Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aandavane Kirubai Kooraai - ஆண்டவனே கிருபை கூராய் எனக்

ஆண்டவனே கிருபை கூராய் எனக்
காதாரம் உன்றனின் பாதாரவிந்தம்

மீண்டெனின்மேல் தயை பூண்டருள் நாதா
ஈண்டுனின் தாள்பணிந்தேன் திருப்பாதா

துர்க்குணத்தி லுருவானேன் பொல்லாத்
தோஷியாய்ப் பேயவன் தோழனாய்ப் போனேன்
நற்குண மென்னில்நான் காணேன் – நித்ய
நாச மரண நரகுக்குள்ளானேன்
சற்குண மன்பு தயைமிகு தேவா
தாவிப் பிடித்தேனான் மேவிநீ காவா

பாவ ஊற்றெனதுள்ளம் மெய்யே பாவம்
பாய்வழி யென்செவி வாய் கண் கால் கையே
நோவென்னைப் பிசித்ததென் ஐயே – எனை
நோக்கி யுலகுசொல்லும் ஆறுதல் பொய்யே
ஏவை புத்திரனழு தேங்கல் நோக்காயோ
என் பாவச்சேற்றை விட்டென்னைத் தூக்காயோ

சாபத்துக்களாய்ப் போனேன் சீனாய்த்
தன்னிடி குமுறலின் சத்தங்கேட்டேனே
கோபத்தின் தீயைக்கண்டேனே – தேவ
கோஷ்ட முணர்ந்தே கலக்கமுற்றேனே
ஆபத்தில் நீ என் அடைக்கலம் தஞ்சம்
ஐயையோ எங்கோடும் என் ஏழைநெஞ்சம்

பாடெனக்காய்ப் பட்டாயன்றோ என்றன்
பத்தாநின்சாவு நான் சாவதற்கென்றோ
கேடென்னில் நிற்பதும் நன்றோ – என்னைக்
கேளாதிருக்க உன்றன் மனங்குன்றோ
நாடறியப் பாடு பட்டுயிர் தந்தாய்
நம்பினபேர்க்கா யுயிர்தங்கு சென்றாய்

Aandavane Kirubai Kooraai Lyrics in English

Aanndavanae kirupai kooraay enak kaathaaram untanin paathaaravinthammeenndeninmael thayai poonndarul naathaa eenndunin thaalpanninthaen thiruppaathaathurkkunaththi luruvaanaen pollaath thoshiyaayp paeyavan tholanaayp ponaen narkuna mennilnaan kaanneen – nithya naasa marana narakukkullaanaen sarkuna manpu thayaimiku thaevaa thaavip pitiththaenaan maevinee kaavaapaava oottenathullam meyyae paavam paayvali yensevi vaay kann kaal kaiyae Nnovennaip pisiththathen aiyae – enai Nnokki yulakusollum aaraுthal poyyae aevai puththiranalu thaengal Nnokkaayo en paavachchaேttaை vittennaith thookkaayosaapaththukkalaayp ponaen seenaayth thanniti kumuralin saththangaettaேnae kopaththin theeyaikkanntaenae – thaeva koshda munarnthae kalakkamuttenae aapaththil nee en ataikkalam thanjam aiyaiyo engaோdum en aelainenjampaadenakkaayp pattayanto entan paththaaninsaavu naan saavatharkento kaedennil nirpathum nanto – ennaik kaelaathirukka untan manangunto naadariyap paadu pattuyir thanthaay nampinapaerkkaa yuyirthangu sentay

PowerPoint Presentation Slides for the song Aandavane Kirubai Kooraai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aandavane Kirubai Kooraai – ஆண்டவனே கிருபை கூராய் எனக் PPT
Aandavane Kirubai Kooraai PPT

போனேன் ஆண்டவனே கிருபை கூராய் காதாரம் உன்றனின் பாதாரவிந்தம்மீண்டெனின்மேல் தயை பூண்டருள் நாதா ஈண்டுனின் தாள்பணிந்தேன் திருப்பாதாதுர்க்குணத்தி லுருவானேன் பொல்லாத் தோஷியாய்ப் பேயவன் தோழனாய்ப் நற்குண தமிழ்