வாரா வினை வந்தாலும், சோராதே, மனமே;
வல்ல கிறிஸ்துனக்கு நல்ல தாரகமே.
1. அலகை சதித்துன் மீது வலை வீசினாலும்,
அஞ்சாதே, ஏசுபரன் தஞ்சம் விடாதே. — வாரா
2. உலகம் எதிர்த்துனக்கு மலைவுசெய்தாலும்,
உறுதி விட்டயராதே, நெறி தவறாதே. — வாரா
3. பெற்ற பிதாப்போல் உன் குற்றம் எண்ணாரே;
பிள்ளை ஆகில் அவர் தள்ளிவிடாரே. — வாரா
4. தன் உயிர் ஈந்திட்ட உன் யேசுநாதர்
தள்ளுவரோ? அன்பு கொள்ளவர் மீதே. — வாரா
5. மரணம் உறுகின்ற தருணம் வந்தாலும்,
மருள விழாதே, நல் அருளை விடாதே. — வாரா
6. வையகமே உனக்குய்ய ஓர் நிலையோ?
வானவனை முற்றும் தான் அடைவாயே! — வாரா
Vaaraa Vinai Vanthaalum Lyrics in English
Vaaraa vinai vanthaalum, soraathae, manamae;
Valla Kristhunakku nalla thaarakamae.
1. Alakai sathiththun meethu valai veesinaalum,
Anjaathae, aesuparan thanjam vidaathae. — vaaraa
2. Ulakam ethirththunakku malaivuseythaalum,
Uraுthi vittayaraathae, neri thavaraathae. — vaaraa
3. Petta pithaappol un kuttam ennnnaarae;
Pillai aakil avar thallividaarae. — vaaraa
4. Than uyir eenthitta un yaesunaathar
Thalluvaro? Anpu kollavar meethae. — vaaraa
5. Maranam uraுkinta tharunam vanthaalum,
Marula vilaathae, nal arulai vidaathae. — vaaraa
6. Vaiyakamae unakkuyya or nilaiyo?
Vaanavanai muttaுm thaan ataivaayae! — vaaraa
PowerPoint Presentation Slides for the song Vaaraa Vinai Vanthaalum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaaraa Vinai Vanthaalum – வாரா வினை வந்தாலும் சோராதே மனமே PPT
Vaaraa Vinai Vanthaalum PPT

