Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vaasalkalai Uyarthungal - வாசல்களை உயர்த்துங்கள்

1. வாசல்களை உயர்த்துங்கள்
மகா கர்த்தாவை வாழ்த்துங்கள்
ராஜாதி ராஜா வருவார்,
பெரிய தெய்வ மைந்தனார்.
உலகத்தைச் சிருஷ்டித்து
ரட்சித்த தேவரீருக்கு
துதி, தயாபரா
ஆலோசனைக் கர்த்தா.

2. அவர் மா சாந்தமானவர்,
சகாயர் நீதியுற்றவர்,
ராஜாவின் முடி சுத்தமே,
அவர் செங்கோல் இரக்கமே;
இக்கட்டை நீக்கினார் அன்பாய்
புகழ்ந்து பாடுங்கள் ஒன்றாய்
துதி, மா கர்த்தரே,
பலத்த மீட்பரே.

3. இக்கர்த்தர் உட்பிரவேசிக்கும்
போதெந்த ஊரும் தேசமும்
களிக்கும், எங்கள் இதயம்
அடைவதும் மெய்ப் பாக்கியம்
அவர் சந்தோஷப் பொழுதே.
மகிழ்ச்சியை அளிப்பாரே;
ஆ, தேற்றும் உமக்கே
புகழ்ச்சி, கர்த்தரே.

4. வாசல்களை உயர்த்துங்கள்
நெஞ்சை அலங்கரியுங்கள்
பக்தியின் குருத்தோலையும்
மகிழ்ச்சியின் கிளைகளும்
தெளியுங்கள், ராஜா வாறார்,
உங்களையும் இரட்சிப்பார்
கர்த்தாவுக் கென்றைக்கும்
புகழ்ச்சி துதியும்.

5. என்னண்டை இயேசு, வாருமேன்,
என் வாசலைத் திறக்கிறேன்
அருள் புரியும் தேவரீர்
என் நெஞ்சில் தங்கக்கடவீர்
மோட்ச வழியைக் காண்பிக்கும்
நல் ஆவியைத் தந்தருளும்
என்றைக்கும் உமக்கே
புகழ்ச்சி, கர்த்தரே.

Vaasalkalai Uyarthungal – வாசல்களை உயர்த்துங்கள் Lyrics in English

1. Vaasalkalai uyarththungal makaa karththaavai vaalththungal raajaathi raajaa varuvaar, periya theyva mainthanaar. Ulakaththaich sirushtiththu ratchiththa thaevareerukku thuthi, thayaaparaa aalosanaik karththaa. 2. Avar maa saanthamaanavar, sakaayar neethiyuttavar, raajaavin muti suththamae, avar sengaோl irakkamae; ikkattaை neekkinaar anpaay pukalnthu paadungal ontay thuthi, maa karththarae, palaththa meetparae. 3. IkKarththar utpiravaesikkum pothentha oorum thaesamum kalikkum, engal ithayam ataivathum meyp paakkiyam avar santhoshap poluthae. Makilchchiyai alippaarae; aa, thaettaுm umakkae pukalchchi, karththarae. 4. Vaasalkalai uyarththungal nenjai alangariyungal pakthiyin kuruththolaiyum makilchchiyin kilaikalum theliyungal, raajaa vaaraar, ungalaiyum iratchippaar karththaavuk kentaikkum pukalchchi thuthiyum. 5. Ennanntai Yesu, vaarumaen, en vaasalaith thirakkiraேn arul puriyum thaevareer en nenjil thangakkadaveer motcha valiyaik kaannpikkum nal aaviyaith thantharulum entaikkum umakkae pukalchchi, karththarae.

PowerPoint Presentation Slides for the song Vaasalkalai Uyarthungal – வாசல்களை உயர்த்துங்கள்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaasalkalai Uyarthungal – வாசல்களை உயர்த்துங்கள் PPT
Vaasalkalai Uyarthungal PPT

கர்த்தரே புகழ்ச்சி வாசல்களை உயர்த்துங்கள் ராஜா துதி மா உமக்கே மகா கர்த்தாவை வாழ்த்துங்கள் ராஜாதி வருவார் பெரிய தெய்வ மைந்தனார் உலகத்தைச் சிருஷ்டித்து ரட்சித்த தமிழ்