நீரே எங்கள் கதி
உன்னையன்றி வேறேகதி ஒருவரில்லையே ஸ்சுவாமி
அன்னை தந்தை உற்றார் சுற்றார் – ஆருமுதவுவரோ?
அதிசய மனுவேலா! ஆசை என் இயேசு ஸ்வாமி!
1. பண்ணின துரோகமெல்லாம் – எண்ணினா லெத்தனைகோடி
பாதகத்துக் குண்டோ எல்லை – பரதவித்தேனே தேடி
கண்ணினாலுன் திருவடிக் – காண நான் தகுமோதான்?
கடையனுக்கருள்புரி – மடியுமுன் இயேசு ஸ்வாமி!
2. அஞ்சியஞ்சித் தூர நின்றேன் – சஞ்சலங்களை நான் சொல்லி
அலைகடல் துரும்புபோல் – மலைவு கொண்டே னானையோ!
கெஞ்சிக் கெஞ்சிக் கூவு மிந்த – வஞ்சகன் முகம்பாராய்க்
கிட்டி என்னிடம் சேர்ந்து கிருபைவை இயேசு ஸ்வாமி!
3. எத்தனை கற்றாலும் தேவ – பக்தியேது மற்ற பாவி
எவ்வளவு புத்திகேட்டும் – அவ்வளவுக்கதி தோஷி
பித்தனைப் போல பிதற்றிக் – கத்தியே புலம்பு மேழைப்
பேதையைக் கடைத்தேற்றிப் – பிழைக்கவை இயேசு ஸ்வாமி!
4. கள்ளனாம் கபடனென்னைத் – தள்ளிவிட்டா லாவதென்ன
கல்லைப்போல் கடினங்கொண்ட – கர்ம சண்டாளன் பாழும்
உள்ளமுங்கரைந்தே உன்றன் – உயர் சிலுவையினன்பால்
உலையிலிட்ட மெழுகாய் – உருகவை இயேசு ஸ்வாமி!
Unnaiyanri Vaeraekathi Lyrics in English
Neerae engal kathi unnaiyanti vaeraேkathi oruvarillaiyae ssuvaami annai thanthai uttaாr suttaாr – aarumuthavuvaro? Athisaya manuvaelaa! Aasai en Yesu svaami! 1. Pannnnina thurokamellaam – ennnninaa leththanaikoti paathakaththuk kunntoo ellai – parathaviththaenae thaeti kannnninaalun thiruvatik – kaana naan thakumothaan? Kataiyanukkarulpuri – matiyumun Yesu svaami! 2. Anjiyanjith thoora ninten – sanjalangalai naan solli alaikadal thurumpupol – malaivu konntae naanaiyo! Kenjik kenjik koovu mintha – vanjakan mukampaaraayk kitti ennidam sernthu kirupaivai Yesu svaami! 3. Eththanai kattaாlum thaeva – pakthiyaethu matta paavi evvalavu puththikaettum – avvalavukkathi thoshi piththanaip pola pithattik – kaththiyae pulampu maelaip paethaiyaik kataiththaettip – pilaikkavai Yesu svaami! 4. Kallanaam kapadanennaith – thallivitta laavathenna kallaippol katinangaொnnda – karma sanndaalan paalum ullamungarainthae untan – uyar siluvaiyinanpaal ulaiyilitta melukaay – urukavai Yesu svaami!
PowerPoint Presentation Slides for the song Unnaiyanri Vaeraekathi
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Unnaiyanri Vaeraekathi – நீரே எங்கள் கதி PPT
Unnaiyanri Vaeraekathi PPT

