யோசுவா 12

fullscreen1 யோர்தானுக்கு அப்புறத்தில் சூரியன் உதயமாகிற திசையிலே அர்னோன் ஆறு துவக்கி எர்மோன் மலைமட்டும், கிழக்கே சமபூமி எல்லையிலெல்லாமுள்ள ராஜாக்களை இஸ்ரவேல் புத்திரர் முறிய அடித்து, அவர்களுடைய தேசங்களையும் சுதந்தரித்துக்கொண்டார்கள்.

fullscreen2 அந்த ராஜாக்களில், எஸ்போனின் குடியிருந்த எமோரியரின் ராஜாவாகிய சீகோன், அர்னோன் ஆற்றங்கரையிலிருக்கிற ஆரோவேர் தொடங்கி ஆற்றின் நடுமையமும் பாதிக் கீலேயாத்துமுட்பட அம்மோன் புத்திரரின் எல்லையான யாபோக்கு ஆறுமட்டுமுள்ள தேசத்தையும்,

fullscreen3 சமனான வெளிதுவக்கிக் கிழக்கேயிருக்கிற கின்னரேத் கடல்மட்டும் பெத்யெசிமோத் வழியாய்க் கிழக்கேயிருக்கிற சமனான வெளியின் கடலாகிய உப்புக்கடல்மட்டும் இருக்கிறதேசத்தையும் தெற்கே அஸ்தோத் பிஸ்காவுக்குத் தாழ்வாயிருக்கிற தேசத்தையும் ஆண்டான்.

fullscreen4 இராட்சதரில் மீதியான பாசானின் ராஜாவாகிய ஓகின் எல்லையையும் சுதந்தரித்துக்கொண்டார்கள்; அவன் அஸ்தரோத்திலும் எத்ரேயிலும் வாசம்பண்ணி,

fullscreen5 எர்மோன் மலையையும் சல்காவையும், கெசூரியர், மாகாத்தியர் எல்லைமட்டும் எஸ்போனின் ராஜாவாகிய சீகோனின் எல்லையாயிருந்த பாதிக் கீலேயாத்மட்டும் இருக்கும் பாரான் அனைத்தையும் ஆண்டான்.

fullscreen6 அவர்களைக் கர்த்தரின் தாசனாகிய மோசேயும் இஸ்ரவேல் புத்திரரும் முறிய அடித்தார்கள்; அத்தேசத்தைக் கர்த்தரின் தாசனாகிய மோசே ரூபனியருக்கும் காத்தியருக்கும் மனாசேயின் பாதிக்கோத்திரத்துக்கும் சுதந்தரமாகக் கொடுத்தான்.

fullscreen7 யோர்தானுக்கு இப்புறத்திலே மேற்கே லீபனோனின் பள்ளத்தாக்கிலுள்ள பாகால்காத்முதற்கொண்டு சேயீருக்கு ஏறிப்போகிற ஆலாக்மலைமட்டும், மலைகளிலும் பள்ளத்தாக்குகளிலும் சமபூமியிலும் மலைகளுக்கடுத்த புறங்களிலும் வனாந்தரத்திலும் தெற்குத் தேசத்திலும் இருக்கிறதும்,

fullscreen8 யோசுவா இஸ்ரவேல் கோத்திரங்களுக்குச் சுதந்தரமாகப் பங்கிட்டதுமான ஏத்தியர், எமோரியர், கானானியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் என்பவர்களுடைய தேசத்தில் இருந்தவர்களும், யோசுவாவும் இஸ்ரவேல் புத்திரரும் முறிய அடித்தவர்களுமான ராஜாக்கள் யாரெனில்:

fullscreen9 எரிகோவின் ராஜா ஒன்று, பெத்தேலுக்கு அருகான ஆயியின் ராஜா ஒன்று,

fullscreen10 எருசலேமின் ராஜா ஒன்று, எபிரோனின் ராஜா ஒன்று,

fullscreen11 யர்மூத்தின் ராஜா ஒன்று, லாகீசின் ராஜா ஒன்று,

fullscreen12 எக்லோனின் ராஜா ஒன்று, கேசேரின் ராஜா ஒன்று,

fullscreen13 தெபீரின் ராஜா ஒன்று, கெதேரின் ராஜா ஒன்று,

fullscreen14 ஒர்மாவின் ராஜா ஒன்று, ஆராதின் ராஜா ஒன்று,

fullscreen15 லிப்னாவின் ராஜா ஒன்று, அதுல்லாமின் ராஜா ஒன்று,

fullscreen16 மக்கெதாவின் ராஜா ஒன்று, பெத்தேலின் ராஜா ஒன்று,

fullscreen17 தப்புவாவின் ராஜா ஒன்று, எப்பேரின் ராஜா ஒன்று,

fullscreen18 ஆப்பெக்கின் ராஜா ஒன்று, லசரோனின் ராஜா ஒன்று,

fullscreen19 மாதோனின் ராஜா ஒன்று, ஆத்சோரின் ராஜா ஒன்று,

fullscreen20 சிம்சோன் மேரோனின் ராஜா ஒன்று, அக்சாபின் ராஜா ஒன்று,

fullscreen21 தானாகின் ராஜா ஒன்று, மெகிதோவின் ராஜா ஒன்று,

fullscreen22 கேதேசின் ராஜா ஒன்று, கர்மேலுக்கடுத்த யொக்னியாமின் ராஜா ஒன்று,

fullscreen23 தோரின் கரையைச் சேர்ந்த தோரின் ராஜா ஒன்று, கில்காலுக்கடுத்த ஜாதிகளின் ராஜா ஒன்று,

fullscreen24 திர்சாவின் ராஜா ஒன்று, ஆக இவர்களெல்லாரும் முப்பத்தொரு ராஜாக்கள்.

Exodus 13 in Tamil and English

20 அவர்கள் சுக்கோத்திலிருந்து பிரயாணப்பட்டு, வனாந்தரத்தின் ஓரமாய் ஏத்தாமிலே பாளயமிறங்கினார்கள்.
And they took their journey from Succoth, and encamped in Etham, in the edge of the wilderness.

21 அவர்கள் இரவும் பகலும் வழிநடக்கக்கூடும்படிக்கு, கர்த்தர் பகலில் அவர்களை வழிநடத்த மேகஸ்தம்பத்திலும், இரவில் அவர்களுக்கு வெளிச்சங்காட்ட அக்கினிஸ்தம்பத்திலும் அவர்களுக்கு முன் சென்றார்.
And the Lord went before them by day in a pillar of a cloud, to lead them the way; and by night in a pillar of fire, to give them light; to go by day and night: