Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Um Rajyam Varunkaalai - உம் ராஜ்யம் வருங் காலை

1. உம் ராஜ்யம் வருங் காலை கர்த்தரே
அடியேனை நினையும் என்பதாய்
சாகும் கள்ளன் விஸ்வாச நோக்காலே
விண் மாட்சி கண்டு சொன்னான் தெளிவாய்.

2. அவர் ஓர் ராஜா என்று சொல்லுவார்
எவ்வடையாளமும் கண்டிலாரே;
தம் பெலனற்ற கையை நீட்டினார்;
முட்கிரீடம் நெற்றி சூழ்ந்து பீறிற்றே.

3. ஆனாலும், மாளும் மீட்பர் மா அன்பாய்
அருளும் வாக்கு, ‘இன்று என்னுடன்
மெய்யாய் நீ பரதீஸிலிருப்பாய்’
என்பதுவாம் விஸ்வாசத்தின் பலன்.

4. கர்த்தாவே, நானும் சாகும் நேரத்தில்,
‘என்னை நினையும்’ என்று ஜெபித்தே
உம் சிலுவையை, தியானம் செய்கையில்,
உம் ராஜியத்தைக் கண்ணோக்கச் செய்யுமே.

5. ஆனால், என் பாவம் நினையாதேயும்,
உம் ரத்தத்தால் அதைக் கழுவினீர்;
உம் திரு சாவால் பாவமன்னிப்பும்
ரட்சிப்பும் எனக்காய்ச் சம்பாதித்தீர்.

6.’என்னை நினையும்’, ஆனால், உமக்கும்
என்னால் உண்டான துன்பம் கொஞ்சமோ?
சிலுவை, நோவு, ரத்த வேர்வையும்,
சகித்த நீர், இவை மறப்பீரோ?

7.’என்னை நினையும்’, நான் மரிக்கும் நாள்
‘நீயும் என்னோடு தங்குவாய் இன்றே
நற்பரதீஸில்’ என்னும் உம் வாக்கால்
என் ஆவி தேர்ந்து மீளச் செய்யுமே.

Um Rajyam Varunkaalai – உம் ராஜ்யம் வருங் காலை Lyrics in English

1. Um raajyam varung kaalai karththarae atiyaenai ninaiyum enpathaay saakum kallan visvaasa Nnokkaalae vinn maatchi kanndu sonnaan thelivaay. 2. Avar or raajaa entu solluvaar evvataiyaalamum kanntilaarae; tham pelanatta kaiyai neettinaar; mutkireedam netti soolnthu peeritte. 3. Aanaalum, maalum meetpar maa anpaay arulum vaakku, ‘intu ennudan meyyaay nee paratheesiliruppaay’ enpathuvaam visvaasaththin palan. 4. Karththaavae, naanum saakum naeraththil, ‘ennai ninaiyum’ entu jepiththae um siluvaiyai, thiyaanam seykaiyil, um raajiyaththaik kannnnokkach seyyumae. 5. Aanaal, en paavam ninaiyaathaeyum, um raththaththaal athaik kaluvineer; um thiru saavaal paavamannippum ratchippum enakkaaych sampaathiththeer. 6.’ennai ninaiyum’, aanaal, umakkum ennaal unndaana thunpam konjamo? Siluvai, Nnovu, raththa vaervaiyum, sakiththa neer, ivai marappeero? 7.’ennai ninaiyum’, naan marikkum naal ‘neeyum ennodu thanguvaay inte narparatheesil’ ennum um vaakkaal en aavi thaernthu meelach seyyumae.

PowerPoint Presentation Slides for the song Um Rajyam Varunkaalai – உம் ராஜ்யம் வருங் காலை

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Um Rajyam Varunkaalai – உம் ராஜ்யம் வருங் காலை PPT
Um Rajyam Varunkaalai PPT

உம் நினையும்’ சாகும் செய்யுமே ஆனால் ’என்னை ராஜ்யம் வருங் காலை கர்த்தரே அடியேனை நினையும் என்பதாய் கள்ளன் விஸ்வாச நோக்காலே விண் மாட்சி கண்டு தமிழ்