கள் பவனி எடுத்தவை பாரம் ஆயின;␢ களைத்துப்போன விலங்குகளுக்குச்␢ சுமையாயின.⁾2 ⁽அவை ஒருங்கே குப்புற வீழ்கின்றன;␢ கூனிக் குறுகுகின்றன;␢ தங்களைச் சுமந்தவர்களை␢ அவற்றால் விடுவிக்க இயலவில்லை;␢ அவையும் நாடுகடத்தலுக்கு உள்ளாயின.⁾3 ⁽யாக்கோபு வீட்டாரே,␢ இஸ்ரயேல் குடும்பத்தாருள்␢ எஞ்சியிருக்கும் அனைத்து மக்களே,␢ செவிகொடுங்கள்;␢ உதரத்திலிருந்தே உங்களைத்␢ தாங்குபவர் நான்,␢ கருவிலிருந்தே உங்களைச்␢ சுமப்பவர் நான்.⁾4 ⁽உங்கள் முதுமைவரைக்கும்␢ நான் அப்படியே இருப்பேன்;␢ நரை வயதுவரைக்கும்␢ நான் உங்களைச் சுமப்பேன்;␢ உங்களை உருவாக்கிய நானே␢ உங்களைத் தாங்குவேன்;␢ நானே உங்களைச் சுமப்பேன்;␢ நானே விடுவிப்பேன்.⁾5 ⁽யாருக்கு என்னை நிகராக்குவீர்கள்?␢ யாருக்கு என்னை இணையாக்குவீர்கள்?␢ யாருக்கு நிகராக␢ என்னை ஒப்பிடுவீர்கள்?⁾6 ⁽மக்கள் தம் பையைத் திறந்து␢ பொன்னைக் கொட்டுகிறார்கள்;␢ தராசில் வெள்ளியை␢ நிறுத்துப் பார்க்கிறார்கள்;␢ பொற்கொல்லனைக் கூலிக்கு␢ அமர்த்துகிறார்கள்;␢ அவன் அதைத் தெய்வமாகச் செய்கிறான்;␢ பின் அதன்முன் வீழ்ந்து␢ வழிபடுகிறார்கள்.⁾7 ⁽அதைத் தூக்கித்␢ தோள்மேல் சுமந்து போகின்றனர்;␢ அதற்குரிய இடத்தில்␢ அதை நிலைநிறுத்தி வைக்கின்றனர்;␢ அது அங்கேயே நிற்கிறது;␢ தன் இடத்திலிருந்து அது பெயராது;␢ எவன் அதனிடம் கூக்குரல் எழுப்பினாலும்␢ அது மறுமொழி தராது;␢ அவன் துயரத்திலிருந்து␢ அவனை விடுவிப்பதுமில்லை.⁾8 ⁽கலகம் செய்வோரே,␢ இதை நினைவில் கொள்ளுங்கள்;␢ கவனத்தில் வையுங்கள்.⁾9 ⁽தொன்றுதொட்டு நிகழ்ந்தவற்றை␢ நினைத்துப் பாருங்கள்;␢ நானே இறைவன்;␢ என்னையன்றி வேறு கடவுள் இல்லை;␢ என்னைப் போன்று வேறு எவரும் இல்லை.⁾10 ⁽பின் நிகழவிருப்பதைத்␢ தொடக்கத்திலே நான் அறிவித்தேன்;␢ இனி நடப்பனவற்றை␢ பண்டைக் காலத்திலேயே␢ முன்னுரைத்தேன்;␢ “என் திட்டம் நிலைத்திருக்கும்;␢ என் விருப்பத்தை நிறைவேற்றுவேன்”␢ என்றுரைத்தேன்.⁾11 ⁽இரைமேல் பாயும் பறவையைக்␢ கிழக்கிலிருந்து அழைக்கிறேன்;␢ என் திட்டத்தைச் செயல்படுத்தும்␢ ஒருவனைத்␢ தொலைநாட்டிலிருந்து வரவழைக்கிறேன்;␢ சொல்லியவன் நான்;␢ நானே அதை நிறைவேற்றுவேன்;␢ திட்டமிட்டவன் நான்;␢ நானே அதைச் செயல்படுத்துவேன்.⁾12 ⁽கடின மனத்தோரே,␢ வெற்றிக்கு வெகு தொலைவில்␢ இருப்போரே,␢ செவி கொடுங்கள்.⁾13 ⁽என் வெற்றியை␢ அருகில் வரவழைத்துள்ளேன்;␢ அது தொலையில் இல்லை,␢ என் விடுதலை காலம் தாழ்த்தாது;␢ சீயோனுக்கு நான்␢ விடுதலை வழங்குகின்றேன்;␢ இஸ்ரயேலில் என் மாட்சி␢ நிலைக்கச் செய்வேன்.⁾