Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Untran Thirupaniyai - உன்றன் திருப்பணியை

பல்லவி
உன்றன் திருப்பணியை உறுதியுடன் புரிய
உதவாத பாவி நானே.

அனுபல்லவி

அந்தகாரமே நின்றுன் அருணோதயமே கண்டு
வந்த நாள் முதற்கொண்டு வைத்தாய் எனக்குன் தொண்டு – உன்றன்

சரணங்கள்

1. வேதனத்தின் பொருட்டோ, மேலவர் நிமித்தமே
வெளியிட் டறிக்கை செய்யவோ?-உல
காதாயம் சுயநயம் அகிலத்துரிய புகழ்
அடைந்து ப்ரகாசிக்கவோ?
ஓதிக்காலங் கழிக்க உலகாவி அடைந்தவன்
நீதிக்கெனைப் பலியாய் நேர்ந்துகொண் டுழைக்கேனோ? – உன்றன்

2. வேனல் குளிரைக் கண்டு மேனி மிகவெருண்டு
வெளியேறா தகம் துஞ்சினேன்,-வேளைப்
பான முணவுபிந்த பலபிணி வருமென்ற
பயத்தாலே நித மஞ்சினேன்;
கானகம் மலைசென்று கடும்பணி குளிர் வென்று
போனகம் நீரகன்று புவியி லுழைத்த யேசு. – உன்றன்

3. காடோ, மலை நதியோ, கடலோ, கடந்தலுத்துக்
கஸ்தி மிகவே அடைந்து,-உடல்
பாடுங் கவலை நோயும் பசியும் நிருவாணமும்,
பகைவர் திருடர் மோசமும்,
சாடக் கிறிஸ்துவுக்குத் தகுந்த பானபலியாய்
ஓடத்தனை யொப்பித்தோன் உறுதி யெனக்கில்லையே. – உன்றன்

4. வண்டி வகைகளோடு வாழ்ந்தும் எனது கூடு
மயங்கி அயர்ந்து வாடுதே,-இனி
என்று மிருப்பிடத்திலிருந்து பணி புரிய
இசைந்தென் மனது நாடுதே;
ஒன்றும் உதவியின்று ஊரே அலைந்து சென்று,
நன்றே நிதம்புரிந்த நரனே பரனே யேசு. – உன்றன்

Untran Thirupaniyai – உன்றன் திருப்பணியை Lyrics in English

Pallavi untan thiruppanniyai uraுthiyudan puriya uthavaatha paavi naanae. Anupallavi anthakaaramae nintun arunnothayamae kanndu vantha naal mutharkonndu vaiththaay enakkun thonndu – untan saranangal 1. Vaethanaththin poruttaோ, maelavar nimiththamae veliyit darikkai seyyavo?-ula kaathaayam suyanayam akilaththuriya pukal atainthu prakaasikkavo? Othikkaalang kalikka ulakaavi atainthavan neethikkenaip paliyaay naernthukonn dulaikkaeno? – untan 2. Vaenal kuliraik kanndu maeni mikaverunndu veliyaeraa thakam thunjinaen,-vaelaip paana munavupintha palapinni varumenta payaththaalae nitha manjinaen; kaanakam malaisentu kadumpanni kulir ventu ponakam neerakantu puviyi lulaiththa yaesu. – untan 3. Kaatoo, malai nathiyo, kadalo, kadanthaluththuk kasthi mikavae atainthu,-udal paadung kavalai Nnoyum pasiyum niruvaanamum, pakaivar thirudar mosamum, saadak Kristhuvukkuth thakuntha paanapaliyaay odaththanai yoppiththon uraுthi yenakkillaiyae. – untan 4. Vannti vakaikalodu vaalnthum enathu koodu mayangi ayarnthu vaaduthae,-ini entu miruppidaththilirunthu panni puriya isainthen manathu naaduthae; ontum uthaviyintu oorae alainthu sentu, nante nithampurintha naranae paranae yaesu. – untan

PowerPoint Presentation Slides for the song Untran Thirupaniyai – உன்றன் திருப்பணியை

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Untran Thirupaniyai – உன்றன் திருப்பணியை PPT
Untran Thirupaniyai PPT

உன்றன் புரிய கண்டு யேசு பல்லவி திருப்பணியை உறுதியுடன் உதவாத பாவி நானே அனுபல்லவி அந்தகாரமே நின்றுன் அருணோதயமே நாள் முதற்கொண்டு வைத்தாய் எனக்குன் தொண்டு தமிழ்