1. விதைப்பும் அறுப்புமே
பூமியின் மீதினிலே
மாறி மாறி வருமே
பகலும் இரவுமாய்
வருடங்கள் மாயமாய்
நழுவியே சென்றிடுமே
பல்லவி
சிந்திப்பீர், சிந்திப்பீர்
காலங்களைச் சிந்திப்பீர்
இயேசு கிறிஸ்துவின்
வேலை ஒன்றே – இன்று
பிரதானம்
2. ஒன்று இரண்டென
எத்தனை வருடங்கள்
கனவென கழிந்தது பார்
எஞ்சிய நாட்களை வஞ்சிக்காது
தேவப் போரினில் ஈடுபடு – சிந்திப்பீர்
3. நாடுகள் நடுவினில்
வாய்ப்புகள் உனக்காக
எத்தனை நாட்கள் உண்டு
சாதகமானதோர் வாசல் இங்கு கண்டு
வந்து பயன்படுத்து – சிந்திப்பீர்
4. ஆழக்கடல்களில்
படகைச் செலுத்திட
கடல்போன்ற தேவையல்லோ?
பாவக் கடலினில் மூழ்கிடும் யாவருக்கும்
படகு உன் சாட்சியல்லோ? – சிந்திப்பீர்
விதைப்பும் அறுப்புமே -Vithaippum Aruppumae Lyrics in English
1. Vithaippum araுppumae poomiyin meethinilae maari maari varumae pakalum iravumaay varudangal maayamaay naluviyae sentidumae pallavi sinthippeer, sinthippeer kaalangalaich sinthippeer Yesu Kristhuvin vaelai onte – intu pirathaanam 2. Ontu iranndena eththanai varudangal kanavena kalinthathu paar enjiya naatkalai vanjikkaathu thaevap porinil eedupadu – sinthippeer 3. Naadukal naduvinil vaayppukal unakkaaka eththanai naatkal unndu saathakamaanathor vaasal ingu kanndu vanthu payanpaduththu – sinthippeer 4. Aalakkadalkalil padakaich seluththida kadalponta thaevaiyallo? Paavak kadalinil moolkidum yaavarukkum padaku un saatchiyallo? – sinthippeer
PowerPoint Presentation Slides for the song விதைப்பும் அறுப்புமே -Vithaippum Aruppumae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vithaippum Aruppumae – விதைப்பும் அறுப்புமே PPT
Vithaippum Aruppumae PPT

