Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Antha Naal Paakiya - அந்த நாள் பாக்கிய நாள் நான் மீட்கப்பட்ட

அந்த நாள் பாக்கிய நாள் – நான் மீட்கப்பட்ட
அந்த நாள் பாக்கிய நாள்

அந்த நாள் ஆனந்த நாள் அருமை இரட்சகரென்னை
அன்போடழைத்தெனது அசுத்தங்கள் நீக்கின நாள்

அன்றே எனக்குப் போதித்தார் அவர் வழியில்
அநுதினம் செல்லக் கற்பித்தார்
என்றும் அவர்மேல் சார்ந்தே இன்ப ஜீவியம் செய்ய
ஏவினார் என் இரட்சகர் எங்கும் ப்ரஸ்தாபிப்பேனே

என்றனை அன்றே இழுத்தார் – தமதன்பினால்
இசைவாய்த் தம்முடன் இணைத்தார்
சொந்தம் நான் அவருக்குச் சொந்தம் அவர் எனக்கு
இந்த உறுதிபண்ணி இனிய ஐக்கியம் பெற்றேன்

ஆறுதல்களால் நிறைந்தேன் – அளவில்லாத
ஆசிகளினால் மகிழ்ந்தேன்
தாறுமாறான உள்ளம் மாறுதலை யடைந்து
மாறாத யேசுவினில் மகிமையாய்த் தங்கப் பெற்றேன்

அந்நாளில் வாக்குப் பண்ணினேன் உறுதியாக
எந்நாளும் நான் புதிப்பிப்பேன்
சொன்ன இவ்வாக்கை நிதம் சுத்தமாய் நிறைவேற்ற
உன்னத பலம் தாராய் என்னையாட்கொண்ட தேவா

Antha Naal Paakiya Lyrics in English

Antha naal paakkiya naal – naan meetkappatta antha naal paakkiya naalantha naal aanantha naal arumai iratchakarennai anpodalaiththenathu asuththangal neekkina naalante enakkup pothiththaar avar valiyil anuthinam sellak karpiththaar entum avarmael saarnthae inpa jeeviyam seyya aevinaar en iratchakar engum prasthaapippaenaeentanai ante iluththaar – thamathanpinaal isaivaayth thammudan innaiththaar sontham naan avarukkuch sontham avar enakku intha uraுthipannnni iniya aikkiyam pettenaaraுthalkalaal nirainthaen – alavillaatha aasikalinaal makilnthaen thaaraுmaaraana ullam maaraுthalai yatainthu maaraatha yaesuvinil makimaiyaayth thangap pettenannaalil vaakkup pannnninaen uraுthiyaaka ennaalum naan puthippippaen sonna ivvaakkai nitham suththamaay niraivaetta unnatha palam thaaraay ennaiyaatkonnda thaevaa

PowerPoint Presentation Slides for the song Antha Naal Paakiya

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Antha Naal Paakiya – அந்த நாள் பாக்கிய நாள் நான் மீட்கப்பட்ட PPT
Antha Naal Paakiya PPT

நாள் பாக்கிய சொந்தம் மீட்கப்பட்ட நாள்அந்த ஆனந்த அருமை இரட்சகரென்னை அன்போடழைத்தெனது அசுத்தங்கள் நீக்கின நாள்அன்றே எனக்குப் போதித்தார் வழியில் அநுதினம் செல்லக் கற்பித்தார் அவர்மேல் தமிழ்