Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Um Paatham Paninthen - உம் பாதம் பணிந்தேன்

உம் பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே
உம்மையன்றி யாரைப்பாடுவேன் – ஏசையா
உந்தன் அன்பு உள்ளம் பொங்குதே

1. பரிசுத்தமே பரவசமே
பரனேசருளே வரம் பொருளே
தேடினதால் கண்டடைந்தேன்
பாடிட பாடல்கள் ஈந்தளித்தீர் — உம்பாதம்

2. புது எண்ணெய்யால் புது பெலத்தால்
புதிய கிருபை புது கவியால்
நிரப்பி நிதம் நடத்துகின்றீர்
நூதன சாலேமில் சேர்த்திடுவீர் — உம்பாதம்

3. நெருக்கத்திலே உம்மை அழைத்தேன்
நெருங்கி உதவி எனக்களித்தீர்
திசைக் கெட்டெங்கும் அலைந்திடாமல்
தீவிரம் வந்தென்னைத் தாங்குகின்றீர் — உம்பாதம்

4. என் முன் செல்லும் உம் சமூகம்
எனக்கு அளிக்கும் இளைப்பாறுதல்
உமது கோலும் உம் தடியும்
உண்மையாய் என்னையும் தேற்றிடுதே — உம்பாதம்

5. கனிசெடி நீர் நிலைத்திருக்கும்
கொடியாய் அடியேன் படர்ந்திலங்க
கினை நறுக்கிக் கிளை பிடுங்கி
கர்த்தரே காத்தென்னை சுத்தம் செய்தீர் — உம்பாதம்

6. என் இதய தெய்வமே நீர்
எனது இறைவா ஆருயிரே
நேசிக்கிறேன் இயேசுவே உம்
நேசமுகம் என்று கண்டிடுவேன் — உம்பாதம்

7. சீருடனே பேருடனே
சிறந்து ஜொலிக்கும் கொடுமுடியில்
சீக்கிரமாய் சேர்த்திடுவீர்
சீயோனை வாஞ்சித்து நாடிடுவேன் — உம்பாதம்

Um Paatham Paninthen உம் பாதம் பணிந்தேன் Lyrics in English

Um paatham panninthaen ennaalum thuthiyae ummaiyanti yaaraippaaduvaen – aesaiyaa unthan anpu ullam ponguthae 1. Parisuththamae paravasamae paranaesarulae varam porulae thaetinathaal kanndatainthaen paatida paadalkal eenthaliththeer — umpaatham 2. Puthu ennnneyyaal puthu pelaththaal puthiya kirupai puthu kaviyaal nirappi nitham nadaththukinteer noothana saalaemil serththiduveer — umpaatham 3. Nerukkaththilae ummai alaiththaen nerungi uthavi enakkaliththeer thisaik kettengum alainthidaamal theeviram vanthennaith thaangukinteer — umpaatham 4. En mun sellum um samookam enakku alikkum ilaippaaraுthal umathu kolum um thatiyum unnmaiyaay ennaiyum thaettiduthae — umpaatham 5. Kaniseti neer nilaiththirukkum kotiyaay atiyaen padarnthilanga kinai naraுkkik kilai pidungi karththarae kaaththennai suththam seytheer — umpaatham 6. En ithaya theyvamae neer enathu iraivaa aaruyirae naesikkiraேn Yesuvae um naesamukam entu kanndiduvaen — umpaatham 7. Seerudanae paerudanae siranthu jolikkum kodumutiyil seekkiramaay serththiduveer seeyonai vaanjiththu naadiduvaen — umpaatham

PowerPoint Presentation Slides for the song Um Paatham Paninthen உம் பாதம் பணிந்தேன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Um Paatham Paninthen – உம் பாதம் பணிந்தேன் PPT
Um Paatham Paninthen PPT

Um Paatham Paninthen உம் பாதம் பணிந்தேன் Song Meaning

I have bowed down to your feet and praise you forever
Whom shall I sing but you - Isaiah
May your love shine in your heart

1. Holiness is ecstasy
Paranesara is a boon
I searched and found it
Songs to Sing Enthhilithir — Umpadham

2. New power with new oil
New grace by a new poet
You fill up and keep calm
You will add to Nutana Salem — Umpadam

3. I have called you near
You came close and helped me
Without going astray
You endure all that is severe — umpadam

4. Your community that goes before me
The relaxation that gives me
Thy rod and thy rod
Truely choose me too — Umpadam

5. Ganisedi is water resistant
I hit it like a flag
Cut the kin and pluck the branch
O Lord, you have cleansed Kathenne — Umbadam

6. You are the goddess of my heart
My God is alive
I love you Jesus
I will condemn Nesamugam — Umpadam

7. Serudane Barudane
In the best shining Kodumudi
Add it soon
I will seek and seek Zion — umpadam

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உம்பாதம் உம் புது சேர்த்திடுவீர் நீர் பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே உம்மையன்றி யாரைப்பாடுவேன் ஏசையா உந்தன் அன்பு உள்ளம் பொங்குதே பரிசுத்தமே பரவசமே தமிழ்