எசேக்கியேல் 41

fullscreen1 பின்பு அவர் என்னை தேவாலயத்திற்கு அழைத்துக்கொண்டுபோய், தூணாதாரங்களை இந்தப்புறத்தில் ஆறுமுழ அகலமும் அந்தப்புறத்தில் ஆறுமுழ அகலமுமாய் அளந்தார்; அது வாசஸ்தலத்தின் அகல அளவாம்.

fullscreen2 வாசல் நடையின் அகலம் பத்துமுழமும் வாசல் நடையின் பக்கங்கள் இந்தப்புறத்தில் ஐந்து முழமும் அந்தப் புறத்தில் ஐந்து முழமுமாயிருந்தது; அதின் நீளத்தை நாற்பது முழமும் அகலத்தை இருபது முழமுமாக அளந்தார்.

fullscreen3 பின்பு அவர் உள்ளேபோய் வாசல் நடையின் தூணாதாரங்களை இரண்டு முழமாகவும், வாசல் நடையை ஆறுமுழமாகவும், வாசல் நடையின் அகலத்தை ஏழுமுழமாகவும் அளந்தார்.

fullscreen4 பின்பு அவர் தேவாலயத்தின் முன்புறத்திலே அதின் நீளத்தை இருபதுமுழமாகவும், அதின் அகலத்தை இருபது முழமாகவும் அளந்து, என்னை நோக்கி: இது மகா பரிசுத்த ஸ்தலம் என்றார்.

fullscreen5 பின்பு அவர் ஆலயத்தின் சுவரை ஆறு முழமாகவும், ஆலயத்தை சுற்றிலும் இருந்த சுற்றுக்கட்டினுடைய அகலத்தை நாலுமுழமாகவும் அளந்தார்.

fullscreen6 இந்தச் சுற்றுக்கட்டுகள் பக்கக்கட்டின்மேல் பக்கக்கட்டான வரிசைகளாய் முப்பத்துமூன்று இருந்தது; அவைகள் ஆலயத்தின் சுவருக்குள் ஊன்றியிராமல், சுற்றுக்கட்டுகளுக்காகச் சுற்றிலும் அவைகள் ஊன்றும்படிக்கு ஆலயத்துக்கு அடுத்திருந்த ஒட்டுச்சுவரிலே பாய்ந்திருந்தது.

fullscreen7 உயர உயரச் சுற்றிலும் சுற்றுக்கட்டுகளுக்கு அகலம் அதிகமாயிருந்தது; ஆலயத்தைச் சுற்றிலும் உயர உயர ஆலயத்தைச் சுற்றிச் சுற்றி அகலம் வரவர அதிகமாயிருந்தது; ஆதலால் இவ்விதமாய்க் கீழ்நிலையிலிருந்து நடுநிலைவழியாய் மேல்நிலைக்கு ஏறும் வழியிருந்தது.

fullscreen8 மாளிகைக்குச் சுற்றிலும் இருந்த உயரத்தையும் பார்த்தேன், சுற்றுக்கட்டுகளின் அஸ்திபாரங்கள் ஆறு பெரிய முழங்கொண்ட ஒரு முழக்கோலின் உயரமாயிருந்தது.

fullscreen9 புறம்பே சுற்றுக்கட்டுக்கு இருந்த சுவரின் அகலம் ஐந்துமுழமாயிருந்தது. ஆலயத்துக்கு இருக்கும் சுற்றுக்கட்டுகளின் மாளிகையிலே வெறுமையாய் விட்டிருந்த இடங்களும் அப்படியே இருந்தது.

fullscreen10 ஆலயத்தைச் சுற்றிலும் அறைவீடுகளுக்கு நடுவாக இருந்த விசாலம் இருபது முழமாயிருந்தது.

fullscreen11 சுற்றுக்கட்டினுடைய வாசல் நடைகள், வெறுமையாய் விட்டிருந்த இடங்களிலிருந்து, ஒரு வாசல் நடை வடக்கேயும், ஒரு வாசல்நடை தெற்கேயும் இருந்தது; வெறுமையாய் விட்டிருந்த இடங்களின் விசாலம் சுற்றிலும் ஐந்து முழமாயிருந்தது.

fullscreen12 மேற்றிசையிலே பிரத்தியேகமான இடத்துக்கு முன்னிருந்த மாளிகைமட்டும் அகலம் எழுபது முழமும், மாளிகையினுடைய சுவரின் அகலம் சுற்றிலும் ஐந்து முழமும், அதினுடைய நீளம் தொண்ணூறு முழமுமாயிருந்தது.

fullscreen13 அவர் ஆலயத்தை நூறுமுழ நீளமாகவும், பிரத்தியேகமான இடத்தையும் மாளிகையையும் அதின் சுவர்களையும் நூறு முழ நீளமாகவும் அளந்தார்.

fullscreen14 ஆலயத்தின் முற்புறமும் கிழக்குக்கு எதிரான பிரத்தியேகமான இடமும் இருந்த அகலம் நூறுமுழமுமாயிருந்தது.

fullscreen15 பிரத்தியேகமான இடத்தின் பின்புறமாக அதற்கு எதிரே இருந்த மாளிகையின் நீளத்தையும், அதற்கு இந்தப்புறத்திலும் அந்தப்புறத்திலும் இருந்த நடைகாவணங்களையும் அளந்தார்; உள்ளான தேவாலயமும் முற்றத்தின் மண்டபங்களும் உட்பட நூறுமுழமாயிருந்தது.

fullscreen16 வாசற்படிகளும், ஒடுக்கமான ஜன்னல்களும், மூன்று பக்கங்களில் சுற்றிலும் வாசல்களுக்கு எதிரான நடைகாவணங்களும் சுற்றிலும் தரைதுவக்கி ஜன்னல்கள் மட்டாகப் பலகை அடித்திருந்தது; ஜன்னல்கள் மூடப்பட்டிருந்தது.

fullscreen17 வாசலின் மேலேதுவக்கி ஆலயத்தின் உட்புறமும் வெளிப்புறமும் சுற்றிலும் சுவரின் உட்புறமும் வெளிப்புறமும் எல்லாம் அளவிட்டிருந்தது.

fullscreen18 கேருபீன்களும் பேரீச்சமரங்களும் சித்திரிக்கப்பட்டிருந்தது; கேருபீனுக்கும் கேருபீனுக்கும் நடுவாக ஒவ்வொரு பேரீச்சமரம் இருந்தது; ஒவ்வொரு கேருபீனுக்கும் இரண்டிரண்டு முகங்கள் இருந்தது.

fullscreen19 பேரீச்சமரத்துக்கு இந்தண்டையில் மனுஷமுகமும், பேரீச்சமரத்துக்கு அந்தண்டையில் சிங்கமுகமும் இருந்தது; இப்படி ஆலயத்தைச் சுற்றிலும் செய்திருந்தது.

fullscreen20 தரைதுவக்கி வாசலின் மேற்புறமட்டும், தேவாலயத்தின் சுவரிலும், கேருபீன்களும் பேரீச்சமரங்களும் சித்திரிக்கப்பட்டிருந்தது.

fullscreen21 தேவாலயத்தின் கதவு நிலைகள் சதுரமும், பரிசுத்த ஸ்தலத்தினுடைய முகப்பின் உருவம் அந்த உருவத்துக்குச் சரியுமாயிருந்தது.

fullscreen22 மரத்தினால் செய்யப்பட்ட பலிபீடத்தின் உயரம் மூன்று முழமும், அதின் நீளம் இரண்டு முழமுமாயிருந்தது; அதின் கோடிகளும் அதின் விளிம்புகளும் அதின் பக்கங்களும் மரத்தினால் செய்யப்பட்டிருந்தது; அவர் என்னை நோக்கி: இது கர்த்தருடைய சந்நிதியிலிருக்கிற பீடம் என்றார்.

fullscreen23 தேவாலயத்துக்கும் பரிசுத்த ஸ்தலத்துக்கும் இரண்டு வாசல்களும்,

fullscreen24 வாசல்களுக்கு மடக்குக் கதவுகளாகிய இரட்டைக் கதவுகளும் இருந்தது; வாசலுக்கு இரண்டு கதவுகளும் மற்ற வாசலுக்கு இரண்டு கதவுகளும் இருந்தது.

fullscreen25 சுவர்களில் சித்திரிக்கப்பட்டிருந்ததுபோல் ஆலயத்தினுடைய கதவுகளிலும் கேருபீன்களும் பேரீச்சமரங்களும் சித்திரிக்கப்பட்டிருந்தது; புறம்பே மண்டபத்தின் முன்பாக உத்திரங்கள் வைத்திருந்தது.

fullscreen26 மண்டபத்தின் பக்கங்களில் இந்தப்புறத்திலும் அந்தப்புறத்திலும், ஆலயத்தின் சுற்றுக்கட்டுகளிலும் ஒடுக்கமான ஜன்னல்களும் சித்தரிக்கப்பட்ட பேரீச்சமரங்களும் உத்திரங்களும் இருந்தது.

Tamil Indian Revised Version
கர்த்தாவே, நான் எவ்வளவாக நிலையற்றவன் என்று உணரும்படி என்னுடைய முடிவையும், என்னுடைய நாட்களின் அளவு இவ்வளவு என்பதையும் எனக்குத் தெரிவியும்.

Tamil Easy Reading Version
கர்த்தாவே, எனக்கு என்ன நேரிடும்? எத்தனை காலம் நான் வாழ்வேன் என எனக்குச் சொல்லும். என் ஆயுள் எவ்வளவு குறுகியதென எனக்குத் தெரியப்படுத்தும்.

Thiru Viviliam
⁽‛ஆண்டவரே! என் முடிவு பற்றியும்␢ என் வாழ்நாளின் அளவு பற்றியும்␢ எனக்கு அறிவுறுத்தும்.␢ அப்போது, நான் எத்துணை நிலையற்றவன்␢ என உணர்ந்து கொள்வேன்.⁾

சங்கீதம் 39:3சங்கீதம் 39சங்கீதம் 39:5

King James Version (KJV)
LORD, make me to know mine end, and the measure of my days, what it is: that I may know how frail I am.

American Standard Version (ASV)
Jehovah, make me to know mine end, And the measure of my days, what it is; Let me know how frail I am.

Bible in Basic English (BBE)
Lord, give me knowledge of my end, and of the measure of my days, so that I may see how feeble I am.

Darby English Bible (DBY)
Make me to know, Jehovah, mine end, and the measure of my days, what it is: I shall know how frail I am.

Webster’s Bible (WBT)
My heart was hot within me, while I was musing the fire burned: then I spoke with my tongue.

World English Bible (WEB)
“Yahweh, show me my end, What is the measure of my days. Let me know how frail I am.

Young’s Literal Translation (YLT)
`Cause me to know, O Jehovah, mine end, And the measure of my days — what it `is’,’ I know how frail I `am’.

சங்கீதம் Psalm 39:4
கர்த்தாவே, நான் எவ்வளவாய் நிலையற்றவன் என்று உணரும்படி என் முடிவையும், என் நாட்களின் அளவு இவ்வளவு என்பதையும் எனக்குத் தெரிவியும்.
LORD, make me to know mine end, and the measure of my days, what it is: that I may know how frail I am.

Lord,
הוֹדִ֘יעֵ֤נִיhôdîʿēnîhoh-DEE-A-nee
make
me
to
know
יְהוָ֨ה׀yĕhwâyeh-VA
end,
mine
קִצִּ֗יqiṣṣîkee-TSEE
and
the
measure
וּמִדַּ֣תûmiddatoo-mee-DAHT
days,
my
of
יָמַ֣יyāmayya-MAI
what
מַהmama
it
הִ֑יאhîʾhee
know
may
I
that
is;
אֵ֝דְעָ֗הʾēdĕʿâA-deh-AH
how
מֶהmemeh
frail
חָדֵ֥לḥādēlha-DALE
I
אָֽנִי׃ʾānîAH-nee