தோத்திரம் பாடியே போற்றிடுவேன்
தேவாதி தேவனை ராஜாதி ராஜனை
வாழ்த்தி வணங்கிடுவேன்
சரணங்கள்
1. அற்புதமான அன்பே — என்னில்
பொற்பரன் பாராட்டும் தூய அன்பே
என்றும் மாறா தேவ அன்பே
என்னுள்ளம் தங்கும் அன்பே — தோத்திரம்
2. ஜோதியாய் வந்த அன்பே — பூவில்
ஜீவன் தந்து என்னை மீட்ட அன்பே
தியாகமான தேவ அன்பே
திவ்விய மதுர அன்பே — தோத்திரம்
3. மாய உலக அன்பை நம்பி
மாண்ட என்னைக் கண்டழைத்த அன்பே
என்னை வென்ற தேவ அன்பே
என்னில் பொங்கும் பேரன்பே — தோத்திரம்
4. ஆதரவான அன்பே — நித்தம்
அன்னை போல் என்னையும் தாங்கும் அன்பே
உன்னதமாம் தேவ அன்பே
உள்ளம் கவரும் அன்பே — தோத்திரம்
5. வாக்கு மாறாத அன்பே — திரு
வார்த்தையுரைத் தென்னைத் தேற்றும் அன்பே
சர்வ வல்ல தேவ அன்பே
சந்ததம் ஓங்கும் அன்பே — தோத்திரம்
Thothiram Paadiye Pottriduven Lyrics in English
Thoththiram paatiyae pottiduvaen thaevaathi thaevanai raajaathi raajanai vaalththi vanangiduvaen saranangal 1. Arputhamaana anpae — ennil porparan paaraattum thooya anpae entum maaraa thaeva anpae ennullam thangum anpae — thoththiram 2. Jothiyaay vantha anpae — poovil jeevan thanthu ennai meetta anpae thiyaakamaana thaeva anpae thivviya mathura anpae — thoththiram 3. Maaya ulaka anpai nampi maannda ennaik kanndalaiththa anpae ennai venta thaeva anpae ennil pongum paeranpae — thoththiram 4. Aatharavaana anpae — niththam annai pol ennaiyum thaangum anpae unnathamaam thaeva anpae ullam kavarum anpae — thoththiram 5. Vaakku maaraatha anpae — thiru vaarththaiyuraith thennaith thaettaுm anpae sarva valla thaeva anpae santhatham ongum anpae — thoththiram
PowerPoint Presentation Slides for the song Thothiram Paadiye Pottriduven
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thothiram Paadiye Pottriduven – தோத்திரம் பாடியே போற்றிடுவேன் PPT
Thothiram Paadiye Pottriduven PPT

