யூதா புத்திரரின் கோத்திரத்திற்கு அவர்களுடைய வம்சங்களின்படி உண்டான பங்குவீதமாவது: ஏதோமின் எல்லைக்கு அருகான சீன் வனாந்தரமே தென்புறத்தின் கடையெல்லை.
Joshua 15:2தென்புறமான அவர்களுடைய எல்லை உப்புக்கடலின் கடைசியில் தெற்கு முகமாயிருக்கிற முனைதுவக்கி,
Joshua 15:3தென்புறத்திலிருக்கிற அக்ராபீமின் மேடுகளுக்கும், அங்கேயிருந்து சீனுக்கும் போய், தெற்கேயிருக்கிற காதேஸ்பர்னேயாவுக்கு ஏறி, எஸ்ரோனைக் கடந்து, ஆதாருக்கு ஏறி, கர்க்காவைச் சுற்றிப்போய்,
Joshua 15:4அஸ்மோனுக்கும், அங்கேயிருந்து எகிப்தின் ஆற்றுக்கும் சென்று, கடல்மட்டும் போய் முடியும்; இதுவே உங்களுக்குத் தென்புறமான எல்லையாயிருக்கும் என்றான்.
Joshua 15:5கீழ்ப்புறமான எல்லை, யோர்தான் முகத்துவாரமட்டும் இருக்கிற உப்புக்கடல். வடபுறமான எல்லை, யோர்தான் முகத்துவாரமிருக்கிற கடலின் முனை துவக்கி,
Joshua 15:6பெத்எக்லாவுக்கு ஏறி, வடக்கேயிருக்கிற பெத்அரபாவைக் கடந்து, ரூபனின் குமாரனாகிய போகனின் கல்லுக்கு ஏறிப்போய்,
Joshua 15:7அப்புறம் ஆகோர் பள்ளத்தாக்கை விட்டுத் தேபீருக்கு ஏறி, வடக்கே ஆற்றின் தென்புறமான அதும்மீமின் மேட்டுக்கு முன்பாக இருக்கிற கில்காலுக்கு நேராகவும், அங்கேயிருந்து என்சேமேசின் தண்ணீரிடத்துக்கும் போய், ரொகேல் என்னும் கிணற்றுக்குச் சென்று,
Joshua 15:8அப்புறம் எபூசியர் குடியிருக்கிற எருசலேமுக்குத் தென்புறமாய் இன்னோமுடைய குமாரனின் பள்ளத்தாக்கைக் கடந்து, வடக்கேயிருக்கிற இராட்சதருடைய பள்ளத்தாக்கின் கடைசியில் மேற்காக இன்னோம் பள்ளத்தாக்கின் முன்னிருக்கிற மலையின் சிகரமட்டும் ஏறிப்போய்,
Joshua 15:9அந்த மலையின் சிகரத்திலிருந்து நெப்தோவாவின் நீரூற்றுக்குப் போய், எப்பெரோன் மலையின் பட்டணங்களுக்குச் சென்று, கீரியாத்யெயாரீமாகிய பாலாவுக்குப் போய்,
Joshua 15:10பாலாவிலிருந்து மேற்கே சேயீர் மலைக்குத் திரும்பி, வடக்கேயிருக்கிற கெசலோனாகிய யெயாரீம் மலைக்குப் பக்கமாய்ப் போய், பெத்ஷிமேசுக்கு இறங்கி, திம்னாவுக்குப் போய்,
Joshua 15:11அப்புறம் வடக்கேயிருக்கிற எக்ரோனுக்குப் பக்கமாய்ச் சென்று, சிக்ரோனுக்கு ஓடி, பாலாமலையைக்கடந்து, யாப்னியேலுக்குச் சென்று, கடலிலே முடியும்.
Joshua 15:12மேற்புறமான எல்லை, பெரிய சமுத்திரமே; இது யூதா புத்திரருக்கு அவர்களுடைய வம்சங்களின்படி சுற்றிலுமிருக்கும் எல்லை.
Joshua 15:13எப்புன்னேயின் குமாரனாகிய காலேபுக்கு, யோசுவா, கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடி, ஏனாக்கின் தகப்பனாகிய அர்பாவின் பட்டணமான எபிரோனை, யூதா புத்திரரின் நடுவே , பங்காகக் கொடுத்தான்.
Joshua 15:14அங்கேயிருந்த சேசாய், அகீமான், தல்மாய் என்னும் ஏனாக்கின் மூன்று குமாரரையும் காலேப் துரத்திவிட்டு,
Joshua 15:15அங்கேயிருந்து தெபீரின் குடிகளிடத்திற்குப் போனான்; முற்காலத்திலே தெபீரின் பேர் கீரியாத்செப்பேர்.
Joshua 15:16கீரியாத்செப்பேரைச் சங்காரம்பண்ணிப்பிடிக்கிறவனுக்கு, என் குமாரத்தியாகிய அக்சாளை விவாகம்பண்ணிக்கொடுப்பேன் என்று காலேப் சொன்னான்.
Joshua 15:17அப்பொழுது காலேபின் சகோதரனாகிய கேனாசின் மகன் ஒத்னியேல் அதைப் பிடித்தான்; ஆகையால் தன் குமாரத்தி அக்சாளை அவனுக்கு விவாகம்பண்ணிக்கொடுத்தான்.
Joshua 15:18அவன் புறப்படுகையில், என் தகப்பனிடத்தில் ஒரு வயல்வெளியைக் கேட்கவேண்டும் என்று அவனிடத்தில் உத்தரவு பெற்றுக்கொண்டு, கழுதையின்மேலிருந்து இறங்கினாள். காலேப் பார்த்து: உனக்கு என்னவேண்டும் என்றான்.
Joshua 15:19அப்பொழுது அவள்: எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும்; எனக்கு வறட்சியான நிலத்தைத் தந்தீர்; நீர்ப்பாச்சலான நிலத்தையும் எனக்குத் தரவேண்டும் என்றாள்; அப்பொழுது அவளுக்கு மேற்புறத்திலும் கீழ்ப்புறத்திலும் நீர்ப்பாச்சலான நிலங்களைக் கொடுத்தான்.
Joshua 15:20யூதா புத்திரருக்கு அவர்களுடைய வம்சங்களின்படி உண்டான சுதந்தரம் என்னவென்றால்:
Joshua 15:21கடையாந்தரத் தென்புறமான ஏதோமின் எல்லைக்கு நேராய், யூதா புத்திரரின் கோத்திரத்திற்குக் கிடைத்த பட்டணங்களாவன: கப்செயேல், ஏதேர், யாகூர்,
Joshua 15:22கீனா, திமோனா, அதாதா,
Joshua 15:23கேதேஸ், ஆத்சோர், இத்னான்,
Joshua 15:24சீப், தேலெம், பெயாலோத்,
Joshua 15:25ஆத்சோர், அதாத்தா, கீரியோத், எஸ்ரோன் என்னும் ஆத்சோர்,
Joshua 15:26ஆமாம், சேமா, மொலாதா,
Joshua 15:27ஆத்சார்கதா, எஸ்மோன், பெத்பாலேத்,
Joshua 15:28ஆத்சார்கவால், பெயெர்செபா, பிஸ்யோத்யா,
Joshua 15:29பாலா, ஈயிம், ஆத்சேம்,
Joshua 15:30எல்தோலாத், கெசீல், ஒர்மா,
Joshua 15:31சிக்லாக், மத்மன்னா, சன்சன்னா,
Joshua 15:32லெபாயோத், சில்லீம், ஆயின், ரிம்மோன் என்பவைகள்; எல்லாப்பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட இருபத்தொன்பது.
Joshua 15:33பள்ளத்தாக்கு நாட்டில் எஸ்தாவேல், சோரியா, அஷ்னா,
Joshua 15:34சனோகா, என்கன்னீம், தப்புவா, எனாம்,
Joshua 15:35யர்மூத், அதுல்லாம், சோக்கோ, அசேக்கா,
Joshua 15:36சாராயீம், அதித்தாயீம், கெதேரா, கேதெரொத்தாயீம்; இந்தப்பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்படப் பதினான்கு,
Joshua 15:37சேனான், அதாஷா, மிக்தல்காத்,
Joshua 15:38திலியான், மிஸ்பே, யோக்தெயேல்,
Joshua 15:39லாகீஸ், போஸ்காத், எக்லோன்,
Joshua 15:40காபோன், லகமாம், கித்லீஷ்,
Joshua 15:41கெதெரோத், பெத்டாகோன், நாகமா, மக்கேதா; இந்தப்பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்படப் பதினாறு.
Joshua 15:42லிப்னா, எத்தேர், ஆஷான்,
Joshua 15:43இப்தா, அஸ்னா, நெத்சீப்,
Joshua 15:44கேகிலா, அக்சீப், மரேஷா; இந்தப்பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட ஒன்பது.
Joshua 15:45எக்ரோனும் அதின் வெளிநிலங்களும் கிராமங்களும்,
Joshua 15:46எக்ரோன் துவக்கிச் சமுத்திரம்மட்டும், அஸ்தோத்தின் புறத்திலிருக்கிற சகல ஊர்களும், அவைகளின் கிராமங்களும்,
Joshua 15:47அஸ்தோத்தும், அதின் வெளிநிலங்களும் கிராமங்களும், காசாவும் எகிப்தின் நதிமட்டுமிருக்கிற அதின் வெளிநிலங்களும் கிராமங்களுமே; பெரிய சமுத்திரமே எல்லை.
Joshua 15:48மலைகளில், சாமீர், யாத்தீர், சோக்கோ,
Joshua 15:49தன்னா, தெபீர் என்னப்பட்ட கீரியாத்சன்னா,
Joshua 15:50ஆனாப், எஸ்தெமொ, ஆனீம்,
Joshua 15:51கோசேன், ஓலோன்,கிலொ; இந்தப்பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட பதினொன்று.
Joshua 15:52அராப், தூமா, எஷியான்,
Joshua 15:53யானூம், பெத்தப்புவா, ஆப்பெக்கா,
Joshua 15:54உம்தா, எபிரோனாகிய கீரியாத் அர்பா, சீயோர்; இந்தப்பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட ஒன்பது.
Joshua 15:55மாகோன், கர்மேல், சீப், யுத்தா,
Joshua 15:56யெஸ்ரயேல், யொக்தெயாம், சனோகா,
Joshua 15:57காயின், கிபியா, திம்னா; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்படப் பத்து.
Joshua 15:58அல்கூல், பெத்சூர், கெதோர்,
Joshua 15:59மகாராத், பெதானோத், எல்தெகோன்; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட ஆறு.
Joshua 15:60கீரியாத்யெயாரீமாகிய கீரியாத் பாகால், ரபா; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட இரண்டு.
Joshua 15:61வனாந்தரத்தில், பெத்-அரபா, மித்தீன், செக்காக்கா,
Joshua 15:62நிப்சான், உப்புப்பட்டணம், என்கேதி; இந்தப்பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட ஆறு.
Joshua 15:63எருசலேமிலே குடியிருந்த எபூசியரை யூதா புத்திரர் துரத்திவிடக் கூடாமற்போயிற்று; ஆகையால் இந்நாள்மட்டும் எபூசியர் யூதா புத்திரரோடே எருசலேமிலே குடியிருக்கிறார்கள்.