Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesunaatha Un Adaikalamae - ஏசுநாதா உன் அடைக்கலமே

ஏசுநாதா உன் அடைக்கலமே

பல்லவி

அடைக்கலம் அடைக்கலமே, இயேசுநாதா, உன்
அடைக்கலம் அடைக்கலமே!

அனுபல்லவி

திடனற்றுப் பெலனற்றுன் அடியுற்றழும் ஏழைக்கு. – அடை

சரணங்கள்

1. ஆசையோடு பாவமதில் அலைந்து திரிந்தேனே,
அன்புள்ள பிதா உனை விட்டகன்று பிரிந்தேனே;
மோசமதை யேயலால் மற்றொன்றையும் காணாமலே
தோஷமொடு சேர்ந்தனன் துரத்திடாது சேர்த்தருள்! – அடை

2. கட்டுப்படாக் காயமதின் கெட்ட ரணம் போலவே
மட்டுப்படாப் பாவமதில் மயங்கி உறங்கினேன்;
கெட்டவனே போவெனக் கிளத்தினும் நியாயமே,
கிட்டிவந்தலறும் ஏழைக் கெஞ்சுதல் கேளய்யனே! – அடை

3. சிந்திய உதிரமதும் ஐந்து திருக்காயமும்
நொந்துரு கெனதுமனச் சஞ்சல மகற்றிடும்;
பந்தமிகும் பாவி என்றன் கெஞ்சிடுங் கரத்தினை
எந்தவிதமுந் தள்ளாமல் இரங்கிடு மையனே! – அடை

4. என்னிடத்தில் வருவோரை எந்தவிதமும் தள்ளேன்
என்று சொன்ன வாக்கதினில் எனக்கும் பங்கில்லையோ?
அன்றுனது பக்கமதில் ஆயிருந்த கள்ளனுக்கு
இன்றுபர தீசிலிருப்பா யென்றுரைத்தா யல்லவோ? – அடை

Yesunaatha Un Adaikalamae – ஏசுநாதா உன் அடைக்கலமே Lyrics in English

Aesunaathaa un ataikkalamae

Pallavi

Ataikkalam ataikkalamae, Yesunaathaa, un
Ataikkalam ataikkalamae!

Anupallavi

Thidanattaுp pelanattaுn atiyuttalum aelaikku. – atai

Saranangal

1. Aasaiyodu paavamathil alainthu thirinthaenae,
Anpulla pithaa unai vittakantu pirinthaenae;
Mosamathai yaeyalaal mattaொntaiyum kaannaamalae
Thoshamodu sernthanan thuraththidaathu serththarul! – atai

2. Kattuppadaak kaayamathin ketta ranam polavae
Mattuppadaap paavamathil mayangi uranginaen;
Kettavanae povenak kilaththinum niyaayamae,
Kittivanthalaraுm aelaik kenjuthal kaelayyanae! – atai

3. Sinthiya uthiramathum ainthu thirukkaayamum
Nonthuru kenathumanach sanjala makattidum;
Panthamikum paavi entan kenjidung karaththinai
Enthavithamun thallaamal irangidu maiyanae! – atai

4. Ennidaththil varuvorai enthavithamum thallaen
Entu sonna vaakkathinil enakkum pangillaiyo?
Antunathu pakkamathil aayiruntha kallanukku
Intupara theesiliruppaa yenturaiththaa yallavo? – atai

PowerPoint Presentation Slides for the song Yesunaatha Un Adaikalamae – ஏசுநாதா உன் அடைக்கலமே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesunaatha Un Adaikalamae – ஏசுநாதா உன் அடைக்கலமே PPT
Yesunaatha Un Adaikalamae PPT

அடை அடைக்கலமே அடைக்கலம் பாவமதில் ஏசுநாதா பல்லவி இயேசுநாதா அனுபல்லவி திடனற்றுப் பெலனற்றுன் அடியுற்றழும் ஏழைக்கு சரணங்கள் ஆசையோடு அலைந்து திரிந்தேனே அன்புள்ள பிதா உனை தமிழ்