உங்கள் பிதாக்களைப் போலிராதேயுங்கள்; முந்தின தீர்க்கதரிசிகள் அவர்களை நோக்கி: உங்கள் பொல்லாத வழிகளையும் உங்கள் பொல்லாத கிரியைகளையும் விட்டுத் திரும்புங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்று கூப்பிட்டார்கள்; ஆனாலும் எனக்குச் செவிகொடாமலும் என்னைக் கவனியாமலும் போனார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
அப்பொழுது கர்த்தருடைய தூதன் தன் மறுமொழியைச் சேனைகளின் கர்த்தாவே, இந்த எழுபது வருஷமாய் நீர் கோபங்கொண்டிருக்கிற எருசலேமின்மேலும் யூதா பட்டணங்களின்மேலும் எந்தமட்டும் இரங்காதிருப்பீர் என்று சொல்ல,
அப்பொழுது என்னோடே பேசின தூதன் என்னை நோக்கி: சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால்: நான் எருசலேமுக்காகவும் சீயோனுக்காகவும் மகா வைராக்கியம் கொண்டிருக்கிறேன்.
ஆகையால் மனஉருக்கத்தோடே எருசலேமினிடத்தில் திரும்பினேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; என் ஆலயம் அதிலே கட்டப்படும்; எருசலேமின்மேல் அளவுநூல் பிடிக்கப்படும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்று கூறு என்றார்.
இன்னும் என் பட்டணங்கள் நன்மையினால் பரம்பியிருக்கும்; இன்னும் கர்த்தர் சீயோனைத் தேற்றரவு பண்ணுவார்; இன்னும் எருசலேமைத் தெரிந்துகொள்ளுவார் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்று பின்னும் கூறு என்றார்.
அவைகள் என்னவென்று என்னோடே பேசின தூதனைக் கேட்டேன்; அதற்கு அவர்: இவைகள் யூதாவையும் இஸ்ரவேலையும் எருசலேமையும் சிதறடித்த கொம்புகள் என்றார்.
| Therefore say | וְאָמַרְתָּ֣ | wĕʾāmartā | veh-ah-mahr-TA |
| thou unto | אֲלֵהֶ֗ם | ʾălēhem | uh-lay-HEM |
| them, Thus | כֹּ֤ה | kō | koh |
| saith | אָמַר֙ | ʾāmar | ah-MAHR |
| the Lord | יְהוָ֣ה | yĕhwâ | yeh-VA |
| of hosts; | צְבָא֔וֹת | ṣĕbāʾôt | tseh-va-OTE |
| Turn | שׁ֣וּבוּ | šûbû | SHOO-voo |
| ye unto | אֵלַ֔י | ʾēlay | ay-LAI |
| me, saith | נְאֻ֖ם | nĕʾum | neh-OOM |
| the Lord | יְהוָ֣ה | yĕhwâ | yeh-VA |
| of hosts, | צְבָא֑וֹת | ṣĕbāʾôt | tseh-va-OTE |
| and I will turn | וְאָשׁ֣וּב | wĕʾāšûb | veh-ah-SHOOV |
| unto | אֲלֵיכֶ֔ם | ʾălêkem | uh-lay-HEM |
| you, saith | אָמַ֖ר | ʾāmar | ah-MAHR |
| the Lord | יְהוָ֥ה | yĕhwâ | yeh-VA |
| of hosts. | צְבָאֽוֹת׃ | ṣĕbāʾôt | tseh-va-OTE |