இயேசு நாமமல்லாம் உலகினில் – Yesu Naamam Ulaginil
பல்லவி
யேசு நாமமல்லாம்-உலகினில்
வேறு நாமம் இல்லை,-கிறிஸ்து
அனுபல்லவி
தேசுலாவிய கேரூபீம்பணி
திவ்ய வானவர் முனிவர் கண்மணி,
மாசில்லாத மெய்ஞ்ஞான சிகாமணி,
மதிக்கும் சத்திய வேத சிரோமணி – யேசு
சரணங்கள்
1. வானமும் புவியும்-கதி-ரோன் மதி உடுவும்
கானல் வரை கடலும்-நர-ரான எவ்வுயிரும்
தானே படைத்தருள் ஆதி காரணன்,
சர்வ ஜீவ தயாபரா பூரணன்,
ஈனர் வாக்குக் கெட்டாத மெய்யாரணன்,
இலங்கும் வேத சங்கீத பாராயணன். – யேசு
2. காவிலாத மேவை-செய்-தீவினையதனால்
பூவின் மாந்தர் படும்-துயர்-தேவ கோபமற,
பாவிகளைப் பரனோடுற வாக்கப்,
பரம எருசலேம் நகர் சேர்க்க,
மேவுமலகை அரணைத் தூளாக்க,
மேதினியில் சமாதானம் உண்டாக்க. – யேசு
3. பண்டு வேதியர்கள்-கைக்-கொண்ட மாமறையில்
விண்ட நாமமல்லாமல்-உயர்-அண்ட மீதினிலும்,
மண்டலத்திலும், ஆழி கீழிலும்
மாருதம் செலும் அட்ட திக்கிலும்,
தொண்டர் கூக்குரல் எட்டும் தூரத்திலும்,
துஷ்டர் வர விரும்பாத இடத்திலும். – யேசு
இயேசு நாமமல்லாம் உலகினில் – Yesu Naamam Ulaginil Lyrics in English
Yesu naamamallaam ulakinil – Yesu Naamam Ulaginil
Pallavi
Yaesu naamamallaam-ulakinil
Vaeraு naamam illai,-Kristhu
Anupallavi
Thaesulaaviya kaeroopeempanni
Thivya vaanavar munivar kannmanni,
Maasillaatha meynjnjaana sikaamanni,
Mathikkum saththiya vaetha siromanni – yaesu
Saranangal
1. Vaanamum puviyum-kathi-ron mathi uduvum
Kaanal varai kadalum-nara-raana evvuyirum
Thaanae pataiththarul aathi kaaranan,
Sarva jeeva thayaaparaa pooranan,
Eenar vaakkuk kettatha meyyaaranan,
Ilangum vaetha sangaீtha paaraayanan. – yaesu
2. Kaavilaatha maevai-sey-theevinaiyathanaal
Poovin maanthar padum-thuyar-thaeva kopamara,
Paavikalaip paranodura vaakkap,
Parama Jerusalem nakar serkka,
Maevumalakai arannaith thoolaakka,
Maethiniyil samaathaanam unndaakka. – yaesu
3. Panndu vaethiyarkal-kaik-konnda maamaraiyil
Vinnda naamamallaamal-uyar-annda meethinilum,
Manndalaththilum, aali geelilum
Maarutham selum atta thikkilum,
Thonndar kookkural ettum thooraththilum,
Thushdar vara virumpaatha idaththilum. – yaesu
PowerPoint Presentation Slides for the song இயேசு நாமமல்லாம் உலகினில் – Yesu Naamam Ulaginil
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesu Naamam Ulaginil – இயேசு நாமமல்லாம் உலகினில் PPT
Yesu Naamam Ulaginil PPT

