அது திருடன் வீட்டிலும், என் நாமத்தைக்கொண்டு பொய்யாணையிடுகிறவன் வீட்டிலும் வந்து, அவனவன்வீட்டின் நடுவிலே தங்கி, அதை அதின் மரங்களோடும் அதின் கல்லுகளோடுங்கூட நிர்மூலமாக்கும்படி அதைப் புறப்பட்டுப்போகப்பண்ணுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.
பின்பு என்னோடே பேசின தூதன் வெளியே வந்து என்னை நோக்கி: நீ உன் கண்களை ஏறெடுத்து புறப்பட்டுவருகிறதை என்னவென்று பார் என்றார்.
இதோ ஒரு தாலந்து நிறையான ஈயமூடி தூக்கிவரப்பட்டது; மரக்காலின் நடுவிலே ஒரு ஸ்திரீ உட்கார்ந்திருந்தாள்.
அப்பொழுது அவர்: இவள் அக்கிரமக்காரி என்று சொல்லி, அவளை மரக்காலுக்குள்ளே தள்ளி ஈயக்கட்டியை அதின் வாயிலே போட்டார்.
அப்பொழுது நான் என் கண்களை ஏறெடுத்து, இதோ, புறப்பட்டுவருகிற இரண்டு ஸ்திரீகளைக் கண்டேன்; அவர்களுக்கு நாரையின் செட்டைகளுக்கொத்த செட்டைகள் இருந்தது; அவர்கள் செட்டைகளில் காற்றிருந்தது; இவர்கள் மரக்காலை பூமிக்கும் வானத்துக்கும் நடுவாய்த் தூக்கிக்கொண்டு போனார்கள்.
Then said | וָאֹמַ֕ר | wāʾōmar | va-oh-MAHR |
I to | אֶל | ʾel | el |
the angel | הַמַּלְאָ֖ךְ | hammalʾāk | ha-mahl-AK |
that talked | הַדֹּבֵ֣ר | haddōbēr | ha-doh-VARE |
Whither me, with | בִּ֑י | bî | bee |
do these | אָ֛נָה | ʾānâ | AH-na |
bear | הֵ֥מָּה | hēmmâ | HAY-ma |
מֽוֹלִכ֖וֹת | môlikôt | moh-lee-HOTE | |
the ephah? | אֶת | ʾet | et |
הָאֵיפָֽה׃ | hāʾêpâ | ha-ay-FA |