பல்லவி
ஏகப்பரம ஒளி – எனும் பாலகனாய்த்
தேவன் பாரினில் பிறந்தார்
அனுபல்லவி
நீச மகாஜன பாவப்பரிகார
நேச மனோகரனான மரிசுதன்
சரணங்கள்
1. பார்தனில் தாவிய பாவந் தொலைக்கவே
பூர்வத்திலே பிதா நேமப்படி தீர்க்கர்
ஓர் அற்புதன் எழும்பிடுவா ரென
சீர் பெறவோதிய செய்தி விளங்கிட – ஏக
2. ஆயர்கள் இராக்காலம் ஆட்டு மந்தை காக்க
அந்தரத்தில் தேவதூதர் மொழி கேட்க
தேவலோகம் களிகூர்ந்து பாடல் பாட
தேவன் பெத்லேம் ஆவின் கூடத்தேழையாக – ஏக
3. விண்ணினில் ஜோதிகள் எண்ணிலா சேனைகள்
மண்ணினில் ஜாதி உயிர்த்திரள் போற்றிட
கண்ணினில் கண்ணொளியாகும் குமாரனாய்
அண்ணலாம் இயேசு அருணோதயமான – ஏக
4
4. அந்தரத்தில் தேவசுந்தர பாலகன்
எந்தவுலகுக்கும் ஏற்ற நல் இரட்சகன்
வந்தவதரித்த வானவராம் நேசன்
சொந்தம் நம்மோடினின்றும் என்றும் சகவாசன் – ஏக
Yeapparama Oli Enum Baalanakaai – ஏகப்பரம ஒளி எனும் பாலகனாய்த் Lyrics in English
Pallavi
Aekapparama oli – enum paalakanaayth
Dhevan paarinil piranthaar
Anupallavi
Neesa makaajana paavapparikaara
Naesa manokaranaana marisuthan
Saranangal
1. Paarthanil thaaviya paavan tholaikkavae
Poorvaththilae pithaa naemappati theerkkar
Or arputhan elumpiduvaa rena
Seer peravothiya seythi vilangida – aeka
2. Aayarkal iraakkaalam aattu manthai kaakka
Antharaththil thaevathoothar moli kaetka
Thaevalokam kalikoornthu paadal paada
Dhevan pethlaem aavin koodaththaelaiyaaka – aeka
3. Vinnnninil jothikal ennnnilaa senaikal
Mannnninil jaathi uyirththiral pottida
Kannnninil kannnnoliyaakum kumaaranaay
Annnalaam Yesu arunnothayamaana – aeka
4
4. Antharaththil thaevasunthara paalakan
Enthavulakukkum aetta nal iratchakan
Vanthavathariththa vaanavaraam naesan
Sontham nammotinintum entum sakavaasan – aeka
PowerPoint Presentation Slides for the song Yeapparama Oli Enum Baalanakaai – ஏகப்பரம ஒளி எனும் பாலகனாய்த்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yeapparama Oli Enum Baalanakaai – ஏகப்பரம ஒளி எனும் பாலகனாய்த் PPT
Yeapparama Oli Enum Baalanakaai PPT

