நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன்.
பூமியிலே நான் பரதேசி; உமது கற்பனைகளை எனக்கு மறையாதேயும்.
அகந்தைக்காரர் என்னை மிகவும், பரியாசம்பண்ணியும், நான் உமது வேதத்தைவிட்டு விலகினதில்லை.
துன்மார்க்கரின் கூட்டங்கள் என்னைக் கொள்ளையிட்டும் உம்முடைய வேதத்தை நான் மறக்கவில்லை.
நான் வெட்கப்பட்டுப் போகாதபடிக்கு, என் இருதயம் உமது பிரமாணங்களில் உத்தமமாயிருக்கக்கடவது.
புகையிலுள்ள துருத்தியைப் போலானேன்; உமது பிரமாணங்களையோ மறவேன்.
உம்முடைய வேதத்துக்கு விரோதமாய் அகங்காரிகள் எனக்குக் குழிகளை வெட்டினார்கள்.
என் பிராணன் எப்பொழுதும் என் கையில் இருக்கிறது; ஆனாலும் உம்முடைய வேதத்தை மறவேன்.
துன்மார்க்கர் எனக்குக் கண்ணிவைக்கிறார்கள்; ஆனாலும் நான் உம்முடைய கட்டளைகளை விட்டு வழி தவறேன்.
என் உபத்திரவத்தைப்பார்த்து, என்னை விடுவியும், உமது வேதத்தை மறவேன்.
இரட்சிப்பு துன்மார்க்கருக்குத் தூரமாயிருக்கிறது, அவர்கள் உமது பிரமாணங்களைத் தேடார்கள்.
என்னைத் துன்பப்படுத்துகிறவர்களும் என்னை விரோதிக்கிறவர்களும் அநேகர்; ஆனாலும் உம்முடைய சாட்சிகளை விட்டு விலகேன்.
உமது வசனத்தைக் காத்துக் கொள்ளாத துரோகிகளை நான் கண்டபோது, எனக்கு அருவருப்பாயிருந்தது.
காணாமற்போன ஆட்டைப்போல வழிதப்பிப்போனேன்; உமது அடியேனைத் தேடுவீராக; உமது கற்பனைகளை நான் மறவேன்.
| I | צָעִ֣יר | ṣāʿîr | tsa-EER |
| am small | אָנֹכִ֣י | ʾānōkî | ah-noh-HEE |
| and despised: | וְנִבְזֶ֑ה | wĕnibze | veh-neev-ZEH |
| yet do not | פִּ֝קֻּדֶ֗יךָ | piqqudêkā | PEE-koo-DAY-ha |
| I forget | לֹ֣א | lōʾ | loh |
| thy precepts. | שָׁכָֽחְתִּי׃ | šākāḥĕttî | sha-HA-heh-tee |