வேதமே என்ன சொல்லுவேன்?
பல்லவி
வேதமே, என்ன சொல்லுவேன்?-நின் மாட்சியை.
அனுபல்லவி
சேத மிலாது நன்னாதர் தம் அருள் திருப்
பாதமுறும் நெறி யோது மொரே சத்ய. – வேத
சரணங்கள்
1. கண்முன் நீ எழுந்தானால் கரையிலா ஞானம்;
காந்தி நற்பனி மழை கசிந்திடும் வானம்;
புண் மனமுடை யோர்க்குப் புகழருந் தானம்;
புசித்திடக் கசித்திட ருசித்திடும் பானம். – வேத
2. சிறியவர் பெரியவர் செல்வர்கள் வலியார்
தீரர்கள் வீரர்கள் சீரியர் எளியார்
அறிஞர்கள் அல்லவர் ஆடவர் மெலியார்
அனைவரும் அருந்திட அருந்திடச் சலியார். – வேத
3. கனபல மருளுவாய், தினந்தினங் காலை
களைப்பினைப் போக்குவாய், களைப்புறு மாலை
தினமென திதயமே திருத்தலுன் வேலை,
செப்பருங் கனிதருங் கற்பகச் சோலை. – வேத
4. அகமுறு மானைகள்[1] விழுந்து தள்ளாடும்;
அருள்நதி ஆடுகள் நடந்துனி லோடும்;
தகவுனின் கரைகளில் குருவிகள் கூடும்;
தருக்கள் செழித்திருக்கும் தாசர்கள் நாடும். – வேத
5. பொன் அபரஞ்சியிலும்[2] உன் விலை பெரிதே!
பூவுலகினிலுனக் குவமைக ளரிதே;
நின்னை யசட்டை செய்வோர் நிலைமிக வறிதே!
நின்படிப் பறியாதோர் கல்விமா சிறிதே! – வேத
6. இருபுறங் கருக்குவாள் தனிலும் நீ கூரே!
இகபரம் ரண்டிற்கும் உன்வழி நேரே!
கிருபை எத்தனமுனக் கேற்ற நற்பேரே!
கிறிஸ்துவின் அருள்தனை எனக்கு நீ வாரே![3] – வேத
Vedhamae Enna Solluvean – வேதமே என்ன சொல்லுவேன் Lyrics in English
Vaethamae enna solluvaen? Pallavi vaethamae, enna solluvaen?-nin maatchiyai. Anupallavi setha milaathu nannaathar tham arul thirup paathamuraுm neri yothu morae sathya. – vaetha saranangal 1. Kannmun nee elunthaanaal karaiyilaa njaanam; kaanthi narpani malai kasinthidum vaanam; punn manamutai yorkkup pukalarun thaanam; pusiththidak kasiththida rusiththidum paanam. – vaetha 2. Siriyavar periyavar selvarkal valiyaar theerarkal veerarkal seeriyar eliyaar arinjarkal allavar aadavar meliyaar anaivarum arunthida arunthidach saliyaar. – vaetha 3. Kanapala maruluvaay, thinanthinang kaalai kalaippinaip pokkuvaay, kalaippuraு maalai thinamena thithayamae thiruththalun vaelai, sepparung kanitharung karpakach solai. – vaetha 4. Akamuraு maanaikal[1] vilunthu thallaadum; arulnathi aadukal nadanthuni lodum; thakavunin karaikalil kuruvikal koodum; tharukkal seliththirukkum thaasarkal naadum. – vaetha 5. Pon aparanjiyilum[2] un vilai perithae! Poovulakinilunak kuvamaika larithae; ninnai yasattaை seyvor nilaimika varithae! Ninpatip pariyaathor kalvimaa sirithae! – vaetha 6. Irupurang karukkuvaal thanilum nee koorae! Ikaparam ranntirkum unvali naerae! Kirupai eththanamunak kaetta narpaerae! Kristhuvin arulthanai enakku nee vaarae![3] – vaetha
PowerPoint Presentation Slides for the song Vedhamae Enna Solluvean – வேதமே என்ன சொல்லுவேன்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vedhamae Enna Solluvean – வேதமே என்ன சொல்லுவேன் PPT
Vedhamae Enna Solluvean PPT

