Yean Intha Paaduthan – ஏன் இந்தப் பாடுதான்
ஏன் இந்தப் பாடுதான்! – சுவாமி
என்ன தருவேன் இதற்கீடுநான்?
ஆனந்த நேமியே – எனை ஆளவந்த குரு சுவாமியே
1. கெத்செமனே யிடம் ஏகவும் – அதின்
கெழு மலர்க் காவிடை போகவும்
அச்சயனே, மனம் நோகவும் – சொல்
அளவில்லாத் துயரமாகவும்
2. முழந்தாள் படியிட்டுத் தாழவும் – மும்
முறை முகம் தரைபட வீழவும்
மழுங்கத் துயர் உமைச் சூழவும், – கொடு
மரண வாதையினில் மூழ்கவும்
3. அப்பா, பிதாவே என்றழைக்கவும், – துயர்
அகலச் செய்யும் என்றுரைக்கவும்
செப்பும் உன் சித்தம் என்று சாற்றவும், – ஒரு
தேவதூதன் வந்து தேற்றவும்
4. ஆத்துமத் துயர் மிக நீடவும், குழம்
பாக உதிர வேர்வை ஓடவும்
சாத்திர மொழிகள் ஒத்தாடவும், – உந்தன்
தாசரும் பதந்தனை நாடவும்
Yean Intha Paaduthan – ஏன் இந்தப் பாடுதான் Lyrics in English
Yean Intha Paaduthan – aen inthap paaduthaan
Aen inthap paaduthaan! – suvaami
Enna tharuvaen ithargeedunaan?
Aanantha naemiyae – enai aalavantha kuru suvaamiyae
1. Kethsemanae yidam aekavum – athin
Kelu malark kaavitai pokavum
Achchayanae, manam Nnokavum – sol
Alavillaath thuyaramaakavum
2. Mulanthaal patiyittuth thaalavum – mum
Murai mukam tharaipada veelavum
Malungath thuyar umaich soolavum, – kodu
Marana vaathaiyinil moolkavum
3. Appaa, pithaavae entalaikkavum, – thuyar
Akalach seyyum enturaikkavum
Seppum un siththam entu saattavum, – oru
Thaevathoothan vanthu thaettavum
4. Aaththumath thuyar mika needavum, kulam
Paaka uthira vaervai odavum
Saaththira molikal oththaadavum, – unthan
Thaasarum pathanthanai naadavum
PowerPoint Presentation Slides for the song Yean Intha Paaduthan – ஏன் இந்தப் பாடுதான்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yean Intha Paaduthan – ஏன் இந்தப் பாடுதான் PPT
Yean Intha Paaduthan PPT

