விந்தை கிறிஸ்தேசு ராசா!
உந்தஞ் சிலுவை என் மேன்மை
சுந்தரம் மிகும் இந்தப் பூவில்
எந்த மேன்மைகள் எனக்கிருப்பினும் — விந்தை
1. திரண்ட செல்வம் , உயர்ந்த கல்வி ,
செல்வாக்குகள் மிக விருந்தாலும் ,
குருசை நோக்கிப் பார்க்க எனக்கு
உரிய பெருமை யாவும் அற்பமே — விந்தை
2. உம் குருசே ஆசிக்கெல்லாம்
ஊற்றாம் , வற்றா ஜீவநதியாம்;
துங்க இரத்த ஊற்றில் மூழ்கித்
தூய்மையடைந்து மேன்மையாகினேன் — விந்தை
3. சென்னி , விலா , கை கானின்று
சிந்துததோ! துயரோடன்பு;
மன்னா , இதைப் போன்ற காட்சி
எந்நாளிலுமே எங்கும் காணேன் — விந்தை
4. இந்த விந்தை அன்புக் கீடாய்
என்ன காணிக்கை ஈந்திடுவேன்;
எந்த அரும் பொருள் ஈடாகும்?
என்னை முற்றிலும் உமக்களிக்கிறேன் — விந்தை
Vinthai Kristhuesu Raasa Lyrics in English
Vinthai kiristhaesu raasaa!
Unthanj siluvai en maenmai
Suntharam mikum inthap poovil
Entha maenmaikal enakkiruppinum — vinthai
1. Thirannda selvam , uyarntha kalvi ,
Selvaakkukal mika virunthaalum ,
Kurusai Nnokkip paarkka enakku
Uriya perumai yaavum arpamae — vinthai
2. Um kuruse aasikkellaam
Oottaாm , vattaா jeevanathiyaam;
Thunga iraththa oottil moolkith
Thooymaiyatainthu maenmaiyaakinaen — vinthai
3. Senni , vilaa , kai kaanintu
Sinthuthatho! Thuyarodanpu;
Mannaa , ithaip ponta kaatchi
Ennaalilumae engum kaanneen — vinthai
4. Intha vinthai anpuk geedaay
Enna kaannikkai eenthiduvaen;
Entha arum porul eedaakum?
Ennai muttilum umakkalikkiraேn — vinthai
PowerPoint Presentation Slides for the song Vinthai Kristhuesu Raasa
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vinthai Kristhuesu Raasa – விந்தை கிறிஸ்தேசு ராசா! PPT
Vinthai Kristhuesu Raasa PPT

