🏠  Lyrics  Chords  Bible 

Kalankaathae Kalankaathae PPT - கலங்காதே கலங்காதே

கலங்காதே கலங்காதே
கர்த்தர் உன்னைக் கைவிடமாட்டர்
 
1.   முள்முடி உனக்காக
இரத்தமெல்லாம் உனக்காக
பாவங்களை அறிக்கையிடு
பரிசுத்தமாகிவிடு – நீ
 
2.   கல்வாரி மலைமேலே
காயப்பட்ட இயேசுவைப்பார்
கரம் விரித்து அழைக்கின்றார்
கண்ணீரோடு ஓடி வா – நீ
 
3.   காலமெல்லாம் உடன் இருந்து
கரம்பிடித்து நடத்திச் செல்வார்
கண்ணீரெல்லாம் துடைப்பார்
கண்மணிபோல் காத்திடுவார் – உன்னை
 
4.   உலகத்தின் வெளிச்சம் நீ
எழுந்து ஒளி வீசு
மலைமேல் உள்ள பட்டணம் – தம்பி (நீ)
மறைவாக இருக்காதே
 
5.   உலகம் உன்னை வெறுத்திடலாம்
உற்றார் உன்னைத் துரத்திடலாம்
உன்னை அழைத்தவரோ
உள்ளங்கையில் ஏந்திடுவார்
 
6.   உன் நோய்கள் சுமந்து கொண்டார்
உன் பிணிகள் ஏற்றுக் கொண்டார்
நீ சுமக்கத் தேவையில்லை
விசுவாசி அது போதும்


Kalankaathae Kalankaathae PowerPoint



Kalankaathae Kalankaathae - கலங்காதே கலங்காதே Lyrics

Kalankaathae Kalankaathae PPT

Download Kalankaathae Kalankaathae Tamil PPT