அப்பொழுது ராஜா என்னைப் பார்த்து: நீ கேட்கிற காரியம் என்ன என்றார். அப்பொழுது நான்: பரலோகத்தின் தேவனை நோக்கி ஜெபம்பண்ணி,
ராஜாவைப் பார்த்து: ராஜாவுக்குச் சித்தமாயிருந்து, அடியேனுக்கு உமது சமுகத்தில் தயை கிடைத்ததானால், என் பிதாக்களின் கல்லறைகளிலிருக்கும் பட்டணத்தைக் கட்டும்படி, யூதா தேசத்துக்கு நீர் என்னை அனுப்பவேண்டிக்கொள்ளுகிறேன் என்றேன்.
பின்னும் நான் ராஜாவைப் பார்த்து ராஜாவுக்குச் சித்தமாயிருந்தால், நான் யூதாதேசத்துக்குப் போய்ச்சேருமட்டும், நதிக்கு அப்புறத்திலிருக்கிற தேசாதிபதிகள் என்னை வழிவிட்டனுப்பும்படிக்கு அவர்களுக்குக் கடிதங்கள் கொடுக்கும்படிக்கும்,
தேவாலயத்துக்கு இருக்கிற அரணின் கதவு வேலைக்கும், நகர அலங்கத்தின் வேலைக்கும், நான் தங்கப்போகிற வீட்டின் வேலைக்கும் வேண்டிய மரங்களை ராஜாவின் வனத்துக் காவலாளனாகிய ஆசாப் எனக்குக் கொடுக்கும்படிக்கும், அவனுக்கும் ஒரு கடிதம் கட்டளையிடப்படுவதாக என்றேன்; என் தேவனுடைய தயவுள்ள கரம் என்மேல் இருந்தபடியால், ராஜா அவைகளை எனக்குக் கட்டளையிட்டார்.
அப்படியே நான் நதிக்கு அப்புறத்திலிருக்கிற தேசாதிபதிகளிடத்துக்கு வந்து, ராஜாவின் கடிதங்களை அவர்களுக்குக் கொடுத்தேன்; ராஜா என்னோடேகூட இராணுவச் சேர்வைக்காரரையும், குதிரைவீரரையும் அனுப்பியிருந்தார்.
நான் எருசலேமுக்கு வந்து, அங்கே மூன்றுநாள் இருந்தபின்பு,
நான் சில மனுஷரைக் கூட்டிக்கொண்டு, ராத்திரியில் எழுந்து நகர சோதனை செய்தேன்; ஆனாலும் எருசலேமுக்காகச் செய்யும்படி என் தேவன் என் மனதிலே வைத்ததை நான் ஒருவருக்கும் அறிவிக்கவில்லை; நான் ஏறிப்போன மிருகமேயல்லாமல் வேறொரு மிருகமும் என்னோடிருந்ததில்லை.
நான் அன்று ராத்திரி பள்ளத்தாக்கின் வாசல்வழியாய்ப் புறப்பட்டு, வலுசர்ப்பத் துரவைக் கடந்து, குப்பைமேட்டு வாசலுக்கு வந்து, எருசலேமில் இடிந்துபோன அலங்கத்தையும், அக்கினியால் சுட்டெரிக்கப்பட்ட அதின் வாசல்களையும் பார்வையிட்டேன்.
there was that was | וָאֶֽעֱבֹר֙ | wāʾeʿĕbōr | va-eh-ay-VORE |
Then | אֶל | ʾel | el |
I went | שַׁ֣עַר | šaʿar | SHA-ar |
on to the | הָעַ֔יִן | hāʿayin | ha-AH-yeen |
gate the | וְאֶל | wĕʾel | veh-EL |
fountain, of | בְּרֵכַ֖ת | bĕrēkat | beh-ray-HAHT |
to | הַמֶּ֑לֶךְ | hammelek | ha-MEH-lek |
and pool: the king's | וְאֵין | wĕʾên | veh-ANE |
but | מָק֥וֹם | māqôm | ma-KOME |
no place beast | לַבְּהֵמָ֖ה | labbĕhēmâ | la-beh-hay-MA |
the for me | לַֽעֲבֹ֥ר | laʿăbōr | la-uh-VORE |
to pass. under | תַּחְתָּֽי׃ | taḥtāy | tahk-TAI |