Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vaalga Siluvayae - வாழ்க சிலுவையே

1. வாழ்க, சிலுவையே; வாழ்க!
பாரமற்ற பாரமே
உன்னை முழுமனதார
தோள் மேல் ஏற்றிக் கொள்வேனே.

2. இந்த நிந்தை லச்சை அல்ல,
இது வெட்கம் அல்லவே;
ஏனெனில் பொல்லாப்புக்கல்ல
நன்மைக்காக வருதே.

3. உலகத்தின் ஜோதியான
இயேசு தாமும் நிந்தைக்கே
ஏதுவாகி, ஈனமான
சிலுவையில் மாண்டாரே.

4. சிலுவை சுமந்தோராக
அவரைப் பின்பற்றுவோம்;
தீரங்கொண்டு வீரராக
துன்பம் நிந்தை சகிப்போம்.

5. நேசர் தயவாய் நம்மோடு
சொல்லும் ஒரு வார்த்தையே,
துக்கத்தை எல்லாம் கட்டோடு
நீங்கிப் போகச் செய்யுமே.

6. சாகும்போது, திறவுண்ட
வானத்தையும், அதிலே
மகிமையினால் சூழுண்ட
இயேசுவையும் காண்போமே.

7. வாழ்க, சிலுவையே! வாழ்க;
மோட்சத்தின் முன் தூதனே;
நீதிமான்கள் இளைப்பாற
நேர் வழியாம் வாசலே!

Vaalga Siluvayae – வாழ்க சிலுவையே Lyrics in English

1. Vaalka, siluvaiyae; vaalka! Paaramatta paaramae unnai mulumanathaara thol mael aettik kolvaenae. 2. Intha ninthai lachchaை alla, ithu vetkam allavae; aenenil pollaappukkalla nanmaikkaaka varuthae. 3. Ulakaththin jothiyaana Yesu thaamum ninthaikkae aethuvaaki, eenamaana siluvaiyil maanndaarae. 4. Siluvai sumanthoraaka avaraip pinpattaுvom; theerangaொnndu veeraraaka thunpam ninthai sakippom. 5. Naesar thayavaay nammodu sollum oru vaarththaiyae, thukkaththai ellaam kattaோdu neengip pokach seyyumae. 6. Saakumpothu, thiravunnda vaanaththaiyum, athilae makimaiyinaal soolunnda Yesuvaiyum kaannpomae. 7. Vaalka, siluvaiyae! Vaalka; motchaththin mun thoothanae; neethimaankal ilaippaara naer valiyaam vaasalae!

PowerPoint Presentation Slides for the song Vaalga Siluvayae – வாழ்க சிலுவையே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaalga Siluvayae – வாழ்க சிலுவையே PPT
Vaalga Siluvayae PPT

வாழ்க சிலுவையே நிந்தை பாரமற்ற பாரமே உன்னை முழுமனதார தோள் ஏற்றிக் கொள்வேனே லச்சை அல்ல வெட்கம் அல்லவே ஏனெனில் பொல்லாப்புக்கல்ல நன்மைக்காக வருதே உலகத்தின் தமிழ்