எஸ்றா 10
1 எஸ்றா இப்படி விண்ணப்பம்பண்ணி அறிக்கையிட்டு அழுது, தேவனுடைய ஆலயத்துக்கு முன்பாக தாழ விழுந்துகிடக்கையில், இஸ்ரவேல் புருஷரும் ஸ்திரீகளும் பிள்ளைகளுமான மகா பெரிய சபை அவனிடத்தில் வந்து கூடிற்று; ஜனங்கள் மிகவும் அழுதார்கள்.
2 அப்பொழுது ஏலாமின் புத்திரரில் ஒருவனாகிய யெகியேலின் குமாரன் செக்கனியா எஸ்றாவை நோக்கி: நாங்கள் தேசத்து ஜனங்களிலுள்ள அந்நியஸ்திரீகளைச் சேர்த்துகொண்டதினால், எங்கள் தேவனுக்கு விரோதமாகப் பாவஞ்செய்தோம்; ஆகிலும் இப்பொழுது இந்தக் காரியத்திலே இன்னும் இஸ்ரவேலுக்காக நம்பிக்கை உண்டு.
3 இப்பொழுதும் அந்த ஸ்திரீகளெல்லாரையும், அவர்களிடத்தில் பிறந்தவர்களையும், என் ஆண்டவனுடைய ஆலோசனைக்கும், நமது தேவனுடைய கற்பனைக்கு நடுங்குகிறவர்களின் ஆலோசனைக்கும் ஏற்றபிரகாரம் அகற்றிப்போடுவோம் என்று நம்முடைய தேவனோடே உடன்படிக்கைப் பண்ணக்கடவோம்; நியாயப்பிரமாணத்தின்படியே செய்யப்படுவதாக,
4 எழுந்திரும்; இந்தக் காரியத்தை நடப்பிக்கிறது உமக்கு அடுத்தது; நாங்களும் உம்மோடேகூட இருப்போம்; நீர் திடன்கொண்டு இதைச் செய்யும் என்றான்.
5 அப்பொழுது எஸ்றா எழுந்திருந்து, ஆசாரியரிலும் லேவியரிலும் பிரதானமானவர்களும் இஸ்ரவேலனைவரும் இந்த வார்த்தையின்படி செய்யும்படிக்கு, அவர்களை ஆணையிடச்சொன்னான்; அவர்கள் ஆணையிட்டார்கள்.
6 அதின்பின்பு எஸ்றா தேவனுடைய ஆலயத்துக்கு முன்னிருந்து எழுந்து, எலியாசிபின் குமாரனாகிய யோகனானின் அறைக்குள் பிரவேசித்தான்; அங்கே வந்தபோது, அவன் சிறையிருப்பிலிருந்து வந்தவர்களுடைய குற்றத்தினிமித்தம் அப்பம் புசியாமலும் தண்ணீர் குடியாமலும் துக்கித்துக்கொண்டிருந்தான்.
7 அப்பொழுது சிறையிருப்பிலிருந்து வந்தவர்கள் எல்லாரும் எருசலேமிலே வந்து கூடவேண்டும் என்றும்,
8 மூன்றுநாளைக்குள்ளே பிரபுக்கள் மூப்பர்களுடைய ஆலோசனையின்படியே எவனாகிலும் வராதேபோனால், அவனுடைய பொருளெல்லாம் ஜப்திசெய்யப்பட்டு, சிறையிருப்பிலிருந்து வந்த சபைக்கு அவன் புறம்பாக்கப்படுவான் என்றும் யூதாவிலும் எருசலேமிலும் விளம்பரம்பண்ணினார்கள்.
9 அப்படியே யூதா பென்யமீன் புத்திரத்தார் எல்லாரும் மூன்றுநாளைக்குள் எருசலேமிலே கூடினார்கள்; அது ஒன்பதாம் மாதம் இருபதாந் தேதியாயிருந்தது; ஜனங்கள் எல்லாரும் தேவனுடைய ஆலயத்தின் வீதியிலே அந்தக் காரியத்தினாலும் அடைமழையினாலும் நடுங்கிக்கொண்டிருந்தார்கள்.
10 அப்பொழுது ஆசாரியனாகிய எஸ்றா எழுந்திருந்தρ அவர்களை நோΕ்கி: நீங்கள் Ǡθ்ரவேலின்மேலிருக்கிற குற்றத்தை அதிகரிக்கப்பண்ண மறு ஜாதியான ஸ்திரீகளை விவாகம்பண்ணினதினால் பாவஞ்செய்தீர்கள்.
11 இப்பொழுதும் நீங்கள் உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரிடத்தில் அறிக்கையிட்டு, அவருடைய பிரியத்தின்படியே செய்து, தேசத்தின் ஜனங்களையும், மறுஜாதியான ஸ்திரீகளையும் விட்டு விலகுங்கள் என்றான்.
12 அப்பொழுது சபையார் யாவரும் மகா சத்தத்தோடே பிரதியுத்தரமாக: ஆம், நீர் சொன்ன வார்த்தைகளின்படியே செய்யவேண்டியதுதான்.
13 ஆனாலும் ஜனங்கள் திரளாயிருக்கிறார்கள், இது மாரிகாலமுமாயிருக்கிறது, இங்கே வெளியிலே நிற்க எங்களாலே கூடாது; இது ஒருநாள் இரண்டுநாள் வேலையல்ல; இந்தக் காரியத்திலே கட்டளை மீறினவர்களாகிய நாங்கள் அநேகர்.
14 ஆகையால் இதற்குச் சபையெங்கும் எங்கள் பிரபுக்கள் விசாரிப்புக்காரராக வைக்கப்படவேண்டும் இந்தக் காயத்தினிமித்தம் நம்முடைய தேவனுக்கு இருக்கிற உக்கிரகோபம் எங்களை விட்டுத் திரும்பும்படி, எங்கள் பட்டணங்களில் மறுஜாதியான ஸ்திரீகளைக் கொண்ட அனைவரும் ஒவ்வொரு பட்டணத்தின் மூப்பரோடும் நியாயாதிபதிகளோடும் குறித்தகாலங்களில் வரக்கடவர்கள் என்றார்கள்.
15 ஆசகேலின் குமாரன் யோனத்தானும், திக்காவின் குமாரன் யக்சியாவுமாத்திரம் அதை விசாரிக்கும்படிக்கு வைக்கப்பட்டார்கள்; மெசுல்லாமும், சப்பேதா என்னும் லேவியனும் அவர்களுக்கு உதவியாயிருந்தார்கள்.
16 சிறையிருப்பிலிருந்து வந்தவர்கள் இந்தப்பிரகாரம் செய்தார்கள்; ஆசாரியனாகிய; எஸ்றாவும், தங்கள் பிதாக்களுடைய குடும்பத்தின்படியே பேர்பேராக அழைக்கப்பட்ட பிதாவம்சங்களின் தலைவர் அனைவரும் இந்தக் காரியத்தை விசாரிக்கும்படி பத்தாம் மாதம் முதல்தேதியிலே தனித்து உட்கார்ந்து,
17 அந்நியஜாதியான ஸ்திரீகளைக்கொண்டவர்கள் எல்லாருடைய காரியத்தையும் முதலாம் மாதம் முதல்தேதியிலே விசாரித்து முடித்தார்கள்.
18 ஆசாரிய புத்திரரில் மறுஜாதியான மனைவிகளைக் கொண்டவர்களாகக் காணப்பட்டர்கள் யாரென்றால்: யோதாக்கின் குமாரனாகிய யெசுவாவின் குமாரரிலும் அவன் சகோதரரிலும், மாசெயா எலியேசர், யாரீப்கெதலியா என்பவர்கள்.
19 இவர்கள் எங்கள் ஸ்திரீகளைத் தள்ளிவிடுவோம் என்று கையடித்துக்கொடுத்து; தாங்கள் குற்றவாளிகளானபடியினால் குற்றநிவாரணபலியாக ஒரு ஆட்டுக்கடாவைச் செலுத்தினார்கள்.
20 இம்மேரின் புத்திரரில் அனானியும், செருபதியாவும்,
21 ஆரீமின் புத்திரரில் மாசெயா, எலியா, செமாயா, யெகியேல், உசியா என்பவர்களும்;
22 பஸ்கூரின் புத்திரரில் எலியோனாய், மாசெயா இஸ்மவேல், நெதனெயேல், யோசபாத், எலாசா என்பவர்களும்;
23 லேவியரில் யோசபாத், சிமேயி, கெலிதா என்னும் பேருமுள்ள கெலாயா, பெத்தகீயா, யூதா, எலியேசர் என்பவர்களும்;
24 பாடரில் எலியாசிபும், வாசல்காவலாளரில் சல்லுூம், தேலேம், ஊரி என்பவர்களும்;
25 மற்ற இஸ்ரவேலருக்குள்ளே பாரோஷின் புத்திரரில் ரமீயா, யெசியா, மல்கியா, மியாமின், எலெயாசார், மல்கிஜா, பெனாயா என்பவர்களும்;
26 ஏலாமின் புத்திரரில் மத்தனியா, சகரியா, யெகியேல், அப்தி, யெரிமோத், எலியா என்பவர்களும்;
27 சத்துவின் புத்திரரில் எலியோனாய், எலியாசிப், மத்தனியா, யெரிமோத், சாபாத் அசிசா என்பவர்களும்;
28 பெபாயின் புத்திரரில் யோகனான், அனனியா, சாபாயி, அத்லாயி என்பவர்களும்;
29 பானியின் புத்திரரில் மெசுல்லாம், மல்லுக், அதாயா, யாசுப், செயால் ராமோத் என்பவர்களும்;
30 பாகாத்மோவாபின் புத்திரரில் அத்னா, கெலால், பெனாயா, மாசெயா, மத்தனியா பெசலெயேல், பின்னூயி, மனானே என்பவர்களும்;
31 ஆரீமின் புத்திரரில் எலியேசர், இஷியா மல்கியா, செமாயா, ஷிமியோன்,
32 பென்யமீன், மல்லுூக், செமரியா என்பவர்களும்;
33 ஆசூமின் புத்திரரில் மத்யி, மத்தத்தா, சாபாத், எலிபெலேத், எரெமாயி, மனாசே, சிமெயி என்பவர்களும்;
34 பானியின் புத்திரரில் மாதாயி, அம்ராம், ஊவேல்,
35 பெனாயா, பெதியா, கெல்லுூ,
36 வனியா மெராமோத், எலெயாசீப்,
37 மத்தனியா, மதனாய், யாசாய்,
38 பானி, பின்னூயி, சிமெயி,
39 செலேமியா, நாத்தான், அதாயா,
40 மக்நாத்பாயி, சாசாயி, சாராயி,
41 அசரெயேல், செலேமியா, செமரியா,
42 சல்லுூம், அமரியா, யோசேப் என்பவர்களும்;
43 நேபோவின் புத்திரரில் ஏயெல், மத்தித்தியா, சாபாத், செபினா, யதாய், யோவேல், பெனாயா என்பவர்களுமே.
44 இவர்கள் எல்லாரும் மறுஜாதியான ஸ்திரீகளைக் கொண்டவர்கள், இவர்களில் சிலர் கொண்டிருந்த ஸ்திரீகளிடத்தில் பிள்ளைகளைப் பெற்றிருந்தார்கள்.
Tamil Indian Revised Version
தேவனுடைய நாமமும் உபதேசமும் அவமதிக்கப்படாதபடிக்கு, அடிமைத்தனத்திற்கு உட்பட்டிருக்கிற வேலைக்காரர்கள் அனைவரும் தங்களுடைய எஜமான்களை எல்லாக் கனத்திற்கும் தகுதியுள்ளவர்கள் என்று நினைத்துக்கொள்ளவேண்டும்.
Tamil Easy Reading Version
அடிமைகளாய் இருக்கிற அனைவரும் தங்கள் எஜமானர்களுக்கு மரியாதை காட்டவேண்டும். அவர்கள் இதனைச் செய்யும்பொழுது தேவனுடைய பெயரும், நம் போதனையும் விமர்சிக்கப்படாமல் இருக்கும்.
Thiru Viviliam
அடிமைத்தளையில் இருப்போர் தங்கள் தலைவர்களை முழு மதிப்புக்கு உரியவர்களாகக் கருதவேண்டும். அப்பொழுது கடவுளின் பெயரும் போதனையும் பழிச்சொல்லுக்கு உள்ளாகாது.
Title
அடிமைகளுக்கான விதிமுறைகள்
King James Version (KJV)
Let as many servants as are under the yoke count their own masters worthy of all honour, that the name of God and his doctrine be not blasphemed.
American Standard Version (ASV)
Let as many as are servants under the yoke count their own masters worthy of all honor, that the name of God and the doctrine be not blasphemed.
Bible in Basic English (BBE)
Let all who are servants under the yoke give all honour to their masters, so that no evil may be said against the name of God and his teaching.
Darby English Bible (DBY)
Let as many bondmen as are under yoke count their own masters worthy of all honour, that the name of God and the teaching be not blasphemed.
World English Bible (WEB)
Let as many as are bondservants under the yoke count their own masters worthy of all honor, that the name of God and the doctrine not be blasphemed.
Young’s Literal Translation (YLT)
As many as are servants under a yoke, their own masters worthy of all honour let them reckon, that the name of God and the teaching may not be evil spoken of;
1 தீமோத்தேயு 1 Timothy 6:1
தேவனுடைய நாமமும் உபதேசமும் தூஷிக்கப்படாதபடிக்கு, அடிமைத்தன நுகத்திற்குட்பட்டிருக்கிற வேலைக்காரர் யாவரும் தங்கள் எஜமான்களை எல்லாக் கனத்திற்கும் பாத்திரரென்று எண்ணிக்கொள்ளக்கடவர்கள்.
Let as many servants as are under the yoke count their own masters worthy of all honour, that the name of God and his doctrine be not blasphemed.
Let as many as | Ὅσοι | hosoi | OH-soo |
servants | εἰσὶν | eisin | ees-EEN |
are | ὑπὸ | hypo | yoo-POH |
under | ζυγὸν | zygon | zyoo-GONE |
yoke the | δοῦλοι | douloi | THOO-loo |
count | τοὺς | tous | toos |
ἰδίους | idious | ee-THEE-oos | |
their own | δεσπότας | despotas | thay-SPOH-tahs |
masters | πάσης | pasēs | PA-sase |
worthy | τιμῆς | timēs | tee-MASE |
all of | ἀξίους | axious | ah-KSEE-oos |
honour, | ἡγείσθωσαν | hēgeisthōsan | ay-GEE-sthoh-sahn |
that | ἵνα | hina | EE-na |
the | μὴ | mē | may |
name | τὸ | to | toh |
of | ὄνομα | onoma | OH-noh-ma |
God | τοῦ | tou | too |
and | θεοῦ | theou | thay-OO |
his doctrine | καὶ | kai | kay |
be not | ἡ | hē | ay |
blasphemed. | διδασκαλία | didaskalia | thee-tha-ska-LEE-ah |
βλασφημῆται | blasphēmētai | vla-sfay-MAY-tay |