Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Unnatha Devanukae Magimai - உன்னத தேவனுக்கே மகிமை

உன்னத தேவனுக்கே மகிமை
உலகில் சமாதானமாமே
காரிருள் நீங்கிடக் காசினி மீதிலே
கதிரொளியாய் ஜெனித்தார்

அல்லேலுயா அல்லேலுயா
அல்லேலுயா துதியவர்க்கே

மானிடர் மேல் இவர்கன்பிதுவோ
மனுக்கோலமாய் மனுவேலனார்
மாட்சிமை யாவையும் துறந்தே இவ்வுலகில்
மாணொளியாய் ஜெனித்தார்

தாரகை என அவர் தோன்றிடவே
நேர் பாதையில் நடத்திடவே
தற்பரன் கிருபையும் சத்திய மீந்திட
தன் ஒளியாய் ஜெனித்தார்

வாழ்த்துவோம் பாலகன் இயேசு பரன்
வல்ல தேவனின் ஏக சுதன்
வாஞ்சித்தாரே எம்மில் வாசம் செய்திடவே
வானொளியாய் ஜெனித்தார்

தாவீதின் வேர் இவராய் அவனின்
ஜெய ராஜ்ஜியம் ஸ்தாபிக்கவே
தாசனின் ரூபமாய் தாரணி மீதிலே
தாம் உதித்தார் ஒளியாய்

Unnatha Devanukae Magimai- உன்னத தேவனுக்கே மகிமை Lyrics in English

unnatha thaevanukkae makimai
ulakil samaathaanamaamae
kaarirul neengidak kaasini meethilae
kathiroliyaay jeniththaar

allaeluyaa allaeluyaa
allaeluyaa thuthiyavarkkae

maanidar mael ivarkanpithuvo
manukkolamaay manuvaelanaar
maatchimai yaavaiyum thuranthae ivvulakil
maannoliyaay jeniththaar

thaarakai ena avar thontidavae
naer paathaiyil nadaththidavae
tharparan kirupaiyum saththiya meenthida
than oliyaay jeniththaar

vaalththuvom paalakan Yesu paran
valla thaevanin aeka suthan
vaanjiththaarae emmil vaasam seythidavae
vaanoliyaay jeniththaar

thaaveethin vaer ivaraay avanin
jeya raajjiyam sthaapikkavae
thaasanin roopamaay thaaranni meethilae
thaam uthiththaar oliyaay

PowerPoint Presentation Slides for the song Unnatha Devanukae Magimai- உன்னத தேவனுக்கே மகிமை

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Unnatha Devanukae Magimai – உன்னத தேவனுக்கே மகிமை PPT
Unnatha Devanukae Magimai PPT

தமிழ்