தேவதாரு விருட்சங்களே, புலம்புங்கள்; கேதுருமரங்கள் விழுந்ததே; பிரபலமானவைகள் பாழாக்கப்பட்ட பாசானின் கர்வாலிமரங்களே, புலம்புங்கள்; அரணுள்ள சோலை கீழே தள்ளப்பட்டது.
மேய்ப்பர்களின் மகிமை அழிந்துபோனபடியால், அவர்கள் அலறுகிற சத்தம் கேட்கப்படுகிறது; யோர்தானின் பெருமை அழிந்துபோனபடியால், பாலசிங்கங்கள் கர்ச்சிக்கிற சத்தம் கேட்கப்படுகிறது.
அவைகளை உடையவர்கள், அவைகளைக் கொன்றுபோட்டுத் தங்களுக்குக் குற்றமில்லையென்று எண்ணுகிறார்கள். அவைகளை விற்கிறவர்கள், கர்த்தருக்கு ஸ்தோத்திரம், நாங்கள் ஐசுவரியமுள்ளவர்களானோம் என்கிறார்கள்; அவைகளை மேய்க்கிறவர்கள், அவைகள்மேல் இரக்கம்வைக்கிறதில்லை.
கர்த்தர் என்னை நோக்கி: அதைக் குயவனிடத்தில் எறிந்துவிடு என்றார்; இதுவே நான் அவர்களால் மதிக்கப்பட்ட மேன்மையான மதிப்பு; நான் அந்த முப்பது வெள்ளிக்காசை எடுத்து அவைகளைக் குயவனுக்கென்று கர்த்தருடைய ஆலயத்திலே எறிந்துவிட்டேன்.
கர்த்தர் என்னை நோக்கி: நீ மதியற்ற ஒரு மேய்ப்பனுடைய ஆயுதங்களை இன்னும் எடுத்துக்கொள்.
was And it was | וַתֻּפַ֖ר | wattupar | va-too-FAHR |
broken day: | בַּיּ֣וֹם | bayyôm | BA-yome |
in | הַה֑וּא | hahûʾ | ha-HOO |
that knew | וַיֵּדְע֨וּ | wayyēdĕʿû | va-yay-deh-OO |
me so | כֵ֜ן | kēn | hane |
and the poor | עֲנִיֵּ֤י | ʿăniyyê | uh-nee-YAY |
flock the of | הַצֹּאן֙ | haṣṣōn | ha-TSONE |
that waited | הַשֹּׁמְרִ֣ים | haššōmĕrîm | ha-shoh-meh-REEM |
upon | אֹתִ֔י | ʾōtî | oh-TEE |
that | כִּ֥י | kî | kee |
the word the | דְבַר | dĕbar | deh-VAHR |
of Lord. it | יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA |
הֽוּא׃ | hûʾ | hoo |